என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "tag 135775"

    கொடைக்கானல் போன்று ஏலகிரியை மேம்படுத்த வேண்டும் என மலைகிராம மக்கள் வலியுறுத்தி உள்ளனர்.
    ஜோலார்பேட்டை:

    ஜோலார்பேட்டை அடுத்த ஏலகிரி மலையில் திருவண்ணாமலை நாடாளுமன்ற உறுப்பினர் அவர்களின் முன்மாதிரி கிராமத் திட்டத்தின் கீழ் ஏலகிரி மலை ஊராட்சி தேர்வு செய்யப்பட்டு பொது மக்கள் கருத்துகேட்பு மற்றும் அனைத்து துறை அலுவலர்கள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

    இந்தக் கூட்டத்திற்கு கலெக்டர் அமர் குஷ்வாஹா தலைமை தாங்கினார். 

    கருத்து கேட்பு கூட்டத்தில் மலைவாழ் மக்கள் கூறுயதாவது:-

    பொன்னேரியில் இருந்து ஏலகிரி மலைக்கு 14 கிலோமீட்டர் உள்ளது. 14 கொண்டை ஊசி வளைவுகளைக் கொண்ட ஏலகிரி மலை 14 சிறிய கிராமங்களை உள்ளடக்கியுள்ளது சிறப்புக்குரியது. 

    இந்த மலை சாலை ஆனது குறுகிய சாலையாக உள்ளதால் 3 மீட்டர் சாலையை அகலப்படுத்த வேண்டும். ஏலகிரி மலைக்கு வரும் பஸ்கள் தரமானதாக இயக்க வேண்டும். 

    அனைத்துக் காலங்களிலும் நிரந்தர குடிநீர் வசதி ஏற்படுத்த வேண்டும். ஏலகிரி மலையில் உள்ள அனைத்து ஏரிகளையும் தூர்வார வேண்டும். ஏலகிரி மலை சுற்றுலா தலத்தை நவீனப்படுத்தி ஊட்டி, கொடைக்கானல் போன்று சுற்றுலா தளத்தை மேம்படுத்த வேண்டும். 

    மலைவாழ் மக்களுக்கு சாதி சான்றிதழ் பெற விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்தனர். மேலும் இது சார்ந்து துறை அதிகாரிகளுடன் ஆலோசனை செய்து நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர். 
    • இந்த கிராமங்களில் காட்டு யானைகள் நுழைவதை தடுக்க வருவதை தடுக்க வனத் துறையினா் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை மனு அளித்திருந்தனா்.

    ஊட்டி:

    நீலகிரி மாவட்டம், முதுமலை புலிகள் காப்பக வன எல்லையோரம் உள்ள போஸ்பாறா, சீனக்கொல்லி முதல் தொரப்பள்ளி வரையில் உள்ள கிராமங்களில் இரவு நேரங்களில் காட்டு யானைகள் நுழைந்து பல்வேறு சேதங்களை ஏற்படுத்தி வருகின்றன.

    இந்நிலையில் இந்த கிராமங்களில் காட்டு யானைகள் நுழைவதை தடுக்க வருவதை தடுக்க வனத் துறையினா் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை மனு அளித்திருந்தனா்.

    இதையடுத்து வன எல்லையோர கிராம பகுதியில் உள்ள அகழிகளை ஆழப்படுத்தியதுடன் யானைகள் நுழையும் குறிப்பிட்ட இடங்களில் மரக்கட்டைகளை வைத்து தீ மூட்டி யானைகள் நுழைவதை தடுக்கும் பணியை வனத் துறையினா் துவங்கி உள்ளனா். ஊருக்கு மிக அருகாமையில் கும்கி யானைகளையும் பாதுகாப்பு பணிக்கு நிறுத்தி வைத்துள்ளனா்.

    கால்நடை மருத்துவர் காலி இடங்களை உடனடியாக நிரப்ப கோரியும் பால் உற்பத்தியாளர்கள் பாலை தரையில் கொட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    ஊட்டி;

    நீலகிரி மாவட்டம் ஊட்டி காந்தல் மற்றும் காக்கா தோப்பு பகுதியில் பால் கொள்முதல் விலையை உயர்த்த வேண்டும். கால்நடை மருத்துவர் காலி இடங்களை உடனடியாக நிரப்ப கோரியும் பால் உற்பத்தியாளர்கள் பாலை தரையில் கொட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    அப்போது போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கூறுகையில், ஊட்டியில் கால்நடை மருத்துவமனை உள்ளது. ஆனால் இங்கு பல மாதங்களாகவே பணியில் கால்நடை மருத்துவர்கள் கிடையாது. மேலும் ஆஸ்பத்திரியில் உரிய மருந்துகளும் இருப்பு வைப்பதில்லை. இதனால் கால்நடைகளை மருத்துவமனைக்கு அழைத்து ெசன்று விட்டு திரும்பும் சூழ்நிலை உள்ளது. மேலும் இதனால் கால்நடைகளை இழக்கும் சூழலும் உள்ளது. இதை உடனடியாக போக்கவும் பாலுக்கு உரிய விலை கிடைக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

    காட்டு யானைகள் குட்டிகளுடன் புகுந்ததால் பச்சை தேயிலை பறிக்கும் பணியில் ஈடுபட்ட தொழிலாளர்கள், யானைகளை பார்த்து அலறியடித்து ஓட்டம் பிடித்தனர்.

    ஊட்டி;

    நீலகிரி பந்தலூர், பந்தலூர் அருகே கொளப்பள்ளி அரசு தேயிலை தோட்டம் ரேஞ்ச் எண்.2 பாலவாடி குடியிருப்பு பகுதிகளில் தொழிலாளர்கள் வசித்து வருகின்றனர். இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு காட்டு யானைகள் குடியிருப்புகளை முற்றுகையிட்டது. இதனால் தொழிலாளர்கள் அச்சம் அடைந்தனர். நேற்று அதே பகுதியில் உள்ள தேயிலை தோட்டத்தில் காட்டு யானைகள் குட்டிகளுடன் புகுந்தது.

    இதனால் பச்சை தேயிலை பறிக்கும் பணியில் ஈடுபட்ட தொழிலாளர்கள், யானைகளை பார்த்து அலறியடித்து ஓட்டம் பிடித்தனர். அப்போது ஒரு யானை மழவன் சேரம்பாடியில் இருந்து புஞ்சைகொல்லி செல்லும் சாலையில் சென்றது. இதனால் தொழிலாளர்கள், பொதுமக்கள் அங்கிருந்து தப்பி ஓடினர். தகவல் அறிந்த சேரம்பாடி உதவி வனபாதுகாவலர் ஷர்மிலி மற்றும் வனத்துறையினர் காட்டு யானைகள் நடமாட்டத்தை கண்காணித்து வருகின்றனர்.

    • தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது.
    • பரவலாக மழை பெய்தது.

    ஊட்டி,

    கூடலூர் பகுதியில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வந்தது. தொடர்ந்து லேசான வெயிலும் தென்பட்டது. இந்தநிலையில் நேற்று காலை முதல் வானம் மேகமூட்டத்துடனும், அதன் பின்னர் மதியம் வெயில் காணப்பட்டது. இதையடுத்து மாலை கூடலூர் சுற்றுவட்டார பகுதிகளான தேவர்சோலை, ஸ்ரீமதுரை ஆகிய இடங்களில் பலத்த மழை பெய்தது. இதன் காரணமாக குற்றி முற்றி உள்பட பல ஆறுகளில் தண்ணீர் வரத்து அதிகரித்தது. தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. இதேபோல் கூடலூர் நகர பகுதியிலும் பரவலாக மழை பெய்தது. இதனால் கடும் குளிர் நிலவியது.

    • 50-க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.
    • இயற்கை வேளாண்மை பண்ணையில் நடைபெற்றது.

    அரவேணு

    நீலகிரி மாவட்டம் கோத்தகிரி தோட்டக்கலை மலை பயிர்கள் துறை அட்மா திட்டத்தின் கீழ் உயிரியல் முறையில் பூச்சி மற்றும் நோய் மேலாண்மை குறித்து ஒருநாள் பயிற்சி கருத்தரங்கு அளியூர் கிராமத்தில் சிக்மா இயற்கை வேளாண்மை பண்ணையில் நடைபெற்றது.நீலகிரி மாவட்ட தோட்டக்கலை இணை இயக்குநர் ஹீலாமோரி தலைமை தாங்கினார். நம்மாழ்வார் இயற்கை வேளாண்மை பயிற்சி நிலையத்தில் அறங்காவலர் குமார், தொழில்நுட்ப வல்லுநர் மகேஷ் மற்றும் ரமேஷ் சிறப்புரையாற்றினர். தோட்டக்கலை இயக்குனர் ஐஸ்வர்யா இயற்கை வேளாண்மை குறித்து பயிற்சி அளித்தார். குமரகுரு இயற்கை வேளாண்மை குறித்தான இடர்பாடுகள் குறித்து எடுத்துரைத்தார். தோட்டக்கலை அலுவலர் ரமேஷ் வரவேற்றார். இதில் 50-க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டு பயன்பெற்றனர். 

    • யானை தும்பிக்கையால் தாக்கியது.
    • ஊட்டி அரசு ஆஸ்பத்திரியில் அனு மதிக்கப்பட்டார்.

    ஊட்டி,

    நீலகிரி மாவட்டத்தில் யானைகள் மனிதர்களை தாக்கும் சம்பவங்கள் அதிகரி த்துள்ளது பொதுமக்க ளிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

    2 நாட்களுக்கு முன்பு வாழைத்தோட்டம் பகுதியைச் சேர்ந்த ஒருவர் யானை தாக்கி பலியானார்கள். இந்தநிலையில் இன்று காலை ஓவேலி நம்பர் 4 பகுதியில் யானை தாக்கியதில் ஒரு பெண் படுகாயம் அடைந்துள்ளார்.

    அந்த பகுதியைச் சேர்ந்தவர் தங்கராஜ் என்பவரின் மனைவி மகாலட்சுமி (வயது 55). இன்று அதிகாலை இவர் வீட்டில் தூங்கிக் கொண்டு இருந்தார். அப்போது காட்டு யானை அவரது வீட்டு அருகே வந்தது.

    அந்த யானை வீட்டை உடைத்து சேதப்படுத்தியது. இதனால் மகாலட்சுமி அதிர்ச்சியுடன் விழித்தெ ழுந்தார். தப்பி ஓட முயன்ற அவரை யானை தும்பிக்கையால் தாக்கியது. இதில் மகாலட்சுமி பலத்த காயம் அடைந்தார். பின்னர் யானை அங்கிருந்து காட்டுக்குள் சென்று மறைந்தது. அக்கம்பக்கத்தினர் மகாலட்சுமியின் வீட்டுக்கு சென்று அவரை மீட்டனர். காயம் அடைந்த மகாலட்சுமி ஊட்டி அரசு ஆஸ்பத்திரியில் அனு மதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. இது குறித்து வனத்துறை ஊழி யர்கள் நேரில் சென்று விசா ரணை மேற்கொண்டனர்.

    • துப்புரவு பணிகள் உள்ளிட்ட அடிப்படை பணிகள் போன்றவற்றை ஊட்டி ஊராட்சி ஒன்றிய தலைவர் மாயன் ஆய்வு செய்து வருகிறார்.
    • தும்மனட்டி கிராம மக்களிடம் குறைகளையும், அவர்களின் அடிப்படை தேவைகளையும் கேட்டறிந்தார்.

    ஊட்டி,

    ஊட்டி ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் வாழும் மக்களின் வாழ்க்கை தரத்தை மேம்படுத்தும் பொருட்டு அவர்களுக்கு பாதுகாக்கப்பட்ட குடிநீர், தெருவிளக்கு, தரமான சாலை அமைத்தல் மற்றும் பராமரித்தல், துப்புரவு பணிகள் உள்ளிட்ட அடிப்படை பணிகள் போன்றவற்றை ஊட்டி ஊராட்சி ஒன்றிய தலைவர் மாயன் ஆய்வு செய்து வருகிறார்.

    தமிழக முதல்வரின் ஆணைப்படியும் மாவட்ட செயலாளர் அறிவுரைபடியும் அனைத்து கிராம பகுதிகளிலும் ஊட்டி ஊராட்சி ஒன்றிய தலைவர் மாயன் ஆயவுகளை மேற்கொண்டு மக்களின் அடிப்படை தேவைகளை குறைகளை கேட்டு அவைகளை போக்க நடவடிக்கை எடுத்து வருகிறார்.

    அதன் ஒரு கட்டமாக தும்மனட்டி கிராம மக்களிடம் குறைகளையும், அவர்களின் அடிப்படை தேவைகளையும் கேட்டறிந்தார். அடிப்படை தேவைகள் அனைத்தும் செய்து தரப்படும் என உறுதியளித்தார். அவருடன் ஊர் தலைவர்கள் முக்கிய பிரமுகர்கள் உடன் இருந்தனர்.

    • கோத்தகிரியில் சமூக நல்லிணக்க பேரணி நடத்தப்பட்டது.
    • மனித சங்கிலியாக அணிவகுத்து நின்று, முழக்கம் எழுப்ப பேரணி தொடங்கியது.

    ஊட்டி,

    நீலகிரி மாவட்டம் கோத்தகிரியில் சமூக நல்லிணக்க பேரணி நடத்தப்பட்டது. இதில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாவட்ட பொருளாளர் மன்னரசன், மக்கள் அதிகாரம் அமைப்பின் மாவட்ட செயலாளர் ஆனந்தராஜ் உரையாற்றினார். இதில் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் ராமகிருஷ்ணன், இந்திய பொதுவுடமைக் கட்சி மார்க்சிஸ்ட் கட்சியின் மணி, பெண்கள் இணைப்பு குழுவின் சாரா, உதயநிதி ஸ்டாலின் நற்பணி மன்ற மணிகண்டன் உள்பட பலர் பங்கேற்று பேசினர்.

    தொடர்ந்து மனித சங்கிலியாக அணிவகுத்து நின்று, முழக்கம் எழுப்ப பேரணி தொடங்கியது. பேரணி கோத்தகிரி முக்கிய சாலைகள் வழியாக பஸ் நிலையத்திலிருந்து ஜான்சன் ஸ்கொயர் காமராஜர் சிலை வரையிலும் நடைபெற்றது.

    இதில் விடுதலை சிறுத்தைகள் கட்சி, இந்திய பொதுவுடமைக் கட்சி மார்க்சிஸ்ட், இந்திய பொதுவுடமைக் கட்சி, இந்திய தேசிய காங்கிரஸ், மக்கள் அதிகாரம், இந்திய மாணவர் கூட்டமைப்பு, இந்தியா ஜனநாயக வாலிபர்கள் சங்கம், பெண்கள் இணைப்பு குழு, திராவிட தமிழர் கட்சியை சேர்ந்த 300-க்கு மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

    • வீடியோவில், குடியிருப்பு பகுதிக்குள் புகும் சிறுத்தை, வீட்டின் முன் இருந்த நாயை வேட்டையாடச் செல்கிறது.
    • நாயை வேட்டையாடியதால் சிறுத்தை நடமாட்டம் உறுதியாகியுள்ளது.

    ஊட்டி,

    நீலகிரி மாவட்டத்தில் யானை, புலி, சிறுத்தை, கரடி, செந்நாய், காட்டெருமை உள்ளிட்ட பல்வேறு வனவிலங்குகள் வசித்து வருகின்றன.

    வன பகுதியில் தீவன பற்றாக்குறையாலும், தண்ணீா் தேடியும் குடியிருப்பு பகுதிக்குள் வன விலங்குகள் நுழைவது வாடிக்கையாகி விட்டது. இதனால் சில நேரங்களில் வனவிலங்கு-மனித மோதல் ஏற்பட்டு உயிரிழப்பும் ஏற்படுகிறது.

    இந்நிலையில் ஊட்டியில் உள்ள பாரஸ்ட் கேட் பகுதியில் சிறுத்தை ஒன்று அதிகாலை நேரத்தில் சுற்றி திரியும் விடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. அந்த விடியோவில், குடியிருப்பு பகுதிக்குள் புகும் சிறுத்தை, வீட்டின் முன் இருந்த நாயை வேட்டையாடச் செல்கிறது. சப்தம் கேட்டு மற்ற நாய்கள் அங்கு வந்ததால் பாதியில் அந்த சிறுத்தை ஓட்டம் பிடிக்கிறது.

    நாயை வேட்டையாடியதால் சிறுத்தை நடமாட்டம் உறுதியாகியுள்ளது. இதனால் அந்த பகுதி பொதுமக்கள் பீதியடைந்துள்ளனா். எனவே சிறுத்தையை கூண்டு வைத்து பிடிக்க வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனா்

    • உதகை ஜெ.எஸ்.பார்மசி கல்லூரியில் விழிப்புணர்வு நிகழ்சி நடைபெற்றது.
    • பேரணியில் 100க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.

    ஊட்டி

    ஊட்டி மத்திய ரோட்டரி கிளப், நீலகிரி மேற்கு ரோட்டரி கிளப் சார்பில் சர்வதேச பெண் குழந்தைகள் தின விழிப்புணர்வு பேரணி ஊட்டி மத்திய ரோட்டரிகிளப் தலைவர் ஷெரிப் முகமது, செயலாளர் கவுரி பாபு, நீலகிரி மேற்கு ரோட்டரி கிளப் தலைவர் நிர்மலா சொக்கன், செயலாளர் ஆனந்தி, சந்திரன் ஆகியோர் ஏற்பாட்டில் உதகை ஜெ.எஸ்.பார்மசி கல்லூரியில் விழிப்புணர்வு நிகழ்சி நடைபெற்றது.

    இதில் நுகர்வோர் பிரச்சனை தீர்வு கமிசன் தலைவர் டி.சித்ரா, உளவியலாளர் ஆலோசனை குழு உறுப்பினர் பி.சுசிலா சுரேஷ்,உளவியல் ஆலோசனையாளர் ஹானா டிக்சன் ஆகியோர் சிறப்புரையாற்றினர். முனைவர் பொன்னுசங்கர், முனைவர் வடிவேலன், முனைவர் பாபு ஆகியோர் நிகழ்வுகளை ஒருங்கினைத்தனர்.

    இந்த பேரணியில் 100க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.

    • ஊட்டி ஊராட்சி ஒன்றியத்தில் 439 வீடுகள் கட்டும் பணிகள் எடுக்கப்பட்டு 439 வீடுகளும் கட்டி முடிக்கப்பட்டுள்ளது.
    • 2020-2021-ம் ஆண்டில் பசுைம வீடுகள் கட்டும் திட்டத்தின் கீழ் 1,416 வீடுகள் கட்டும் பணிகள் ேமற்கொள்ளப்பட உள்ளது

    ஊட்டி,

    நீலகிரி மாவட்டம் ஊட்டி ஊராட்சி ஒன்றியம் உல்லத்தி ஊராட்சி பன்னிமாரா பகுதியில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை சார்பில் பிரதான் மந்திரி ஆவாஷ் யோஜனா அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் ஒரு பயனாளிக்கு தலா ரூ.2.40 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டு வரும் வீடுகளையும், அண்ணா நகர் பகுதியில் பசுமை வீடுகள் கட்டும் திட்டத்தின் கீழ் பழங்குடியினர்களுக்கு தலா ரூ.3 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டு வரும் வீடுகளையும் கலெக்டர் அம்ரித் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

    பின்னர் அவர் கூறியதாவது:-

    நீலகிரி மாவட்டத்தில் ஊரக வளர்ச்சி முகமையின் சார்பில் ஊட்டி, குன்னூர், கோத்தகிரி மற்றும் கூடலூர் ஆகிய 4 ஊராட்சி ஒன்றியங்களில் உள்ள 35 ஊராட்சிகளில் மக்களின் தேவைகளான குடிநீர், மின்சாரம், சாலை, கழிவறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளை தொடர்ந்து கண்காணித்து அதனை விரைவாகவும், தரமாகவும் முடித்திடவும், நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள பணிகளை விரைவில் தொடங்கி தரமான முறையில் முடித்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    நீலகிரி மாவட்டத்தில் பிரதான் மந்திரி ஆவாஷ் யோஜனா திட்டத்தின் கீழ் 2019-2020ம் ஆண்டில் 917 வீடுகள் கட்டும் பணிகள் எடுக்கப்பட்டு 903 பணிகள் முடிக்கப்பட்டுள்ளது.ஊட்டி ஊராட்சி ஒன்றியத்தில் 439 வீடுகள் கட்டும் பணிகள் எடுக்கப்பட்டு 439 வீடுகளும் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. அதேபோல 2021-2022 ம் ஆண்டில் இத்திட்டத்தின் கீழ் 1,507 வீடுகள் கட்டும் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது. இதில் ஊட்டி ஊராட்சி ஒன்றியத்தில் 313 வீடுகள் கட்டப்பட உள்ளது. இதில் 109 வீடுகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளது.

    மேலும் 2020-2021-ம் ஆண்டில் பசுைம வீடுகள் கட்டும் திட்டத்தின் கீழ் 1,416 வீடுகள் கட்டும் பணிகள் ேமற்கொள்ளப்பட உள்ளது. இதில் ஊட்டி ஊராட்சி ஒன்றியத்தில் 196 வீடுகள் கட்டும் பணி தொடங்கப்பட்டு 97 வீடுகள் முடிக்கப்பட்டுள்து. மீதமுள்ள வீடுகள் பல்வேறு நிலையில் கட்டுமான பணிகள் நடந்து வருகிறது.

    இதேபோல் மாவ ட்டத்தில் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளை தரமாக மேற்கொண்டு, பொது மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரவும், வீடுகள் கட்டி முடிந்தவுடன் சம்பந்தப்பட்ட பயனாளி களிடம் ஒப்படைக்குமாறு அலுவலர்களுக்கு அறிவுறு த்தப்பட்டுள்ளது.

    இந்த ஆய்வின் போது, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை செயற்பொறியாளர் சுஜாதா, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சிவக்குமார், விஜயா, உல்லத்தி ஊராட்சி தலைவர் சந்தோஷ்குமார் உள்பட பலர் உள்ளனர்.

    ×