என் மலர்
நீங்கள் தேடியது "women's toilets"
- பெண்கள் காலிக்குடங்களுடன் இன்று காலை அந்தியூர் பேரூராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.
- இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.
அந்தியூர்:
ஈரோடு மாவட்டம் அந்தியூர் பேரூராட்சி 1-வது வார்டுக்கு 8 நாட்களுக்கு ஒரு முறை குடிநீர் வழங்கப்பட்டு வந்தது.
இந்நிலையில் தங்களுக்கு 5 நாட்களுக்கு ஒரு முறை குடிநீர் வழங்க கோரி வார்டு கவுன்சிலர் சரஸ்வதி விசுவநாதன் தலைமையில் பெண்கள் காலிக்குடங்க ளுடன் இன்று காலை அந்தியூர் பேரூராட்சி அலுவலகத்தை முற்று கையிட்டனர்.
இது குறித்து தகவலறித்த அந்தியூர் பேரூராட்சி செயல் அலுவலர் செல்வகுமார், பேரூராட்சி தலைவர் பாண்டியம்மாள் மற்றும் அந்தியூர் போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ரமேஷ் ஆகியோர் முற்றுகை யிட்ட பெண்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர்.
இதனையடுத்து 5 நாட்களுக்கு ஒரு முறை குடிநீர் தட்டுப்பாடுயின்றி வழங்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என கூறியதையடுத்து பெண்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.
- நெசவு தொழிலை பிரதானமாக செய்து வரும் இப்பகுதி மக்கள் பெரும்பாலானோர் கூலித் தொழிலாளிகளாக உள்ளனர்.
- இப்பகுதியில் பெண்களுக்கு கழிப்பிடம் இல்லாததால் திறந்த வெளியை பயன்படுத்தி வருகின்றனர்.
ஆண்டிபட்டி:
ஆண்டிபட்டி அருகே டி.சுப்புலாபுரம் ஊராட்சியில் சுமார் 7,000க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். நெசவு தொழிலை பிரதானமாக செய்து வரும் இப்பகுதி மக்கள் பெரும்பாலானோர் கூலித் தொழிலாளிகளாக உள்ளனர்.
இப்பகுதியில் பெண்களுக்கு கழிப்பிடம் இல்லாததால் திறந்த வெளியை பயன்படுத்தி வருகின்றனர். இதனால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருகிறது.
மலை அடிவாரத்தில் கழிப்பறை அமைக்க ப்பட்டது. ஆனால் இரவு நேரத்தில் அங்கு செல்ல பெண்கள் அச்சமடைந்து வருகின்ற னர். எனவே ஊருக்குள் நவீன கழிப்பறை கட்டித் தர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத் துள்ளனர்.






