சங்கரன்கோவில் நகராட்சியில் தூய்மை பணியாளர்கள் குப்பைகளை பிரித்து வாங்க வேண்டும்- சேர்மன் உமா மகேஸ்வரி அறிவுறுத்தல்

கலந்தாய்வு கூட்டம் சேர்மன் உமா மகேஸ்வரி தலைமையில் நடைபெற்றது. வீடுகள், கடைகளில் மக்கும் குப்பை, மக்காத குப்பை என தனியாக பிரித்து வாங்கும் படியும் அறிவுறுத்தப்பட்டது.
கலந்தாய்வு கூட்டம்  நடைபெற்ற போது எடுத்தபடம். 
கலந்தாய்வு கூட்டம்  நடைபெற்ற போது எடுத்தபடம். 
Published on

சங்கரன்கோவில்:

சங்கரன்கோவில் நகராட்சி அலுவலகத்தில் சேர்மன் உமா மகேஸ்வரி தலைமையில் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. இதில் நகராட்சி பகுதிகளில் வீடுகள் மற்றும் கடைகளில் இருந்து வாங்கும் குப்பைகளை மக்கும் குப்பை, மக்காத குப்பை என தனியாக பிரித்து வாங்கும் படியும், வார்டுகளில் வாறுகால் சுத்தம் செய்யும்படியும் சேர்மன் உமா மகேஸ்வரி, தூய்மை பணியாளர்களுக்கு அறிவுறுத்தினார்.

இதில் நகராட்சி கமிஷனர் சபாநாயகம், நகராட்சி சுகாதார அலுவலர் பாலச்சந்தர், சுகாதார ஆய்வாளர்கள் வெங்கட்ராமன், மாரிசாமி மற்றும் தூய்மை பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com