search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பாளை எம்.கே.பி. நகரில் ரூ.48 கோடியில் 408 வீடுகளுடன் அடுக்குமாடி குடியிருப்பு அமைகிறது - மண் பரிசோதனை பணிகள் தொடங்கியது
    X

    மண் பரிசோதனை நடந்த போது எடுத்த படம்.

    பாளை எம்.கே.பி. நகரில் ரூ.48 கோடியில் 408 வீடுகளுடன் அடுக்குமாடி குடியிருப்பு அமைகிறது - மண் பரிசோதனை பணிகள் தொடங்கியது

    • பாளை மனக் காவலம் பிள்ளை நகரில் உள்ள அம்பேத்கர் காலனியில் குடிசை மாற்று வாரியத்துக்கு சொந்தமான குடியிருப்பில் சுமார் 366 குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.
    • பொதுமக்கள் தற்காலிகமாக குடியிருப்பு அமைத்து தந்தால் மட்டுமே தற்போது வசிக்கும் இடத்திலிருந்து வெளியேறுவதாக தெரிவித்தனர்.

    நெல்லை:

    பாளை மனக் காவலம் பிள்ளை நகரில் உள்ள அம்பேத்கர் காலனியில் குடிசை மாற்று வாரியத்துக்கு சொந்தமான குடியிருப்பு உள்ளது.

    இங்கு சுமார் 366 குடும்பங்கள் வசித்து வருகின்றனர். பழமையான கட்டிடம் என்பதால் அவ்வப்போது கான்கிரீட் பூச்சுகள் பெயர்ந்து விழுந்த வண்ணம் இருந்தது.

    அந்த குடியிருப்பை முற்றிலுமாக அகற்றிவிட்டு புதிய குடியிருப்பு கட்டித்தர வேண்டும் என்று அங்குள்ள பொதுமக்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர். இதையடுத்து அந்த குடியிருப்பை இடித்து விட்டு புதிதாக கட்டிடம் கட்டுவதற்கு அரசாணை வெளியிடப்பட்டது.

    அதன்படி ரூ.48 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு புதிய கட்டிடம் கட்டுவதற்கான பணிகள் தொடங்கப்பட உள்ளது. இதைத்தொடர்ந்து அங்குள்ள பொதுமக்கள் தற்காலிகமாக வேறு இடத்திற்கு செல்லுமாறும் அதற்காக ஒரு குடும்பத்திற்கு ஆண்டுக்கு ரூ.24 ஆயிரம் வாடகை தொகை தருவதாகவும் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

    ஆனால் அங்கிருந்த பொதுமக்கள் தற்காலிகமாக குடியிருப்பு அமைத்து தந்தால் மட்டுமே தற்போது வசிக்கும் இடத்திலிருந்து வெளியேறு வதாக தெரிவித்தனர். அவர்களிடம் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி சமூக முடிவு எடுக்கப்பட்டது. இதையடுத்து இன்று காலை அந்த குடியிருப்பு பகுதியில் மண் பரிசோதனை செய்வதற்காக அதிகாரிகள் தலைமையில் பணியா ளர்கள் ஈடுபட்டனர்.

    அப்போது அங்கிருந்த சிலர் எதிர்ப்பு தெரிவித்ததால் மாநகர போலீஸ் துணை கமிஷனர்கள் சீனிவாசன் மற்றும் சரவணகுமார் ஆகியோர் அங்கு விரைந்து சென்று பேச்சுவார்த்தை நடத்தினர். தொடர்ந்து ஒரு வாரத்துக்குள் அங்கு வசிக்கும் பொதுமக்கள் அனைவரும் வீட்டை காலி செய்து கொடுக்க வேண்டும் எனவும், அதன் பின்னர் விரைவாக பணிகள் தொடங்கப்பட்டு அடுக்குமாடி குடியிருப்பு கட்டி தரப்படும் என்று உறுதி அளிக்கப்பட்டது.

    408 வீடுகள்

    தற்போது கட்டப்பட உள்ள புதிய அடுக்குமாடி குடியிருப்பில் 408 வீடுகள் கட்டப்பட உள்ளது. இது தவிர 60 குடும்பங்கள் அந்த பகுதியில் குடிசை அமைத்து தங்கி இருப்பதாகவும், மாநகராட்சி குடியிருப்பு கட்டிடத்தில் வாடகைக்கு 30 குடும்பங்கள் உள்ளதாகவும் அவர்களுக்கும் குடியிருப்பில் வீடுகள் கட்டித் தர வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    மேலும் தங்களது வீடுகள் அமைய உள்ள வரைபடத்தை காட்டுமாறு அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    Next Story
    ×