search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    2019-ம் ஆண்டு ரூ.25 கோடி ஒதுக்கீடு: முடங்கி கிடக்கும் சிட்லபாக்கம் ஏரி சீரமைப்பு பணி
    X

    2019-ம் ஆண்டு ரூ.25 கோடி ஒதுக்கீடு: முடங்கி கிடக்கும் சிட்லபாக்கம் ஏரி சீரமைப்பு பணி

    • பிரச்சினைக்கு தீர்வு காணும் வகையில் ஏரியை தூர்வாரி சீரமைக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர்.
    • சுற்றுச்சூழல் துறை சார்பில் ரூ.25 கோடி நிதி ஒதுக்கப் பட்டு கடந்த 2019-ம் ஆண்டு ஏரி சீரமைப்பு பணிகள் தொடங்கின.

    தாம்பரம்:

    தாம்பரத்தை அடுத்த சிட்லபாக்கத்தில், பொதுப்பணித் துறைக்கு சொந்தமான ஏரி உள்ளது. 102 ஏக்கர் பரப்பளவு கொண்ட இந்த ஏரி ஆக்கிரமிப்புகளால் சுருங்கிவிட்டது.

    மற்றொருபுறம் சுற்றி உள்ள பகுதியில் இருந்து வெளியேறும் கழிவு நீர் ஏரியில் கலந்தது. இந்த பிரச்சினைக்கு தீர்வு காணும் வகையில் ஏரியை தூர்வாரி சீரமைக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர்.

    இதைத்தொடர்ந்து சுற்றுச்சூழல் துறை சார்பில் ரூ.25 கோடி நிதி ஒதுக்கப் பட்டு கடந்த 2019-ம் ஆண்டு ஏரி சீரமைப்பு பணிகள் தொடங்கின. ஏரியை தூர்வாரி ஆழப்படுத்தும் பணி, கரைகள் கான்கிரீட் கற்களால் பலப்படுத்தப்பட்டது. ஒரு பகுதியில் நடைபாதையும் அமைக்கப்பட்டது.

    இதில் 50 சதவீத பணிகள் நடந்து முடிந்த நிலையில் தற்போது பணிகள் நடை பெறாமல் முடங்கி கிடக்கின்றன. இதனால் சிட்லபாக்கம் ஏரி ஆக்கிரமிப்புகளாலும், கழிவு நீராலும் மீண்டும் மாசு அடைய தொடங்கியது.

    இதுபற்றி ஏராளமான புகார்கள் வந்ததை தொடர்ந்து கடந்த பிப்ரவரி மாதம், நீர்வளத்துறை கூடுதல் தலைமை செயலர் சந்தீப் சக்சேனா, சுற்றுச்சூ ழல், காலநிலை மற்றும் வனத்துறை கூடுதல் தலைமை செயலர் சுப்ரியா சாஹூ மற்றும் அதிகாரிகள் சிட்லபாக்கம் ஏரியில் ஆய்வு செய்தனர்.

    இதன்பின்னர் கிடப்பில் போடப்பட்டிருந்த பணிகள் மீண்டும் தொடங்கியது. ஆனால் வடக்கு பகுதியில், கரையை பலப்படுத்துதல், நடைபாதை அமைத்தல் பணிகள் மந்தமாக நடந்தன. இதற்கிடையே ஏரி சீரமைப்பு பணி தற்போது மீண்டும் முடங்கி உள்ளது.

    எனவே சிட்லபாக்கம் ஏரியில் கிடப்பில் போடப் பட்டு உள்ள சீரமைப்பு பணியை விரைந்து முடிக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

    இதற்கிடையே சிட்ல பாக்கம் ஏரியில் நடைபெற்ற சீரமைப்பு பணிகளை முன்னாள் எம்.பி. யும் செங்கல்பட்டு மேற்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளருமான சிட்லபாக்கம் ராஜேந்திரன் திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது அவர் கூறும்போது, அ.தி.மு.க. ஆட்சியில் சிட்லபாக்கம் ஏரியை மேம்ப டுத்த ரூ.25 கோடி ஒதுக்கப்பட்டது.

    ஏரியில் பணிகள் தொடங்கப்பட்டு இரண்டு ஆண்டுகளாக வேகமாக நடைபெற்றது. ஆனால் இப்போது இந்தப் பணிகள் எல்லாம் நிறுத்தப்பட்டு உள்ளன. ஏரியை சீரமைக்கும் பணியை தொடங்ககோரி பல்வேaறு போராட்டங்கள் நடை பெற்றது. மனித சங்கிலி போராட்டமும் நடந்தது. இந்த பணியை பருவமழைக்கு முன்னர் விரைந்து முடிக்க வேண்டும். இல்லையெனில் மிகப்பெரிய உண்ணாவிரத போராட்டம் நடத்தப்படும் என்றார்.

    இது தொடர்பாக சிட்லபாக்கம் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கூறியதாவது:-

    சிட்லபாக்கம் ஏரியில் சீரமைப்பு பணியை மீண்டும் கிடப்பில் போடாமல் தொடர்ச்சியாக மேற்கொண்டு, முழுமையாக முடிக்க வேண்டும். மேலும், பச்சை மலை பகுதியில் இருந்து வெளியேறும் மழைநீர், சிட்லப்பாக்கம் ஏரிக்கு வந்து சேர வழி ஏற்படுத்த வேண்டும். இத னால் ஏரியில் கூடுதல் தண்ணீர் சேரும். இப்பகு தியில் நிலத்தடி நீர்மட்டம் அதிகரிக்கும். மேலும் கழிவு நீர், ஏரியில் கலக்காமல் இருக்க, பாதாள சாக்கடையுடன் இணைக்க வேண்டும்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    Next Story
    ×