என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நெல்லை ராமையன்பட்டியில் பஞ்சாயத்து தலைவரை கண்டித்து   தரையில் படுத்து உருண்ட உறுப்பினர்
    X

    பஞ்சாயத்து அலுவலகம் முன்பு தரையில் படுத்து உருண்ட உறுப்பினர் மாரியப்ப பாண்டியன்.

    நெல்லை ராமையன்பட்டியில் பஞ்சாயத்து தலைவரை கண்டித்து தரையில் படுத்து உருண்ட உறுப்பினர்

    • ராமையன்பட்டி பஞ்சாயத்தின் தலைவராக டேவிட் என்பவரும், துணைத் தலைவராக செல்வகுமார் என்பவரும் உள்ளனர்.
    • துணைத்தலைவர் மற்றும் மாரியப்பபாண்டியன் ஆகியோர் வெளிநடப்பு செய்தனர்.

    நெல்லை:

    நெல்லை தச்சநல்லூர் ராமையன்பட்டி பஞ்சாயத்து 12 வார்டுகளை கொண்டது. இந்த பஞ்சாயத்தின் தலைவராக டேவிட் என்பவரும், துணைத் தலைவராக செல்வகுமார் என்பவரும் உள்ளனர்.

    கூட்டம்

    இந்நிலையில் இன்று பஞ்சாயத்து அலுவலக கூட்ட அரங்கில் தலைவர் டேவிட் தலைமையில் கூட்டம் நடந்தது. இதில் துணைத் தலைவர் செல்வக்குமார், 4-வது வார்டு உறுப்பினர் மாரியப்பபாண்டியன் உள்பட 5 உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

    அப்போது பஞ்சாயத்தில் அண்ணா மறுமலர்ச்சி திட்டம், குடிநீர் பொருத்துதல் மற்றும் வார்டுகளில் ஜே.சி.பி. எந்திரம் வைத்து சீரமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

    அதற்கான செலவுகளை கூட்டத்தில் தீர்மானம் வைக்காமல் தலைவர் தன்னிச்சையாக நிறைவேற்றி வருதாக துணைத்தலைவர் செல்வ க்குமார், உறுப்பினர் மாரியப்ப பாண்டியன் ஆகியோர் புகார் தெரிவித்தனர். இதனால் கூட்டத்தில் வாக்குவாதம் ஏற்பட்டது.

    வெளிநடப்பு

    இதனைத் தொடர்ந்து துணைத்தலைவர் மற்றும் மாரியப்பபாண்டியன் ஆகியோர் வெளிநடப்பு செய்தனர். இதன் பின்னர் அவர்கள் நிருபர்களிடம் கூறுகையில், பஞ்சாயத்து தீர்மானத்தில் பணிகள் குறித்த தகவல் வைக்காமலும், வார்டு உறுப்பினர்களுக்கும் தெரியாமல் வேலை நடந்ததாக கூறி செலவு செய்யப்பட்டதாக பணத்தினை எடுத்துக் கொள்கின்றனர். இதில் ஊழல் நடைபெற்று வருவதால் மாவட்ட கலெக்டர் உரிய நடவடிக்கை எடுத்து பஞ்சாயத்து தலைவரை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்றனர்.

    அப்போது திடீரென மாரியப்பபாண்டியன் தரையில் படுத்து உருண்டவாறு தலைவரை கண்டித்து கோசம் எழுப்பினார். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

    Next Story
    ×