தேங்காய் பருப்பு ரூ.5.60 லட்சத்துக்கு ஏலம்

தேசிய வேளாண்மை சந்தைக்கு கடந்த வாரம் 8 ஆயிரத்து 155 கிலோ தேங்காய் பருப்பை விவசாயிகள் ஏலத்திற்கு கொண்டு வந்திருந்தனர். மொத்தம் ரூ.5 லட்சத்து 60 ஆயிரத்து 698-க்கு விற்பனை நடைபெற்றது.
தேங்காய் பருப்பு  ரூ.5.60 லட்சத்துக்கு ஏலம்
Published on

பரமத்திவேலூர்:

நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் வெங்கமேட்டில் உள்ள மின்னணு தேசிய வேளாண்மை சந்தைக்கு கடந்த வாரம் 8 ஆயிரத்து 155 கிலோ தேங்காய் பருப்பை விவசாயிகள் ஏலத்திற்கு கொண்டு வந்திருந்தனர்.

இதில் அதிகபட்சமாக கிலோ ஒன்று ரூ.83.69-க்கும், குறைந்தபட்சமாக ரூ.58.71- க்கும், சராசரியாக ரூ.81.99-க்கும் ஏலம் போனது. மொத்தம் ரூ.5 லட்சத்து 85 ஆயிரத்து 587-க்கு ஏலம் போனது.

நேற்று நடைபெற்ற ஏலத்திற்கு 7 ஆயிரத்து 234 கிலோ தேங்காய் பருப்பை விவசாயிகள் கொண்டு வந்திருந்தனர். இதில் அதிகபட்சமாக கிலோ ஒன்று ரூ.88.30-க்கும், குறைந்த பட்சமாக ரூ.55.80-க்கும், சராசரியாக ரூ.82.90-க்கும் ஏலம் போனது. மொத்தம் ரூ.5 லட்சத்து 60 ஆயிரத்து 698-க்கு விற்பனை நடைபெற்றது.

X

Maalai Malar
www.maalaimalar.com