search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தஞ்சையில், தூய்மை பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்
    X

    தஞ்சையில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

    தஞ்சையில், தூய்மை பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்

    • தொகுப்பூதியம் மூலம் சம்பளம் வழங்க வேண்டும்.
    • தூய்மை பணியாளர்களை அரசு பணியாளர்களாக மாற்ற வேண்டும்.

    தஞ்சாவூர்:

    தஞ்சை ரெயில் நிலையம் முன்பு இன்று மாநகர தூய்மை பணியாளர்கள் நல சங்கம் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    இதற்கு தூய்மை பணியாளர்கள் நல சங்க தலைவர் கலியபெருமாள் தலைமை தாங்கினார்.

    விடுதலை சிறுத்தை கட்சியின் மாநில பொறுப்பாளர்கள் ஜெய்சங்கர், வீரவெற்றி வேந்தன் ஆகியோர் முன்னிலை வைத்தனர்.

    ஆர்ப்பாட்டத்தில், தஞ்சை மாநகராட்சி தூய்மை பணியாளர்களுக்கு காண்ட்ராக்ட் முறையில் சம்பளம் வழங்குவதை ரத்து செய்ய வேண்டும். தொகுப்பூதியம் மூலம் சம்பளம் வழங்க வேண்டும்.

    தூய்மை பணியாளர்களை அரசு பணியாளர்களாக மாற்ற வேண்டும். பென்ஷன் திட்டத்தை அமல்படுத்த வேண்டும்.

    தூய்மை பணியாளர்கள் பிள்ளைகளின் பள்ளி, கல்லூரி , மருத்துவ செலவு அரசு ஏற்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோசங்கள் எழுப்பப்பட்டன.

    இதில் ஏராளமான தூய்மை பணியாளர்கள், விடுதலை சிறுத்தை கட்சியினர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×