என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சுதந்திர தினவிழாவில் தேசியக்கொடி ஏற்றிய தூய்மை பணியாளர்
    X

    தூய்மை பணியாளர் தேசியக்கொடி ஏற்றினர்.

    சுதந்திர தினவிழாவில் தேசியக்கொடி ஏற்றிய தூய்மை பணியாளர்

    • தூய்மை பணியாளரில் ஒருவரை தேசியக்கொடி ஏற்ற வைத்தார்.
    • தொடர்ந்து, மாணவர்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது.

    சீர்காழி:

    சீர்காழியில் பல்வேறு அரசு அலுவலகங்கள் மற்றும் பள்ளிகளில் சுதந்திர தினம் சிறப்பாக கொண்டா டப்பட்டது.

    இந்நிலையில் சீர்காழி நகராட்சி 14வது வார்டு நகர் மன்ற உறுப்பினர் ஜெயந்தி பாபு தனது வார்டில் சுதந்திர தினத்தையொட்டி நிகழ்ச்சி ஏற்பாடு செய்திருந்தார்.

    இதில் அப்பகுதியை சேர்ந்த தூய்மை பணியாளர்களை அழைத்து அவர்களுக்கு மரியாதை செய்து தூய்மை பணியாளரின் ஒருவரை தேசியக்கொடி ஏற்ற வைத்தார்.

    தொடர்ந்து தேசியக்கொடி ஏற்றப்பட்டு மாணவர்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது.

    இந்நிகழ்ச்சி சீர்காழி பகுதியில் வரவேற்பை பெற்றுள்ளது.

    Next Story
    ×