தஞ்சை திருவேதிக்குடி கிராமத்தில் நாளை மக்கள் நேர்காணல் முகாம்

மக்கள் நேர்காணல் முகாம் என்ற திட்டம் தொடங்கப்பட்டு, ஒவ்வொரு மாதமும் 2-வது வாரம் நடைபெற்று வந்தது. காமில் மக்கள் பெருமளவில் கலந்து கொண்டு தங்களது கோரிக்கை தொடர்பாக மனுக்களை அளித்து தீர்வு பெற்று கொள்ளலாம்
தஞ்சை திருவேதிக்குடி கிராமத்தில் நாளை மக்கள் நேர்காணல் முகாம்
Published on

தஞ்சாவூர்

தமிழ்நாட்டில் பொதுமக்களின் குறைகளை உடனுக்குடன் நிவர்த்தி செய்யும் பொருட்டு 1969-ம் ஆண்டு முதல் மக்கள் நேர்காணல் முகாம் என்ற திட்டம் தொடங்கப்பட்டு, ஒவ்வொரு மாதமும் 2-வது வாரம் நடைபெற்று வந்தது.

இந்த மக்கள் நேர்காணல் முகாம் தொடர்ந்து நடத்திட வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை, வருவாய் நிர்வாகம் பிரிவின் படி தெரிவிக்கப்பட்டு உள்ளது. அதன் படி நாளை (வெள்ளிக்கிழமை) தஞ்சை வட்டம் ராமாபுரம் சரகம் திருவேதிக்குடி கிராமத்தில் மக்கள் நேர்காணல் முகாம் நடத்த ஆணையிடப்பட்டு உள்ளது.

எனவே இந்த முகாமில் மக்கள் பெருமளவில் கலந்து கொண்டு தங்களது கோரிக்கை தொடர்பாக மனுக்களை அளித்து தீர்வு பெற்று கொள்ளலாம்.மேற்கண்ட தகவலை தஞ்சை மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com