என் மலர்
உள்ளூர் செய்திகள்

பொதுமக்களிடம் மனுக்களை பெற்ற கலெக்டர் ஜானிடாம் வர்கீஸ்.
குறைதீர்க்கும் கூட்டத்தில் மனுக்களை பெற்ற கலெக்டர்
- ராமநாதபுரத்தில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடந்தது.
- பொதுமக்களிடம் இருந்து கலெக்டர் ஜானிடாம் வர்கீஸ் மனுக்களை பெற்றார்.
ராமநாதபுரம்
ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ், தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் பொதுமக்களிடம் 263 கோரிக்கை மனுக்கள் பெற்று மனுதாரரின் முன்னிலையில் மனுக்களை விசாரணை செய்து தொடர்புடைய அலுவலர்க ளிடம் மனுக்களை வழங்கி உரிய நடவடிக்கையினை விரைந்து மேற்கொள்ள அலுவலர்களுக்கு மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டார்.
மேலும் பெறப்பட்ட மனுக்களில் வீட்டுமனை பட்டா, முதியோர் உதவித்தொகை, தனி நபர் வீடு வழங்கும் திட்டம், பட்டா பெயர் மாற்றம், குடும்ப பிரச்சனைகள் தீர்த்து வைத்தல் குறித்த மனுக்களே அதிகளவு வரப்பெற்றன.
பின்னர் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், ராமநாதபுரம் மாவட்ட பிரிவு விளையாட்டு விடுதியில் தங்கி பயிலும் டி.டி.விநாயகர் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் 38-வது மாநில அளவிலான 19 வயதுக்கு உட்பட்ட பாரதியார் தின குழு ஹாக்கி விளையாட்டு போட்டியில் தங்கப் பதக்கம் வென்றதையொட்டி மாவட்ட கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ் சந்தித்து வாழ்த்துப் பெற்றனர்.
கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் காமாட்சி கணேசன், சமூக பாதுகாப்பு திட்ட தனித்துணை ஆட்சியர் குணசேகரன் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.






