என் மலர்
நீங்கள் தேடியது "grievance meeting"
- மாவட்ட வருவாய் அலுவலர் தலைமையில் நடைபெற உள்ளது.
- எரிவாயு முகவர்கள் மற்றும் எண்ணெய் நிறுவன பிரதிநிதிகள் கலந்து கொள்ள உள்ளனர்.
திருப்பூர் :
திருப்பூர் மாவட்டத்தில் உள்ள எரிவாயு நுகர்வோர்க ளுக்கான குறைதீர்க்கும் நாள் கூட்டம் வருகிற 28-ந்தேதி பிற்பகல் 2 மணிக்குதி ருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் திருப்பூர் மாவட்ட வருவாய் அலுவலர் ஜெய்பீம் தலைமையில் நடைபெற உள்ளது. கூட்டத்தில் திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து எரிவாயு முகவர்கள் மற்றும் எண்ணெய் நிறுவன பிரதிநிதிகள் கலந்து கொள்ள உள்ளனர்.
எனவே கூட்டத்தில் திருப்பூர் மாவட்டத்தில் உள்ள எரிவாயு நுகர்வோர்கள் புகார்கள், குறைபாடுகள் இருப்பின் தங்களது எரிவாயு இணைப்பு புத்தகம் அல்லது அடையாள அட்டையுடன் கலந்து கொண்டு பயன்பெறலாம் என தெரிவிக்கப்பட்டு ள்ளது.
- கலெக்டர் தகவல்
- திருப்பத்தூரில் வருகிற 24-ந் தேதி நடக்கிறது
திருப்பத்தூர்:
திருப்பத்தூர் மாவட்டத்திலுள்ள விவசாயிகளின் கோரிக்கை கள் தொடர்பான குறைதீர்வு நாள் கூட்டம் வருகிற 24-ந் தேதி (வெள்ளிக்கிழமை) காலை 10.30 மணிக்கு மக்கள் குறை தீர்வு கூட்டரங்கில் நடக்கிறது.
இதில் கலெக்டர் தலைமையில் அனைத்துத்துறை மாவட்ட அலுவலர்கள் கலந்து கொண்டு விவசாயிகளிடம் குறைகளை நேரடியாககேட்டறிந்து தீர்வு காண நடவடிக்கை மேற்கொள்ள ப்பட்டுள்ளது.
முகாமில் வட்டார அளவிலான அலுவலர்கள் கலந்து கொள்வார்கள்.
விவசாயிகள் அவசியம் முகக்கவசம் அணிந்து வருவதோடு சமூக இடை வெளியை கடைபிடித்து முகாமில் கலந்து கொள்ள வேண்டும் என கலெக்டர் பாஸ்கர பாண் டியன் கேட்டுக்கொண்டுள்ளார்.
- காலை 10:00 மணி முதல் மதியம் 1:00 மணி வரை நடைபெறும்.
- பெயர் சேர்த்தல், முகவரி மாற்றம் சார்ந்த கோரிக்கைகளை முகாம் வாயிலாக நிவர்த்தி செய்து கொள்ளலாம்.
திருப்பூர் :
திருப்பூர் மாவட்டத்தில், தாலுகா அளவிலான ரேஷன் குறைகேட்பு கூட்டம், நாளை 11ம் தேதி நடைபெற உள்ளது. மடத்துக்குளம் தாலுகா காரத்தொழுவு, மைவாடி நரசிங்காபுரம், உடுமலையில் தொட்டம்பட்டி, ஆகிய தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்களில், குறைகேட்பு கூட்டம் நாளை, 11ம் தேதி நடைபெற உள்ளது.
காலை 10:00 மணி முதல் மதியம், 1:00 மணி வரை நடைபெறும் முகாமில், குடிமை பொருள் தாசில்தார்கள், வழங்கல் அலுவலர்கள், தனி வருவாய் ஆய்வாளர்கள் ரேஷன்கார்டுதாரர்களின் குறைகளை கேட்டறிய உள்ளனர்.
ரேஷன் கார்டுகளில் பெயர் சேர்த்தல், பெயர் நீக்கம், முகவரி மாற்றம், மொபைல் எண் பதிவு, மாற்றம் செய்தல், புது ரேஷன் கார்டு, நகல் அட்டை குறித்து பதிவு செய்தல், மின்னணு குடும்ப அட்டை சார்ந்த கோரிக்கைகளை முகாம் வாயிலாக நிவர்த்தி செய்து கொள்ளலாம், என மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.
- செல்போன் பயன்படுத்த தடை விதிக்க வேண்டும்
- மாவட்ட நிர்வாகத்திற்கு பொதுமக்கள் வலியுறுத்தல்
ஆரணி:
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி டவுன் கோட்டை வீதியில் உள்ள வேளாண்மை துறை சார்பில் வேளாண்மை துறை கூட்டுறவு சங்க கூட்ட அரங்கில் விவசாய குறைதீர்வு கூட்டம் மாவட்ட ஊதியம் வேலைவாய்ப்பு திட்ட அலுவலர் அருண்குமார் தலைமையில் நடைபெற்றது.
இதில் மருசூர் அரையாளம் வடுகாசத்து உள்ளிட்ட கிராமத்திலிருந்து சுமார் 100-க்கும் விவசாயிகள் பங்கேற்றனர். மேலும் நெடுஞ்சாலை நகராட்சி பொதுப்பணி துறை வனத்துறை உள்ளிட்ட துறையை சார்ந்த அதிகாரிகளும் பங்கேற்றனர்.
ஆனால் கூட்டம் தொடங்கிய முதல் துறை சார்ந்த அதிகாரிகள் மெத்தன போக்கில் பங்கேற்பது போல் தன்னுடைய செல்போனில் பேசி கொண்டும் சமூக வளைதலங்களான வாட்ஸ்-அப் முகநூல் உள்ளிட்டவைகளை பார்த்து கொண்டும் சக அதிகாரிகளுடன் பேசி பொழுதுபோக்கு அலட்சியமாக நடந்து கொண்டனர்.
இதனை கண்ட விவசாயிகள் அதிர்ச்சியடைந்து விவசாய குறைதீர்வு கூட்டத்தில் அதிகாரிகள் மெத்தன போக்கில் இருந்தால் விவசாயிகள் குறைகளை எப்படி தீர்க்க முடியும் எதற்காக இந்த கூட்டம் என்று புலம்பினார்கள்.
இனிமேல் விவசாய குறைதீர்வு கூட்டத்தில் பங்கேற்கும் அதிகாரிகள் செல்போன் பயன்படுத்த தடை செய்ய வேண்டாம் என்று மாவட்ட நிர்வாகத்திற்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
இந்நிகழழ்ச்சியில் தாசில்தார் ஜெகதீசன், வேளாண் உதவி இயக்குநர்கள் புஷ்பா, செல்லதுரை, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் திலகவதி சவிதா, விஜயலட்சுமி, உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றனர்.
- விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் மாவட்ட கலெக்டர் தலைமையில் நடைபெற்றது.
- கொள்முதல் நிலைய ஊழியர்கள் உள்ளிட்ட பலர் லஞ்சம் கேட்பதாக குற்றம் சாட்டிய விவசாயிகள்.
நாகப்பட்டினம்:
அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் விவசாயிகளிடம் அதிக அளவில் லஞ்சம் வாங்கப்படுவதாக பல இடங்களில் புகார்கள் கூறப்பட்டு வந்தன.
நாகப்பட்டினம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் உள்ள மைய மாநாட்டு கூடத்தில் மாதந்தோறும் வழக்கமாக நடைபெறும். விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் மாவட்ட கலெக்டர் அருண் தம்புராஜ் தலைமையில் நடைபெற்றது.
கூட்டத்தில் வேளாண் இன இயக்குனர் அகண்டராவ், மாவட்ட வருவாய் அலுவலர், கூட்டுறவுத்துறை, பொதுப்பணித்துறை உள்ளிட்ட பல்வேறு துறை அதிகாரிகள் பங்கேற்றனர்.
கூட்டத்தில் பேசிய விவசாயிகள், பருவம் தவறிய மழை இயற்கை சீற்றம் போன்ற பல்வேறு இன்னல்களுக்கு நடுவே சாகுபடி செய்யப்பட்டு அறுவடை செய்யப்பட்ட நெல்களை நேரடி நெல் கொள்முதல் நிலையங்களுக்கு கொண்டு சென்றால் அங்குகொள்முதல் நிலைய ஊழியர்கள் உள்ளிட்ட பலர் லஞ்சம் கேட்பதாக குற்றம் சாட்டிய விவசாயிகள்.
விவசாயத்தை விட கொள்முதல் நிலைய ஊழியர்களுக்கு அதிக லாபம் கிடைப்பதால் தங்களுடைய விளை நிலங்களை எடுத்துக் கொண்டு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் பணி வழங்குமாறு மாவட்ட கலெக்டரிடம் கோரிக்கை விடுத்ததனர்.
இதற்கு பதில் அளித்த மாவட்ட கலெக்டர் அருண் தம்பு ராஜ், லஞ்சம் கேட்கும் ஊழியர்களிடம் தகராறு செய்து போலீசில் பிடித்துக் கொடுங்கள் என விவசாயிகளுக்கு அறிவுரை வழங்கினார்.
- கொடைக்கானலில் சென்னை வருவாய் கோட்டாட்சியர் அலுவல கத்தில் கோட்டாட்சியர் , வட்டாட்சியர் தலைமையில் விவசாயிகள் குறைதீர்கூட்டம் நடைபெற்றது.
- குறைதீர் கூட்டத்தில் விவசாயிகள் பல்வேறு குற்றச்சாட்டுகளை மனுக்களாக கொடுத்தனர்.
கொடைக்கானல்:
சென்னை வருவாய் கோட்டாட்சியர் அலுவல கத்தில் கோட்டாட்சியர் ராஜா, வட்டாட்சியர் முத்துராமன் தலைமையில் வி வசாயிகள் குறைதீர்கூட்டம் நடைபெற்றது.
இதில் தாண்டிக்குடியை சேர்ந்த கணேஷ்பாபு கலந்து கொண்டு பேசுகையில், இதுவரை விவசாயிகள் குறைதீர்கூட்டத்தில் கொடுத்த மனுக்களுக்கும், தற்போது கொடுக்கப்படும் மனுக்களுக்கும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். பூம்பாறை மற்றும் மன்னவனூர் பகுதியில் 108 ஆம்புலன்சுகளை ஆஸ்பத்திரியில் நிறுத்தி சேவை அளித்திட வேண்டும்.
வனவிலங்குகளால் விவசாயிகளுக்கு ஏற்படும் பாதிப்புகளுக்கு அரசு இழப்பீடு தொகை கூடுதலாக வழங்கவேண்டும். கொடை க்கானலில் சட்டவிரோதமாக மதுவிற்பனை நடைபெற்று வருகிறது.
பொதுமக்கள் சாலை மறியல் உள்ளிட்ட போராட்டங்களில் ஈடுபட்டாலும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்ப டுவதில்லை. சாக்கடை, கழிப்பறை வசதி மற்றும் தேவையான அடிப்படை வசதிகளை செய்துதரவேண்டும். தாண்டிக்குடியில் இ-சேவை மையம், பி.எஸ்.என்.எல்.டவர் அமைக்க வேண்டும்.
பொதுமக்களுக்கு இடையூறாக நடைபாதையில் உள்ள மின்கம்பங்களை அகற்றி பாதுகாப்பான இடத்திற்கு மாற்ற வேண்டும். தாண்டிக்குடி மற்றும் பள்ளங்கி பகுதிகளுக்கு பல மாதங்களாக வராத தனியார் பஸ்களின் உரிமத்தை ரத்து செய்து அரசு பஸ் சேவை வழங்க வேண்டும் என கோரிக்கை மனு கொடுத்தார்.
கொடைக்கானலை சேர்ந்த கரோலின், காட்டுபன்றிகள் விவசாய நிலங்கள் மற்றும் பயிர்களை சேதப்படுத்தி வருகிறது. குரங்குகள் அட்டகாசமும் அதிகரித்து வருகிறது. எனவே சோலார் மின்வேலிகள் அமைக்க வேண்டும் என்றார்.
மன்னவனூரை சேர்ந்த தவமுருகன், அப்சர்வேட்டரி பகுதியில் இருந்து கிளாவரை வரை சாலைகள் சேதமடைந்து ள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு உள்ளாகின்றனர்.
எனவே இதனை சீரமைக்க வேண்டும். சாலைகளில் அதிகளவு ஆக்கிரமிப்பு உள்ளது. அரசு அதிகாரிகள் ஆக்கிரமிப்பாளர்களுக்கு உடந்தையாக உள்ளனர். இதனால் ஆக்கிரமிப்பு அதிகரித்து வருகிறது. மூஞ்சிக்கல் முதல் அரசு மே்நிலைப்பள்ளி வரை கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதோடு பள்ளி வாகனங்கள், ஆம்புலன்சுகள் செல்ல தாமதம் ஏற்படுகிறது என குற்றம்சாட்டினர்.
இந்த மனுக்களுக்கு விரைவில் தீர்வு காணப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
- திருப்பத்தூர் கலெக்டர் அலுவலகத்தில் நாளை நடக்கிறது
- வட்டார அளவிலான அலுவலர்கள் கலந்து கொள்கின்றனர்
திருப்பத்தூர்:
திருப்பத்தூர் கலெக்டர் அலுவலகத்தில் உள்ள மக்கள். குறை தீர்க்கும் கூட்டரங்கில் விவசாயிகள் குறைதீர்வு கூட்டம் நாளை (வெள்ளிக்கிழமை) காலை 10.30 மணிக்கு நடக்கிறது. இதில் அனைத்துத்துறை மாவட்ட அலுவலர்கள் விவசாயிக ளிடம் குறைகளை நேரடியாக கேட்டறிந்து தீர்வு காண நடவ டிக்கை மேற்கொள்ளப்பட்டது.
முகாமில் வட்டார அளவிலான அலுவலர்கள் கலந்து கொள்வார்கள். அப்போது விவசாயிகளிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்று மனுதாரருக்கு உடனடியாக ஒப்புகைச்சீட்டும் வழங்கப்படும்.
மேலும் இனி வரும் நாட் களில் 3-வது வெள்ளிக்கிழமைகளில் விவசாயிகள் குறைதீர்வு கூட்டம் நடத்தப்படும். இந்த தகவலை கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தெரிவித்துள்ளார்.
- வழக்கம் போல் போதிய இடவசதி இன்றி விவசாயிகள் அவதி அடைந்தனர்.
- விவசாயிகள் மற்றும் அதிகாரிகளிடம் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது என்றனர்.
திருப்பூர் :
திருப்பூர் சப்-கலெக்டர் அலுவலகத்தில் கோட்ட அளவிலான விவசாயிகள் குறைதீர்கூட்டம் நடந்ததில் பொதுமக்கள் பல்வேறு பிரச்சினைகளுக்கு மனு அளிக்க திரண்டனர். வழக்கம் போல் போதிய இடவசதி இன்றி விவசாயிகள் அவதி அடைந்தனர்.
இது தொடர்பாக விவசாயிகள் கூறியதாவது:- கோட்ட அளவிலான விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்துக்கு உரிய முக்கியத்துவம் அளிப்பதில்லை. போதிய இருக்கைகள் மற்றும் இடவசதிகள் அமைக்கவில்லை. கோட்டாட்சியர் அலுவலகத்தில் உள்ள தற்போது கூட்டம் நடந்தும் வரும் அறையை ஒட்டிய பகுதி காலியாகவே உள்ளது. அதனை பயன்படுத்தினால் விவசாயிகளும், அதிகாரிகளும் முழுமையாக பயன்பெறுவார்கள்.
திருப்பூர் வடக்கு, தெற்கு மட்டுமின்றி பல்லடம், ஊத்துக்குளி மற்றும் அவிநாசி என பல்வேறு வட்டங்களில் இருந்து விவசாயிகள் வருகின்றனர். அதேபோல் பல்வேறு துறை அதிகாரிகளும் சுமார் 40 பேர் பங்கேற்கின்றனர். அனைவருக்கும் போதிய இடவசதி இல்லை. கடந்த கூட்டத்தின் இதே நிலையை அடுத்த கூட்டத்தில் சரிசெய்வதாக உறுதி அளிக்கப்பட்டது. ஆனால் தற்போதும் குறைநிவர்த்தி செய்யப்படவில்லை. இதனால் கூட்ட அரங்கு நடக்கும் ஜன்னல் வழியாகவே குறைதீர் கூட்டத்தை கண்டோம். மாவட்ட விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் பேச வாய்ப்பு அளிக்காததால் இங்கு வருகிறோம்.
இங்கும் போதிய இருக்கை மற்றும் இடவசதி இல்லாத நிலையில் வரும் காலங்களில் இந்த கூட்டத்தையும் விவசாயிகள் புறக்கணிக்கும் நிலையே உள்ளது. தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சேலத்தில் நடந்த ஆய்வுக்கூட்டத்தில் பொதுமக்கள் அளிக்கும் மனுக்களை மனுக்களாக பார்க்காமல், அவர்களின் வாழ்வாதாரமாக பார்த்து பிரச்சினைகளை களைய வேண்டும் என கடந்த சில நாட்களுக்கு முன்பு தெரிவித்திருந்தார். இங்கு மாதந்தோறும் நடக்கும் கூட்டத்துக்கு போதிய எவ்வித முன்னேற்பாடும் செய்யாமல் இருப்பது விவசாயிகள் மற்றும் அதிகாரிகளிடம் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது என்றனர்.
- கடந்த 2 மாதமாக நடக்காததால் ஏமாற்றம்
- ஏராளமானோர் தாலுகா அலுவலகம் வந்து திரும்பி சென்றனர்
நெமிலி:
நெமிலி தாலுகாவுக்கு உட்பட்ட 100-க்கும் மேற்பட்ட கிராமங் களில் விவசாயமே பிரதானமாக இருந்து வருகிறது.
நெமிலி தாலுகா அலுவலகத்தில் தாசில்தார் தலைமையில் மாதத்தின் முதல் வெள்ளிக்கிழமைகளில் விவசாயிகள் குறை தீர்வு கூட்டம் நடத்த வேண்டும். 17 துறைகளை சார்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டு விவசாயிகளின் குறைகளை கேட்டு அதை நிவர்த்தி செய்ய நடவடிக்கை எடுப்பார்கள். ஆனால் கடந்த 2 மாதங்க ளாக விவசாயிகள் குறைதீர்வு கூட்டம் நடைபெறவில்லை.
நேற்று நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் திடீ ரென கூட்டம் ரத்து செய்யப்பட்டது.
இதனால் ஏராளமான விவசாயிகள் தாலுகா அலுவலகம் வந்து திரும்பி சென்றனர்.
- கலெக்டர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் நடந்தது.
- தேநீருக்கு பதிலாக சிறுதானிய கஞ்சி வழங்கப்பட்டது.
மதுரை
மதுரை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் வாரந்தோறும் செவ்வாய்க் கிழமைகளில் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்று வருகிறது. அதன்படி இன்று காலை மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் நடந்தது.
மாவட்ட கலெக்டர் அனீஸ் சேகர் மற்றும் அதிகாரிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர். இதில் மாவட்டத்தில் இருந்து 100-க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டு தங்களது கோரிக்கை தொடர்பாக பேசினர். சிலர் மனுவாக அதிகாரிகளிடம் கொடு த்தனர். கூட்டத்தில் கலந்து கொள்ளும் விவசாயிகளுக்கு வழக்கமாக
தேநீர் தரப்படுவது வழக்கம். ஆனால் இந்த முறை விவசாயிகள் மத்தியில் மதிப்பு கூட்டப்பட்ட சிறுதானிய பொருட்கள் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்று அதிகாரிகள் முடிவு செய்தனர்.
அதன்படி அவர்க ளுக்கு தேனீருக்கு பதிலாக சிறுதானிய கஞ்சி (மில்லட் பால்) வழங்கப்பட்டது. இதற்கு விவசாயிகள் பாராட்டு தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக கலெக்டர் அலுவலக அதிகாரிகள் கூறுகையில்,
மக்கா சோளம் மற்றும் சிறுதானிய சாகுபடியில் ஈடுபடும் விவசாயிகளுக்கு, மதிப்புகூட்டப்பட்ட பொருட்களை உருவாக்கும் எண்ணம் வர வேண்டும் என்பதற்கான முயற்சிகளை மேற்கொண்டோம். அடுத்தபடியாக சிறுதானிய விவசாயத்தை மேம்படுத்துவது தொடர்பாக முனைப்புகளை செய்து வருகிறோம். அதற்கான முதல் முயற்சி தான் இது என்று தெரிவித்துள்ளனர்.அதிகாரிகளின் இந்த நடவடிக்கையை கலெக்டர் அனீஷ் சேகர் பாராட்டினார்.