பல்லடத்தில் மின் நுகர்வோர் குறைகேட்பு கூட்டம் - நாளை நடக்கிறது

காலை 11 மணிக்கு பல்லடம் மின் பகிர்மான வட்டத்தின் மேற்பார்வை பொறியாளர் தலைமையில் நடைபெறுகிறது.மின்சார விநியோகம் குறித்து குறைகள்,புகார்கள் ஏதேனும் இருந்தால் தெரியப்படுத்துமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
கோப்புபடம். 
கோப்புபடம். 
Published on

பல்லடம்:

பல்லடம் கோட்ட மின் நுகர்வோர் குறைகேட்பு முகாம் நாளை நடைபெறுகிறது. இதுகுறித்து பல்லடம் மின் பகிர்மான வட்ட செயற்பொறியாளர் ரத்தினகுமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

பல்லடம் கோட்ட மின் நுகர்வோர் குறைகேட்பு முகாம் பல்லடம் - உடுமலை ரோட்டில் உள்ள மின்சார வாரிய செயற்பொறியாளர் அலுவலகத்தில் நாளை 15-ந்தேதி (புதன்கிழமை) காலை 11 மணிக்கு பல்லடம் மின் பகிர்மான வட்டத்தின் மேற்பார்வை பொறியாளர் தலைமையில் நடைபெறுகிறது .இதில் மின் நுகர்வோர்கள் கலந்து கொண்டு தங்களது மின்சார விநியோகம் குறித்து குறைகள்,புகார்கள் ஏதேனும் இருந்தால் தெரியப்படுத்துமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு அந்த அறிக்கையில் அவர் தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com