என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்தில் 25-ந்தேதி விவசாயிகள் குறைதீர்கூட்டம்
    X

    கோப்பு படம்

    திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்தில் 25-ந்தேதி விவசாயிகள் குறைதீர்கூட்டம்

    • விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட கலெக்டர் தலைமையில் நடைபெறவுள்ளது.
    • பட்டுப்புழு வளர்ப்பு மற்றும் விவசாய கடன் சம்மந்தப்பட்ட தங்களுடைய கோரிக்கைகளுக்கு தீர்வு காணலாம்.

    திண்டுக்கல்:

    திண்டுக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலக வளர்ச்சி மன்றக்கூடத்தில் வரும் 25-ந்தேதி காலை 10.30 மணியளவில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட கலெக்டர் தலைமையில் நடைபெறவுள்ளது.

    அன்றைய கூட்டத்தில் அனைத்துத்துறை தலைமை அலுவலர்களும் கலந்து கொண்டு, விவசாயிகளின் கோரிக்கைகளுக்கு தீர்வு காண உள்ளனர்.

    அனைத்து விவசாயிகளும் கூட்டத்தில் கலந்து கொண்டு வேளாண்மை, தோட்டக்கலை, வேளாண் கருவிகள், ஒழுங்கு முறை விற்பனைக்கூட நடவடிக்கைகள், கால்நடை பராமரிப்பு, பட்டுப்புழு வளர்ப்பு மற்றும் விவசாய கடன் சம்மந்தப்பட்ட தங்களுடைய கோரிக்கைகளுக்கு தீர்வு காணலாம். கூட்டத்தில் கலந்து கொள்ளும் அனைத்து நபர்களும் தவறாது முகக்கவசம் அணிந்து கொள்ளவும், தனிநபர் இடைவெளியும் கண்டிப்பாக கடைபிடித்தாக வேண்டும் என கலெக்டர் விசாகன் தெரிவித்துள்ளார்.

    Next Story
    ×