search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Power consumers"

    • சென்ற மாத கணக்கீட்டு தேதியை இம்மாத தேதியாக எடுத்துக்கொண்டு அந்த தேதியிலிருந்து 20 நாட்களுக்குள் பணத்தை மின் வாரியத்திற்கு செலுத்துமாறு அறிவிக்கப்படுகிறது.
    • தவறும் பட்சத்தில் எந்த வித முன்னறிவிப்பும் இன்றி மின் விநியோகம் துண்டிப்பு செய்யப்படும்.

    தாராபுரம்:

    திருப்பூர் மாவட்டம் தாராபுரம் கோட்ட மின்சார வாரிய செயற்பொறியாளர் பாலன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-

    தாராபுரம் கோட்டத்தில் வடக்கு குண்டடம் பிரிவு அலுவலகத்திற்கு உட்பட்ட கொக்கம்பாளையம் மின் பகிர்மானத்திற்கு நிர்வாகக் காரணத்தினால் 11/2023 நவம்பர் மாத மின் கணக்கீட்டு பணிகள் மேற்கொள்ள இயலவில்லை.

    ஆகவே மின்நுகர்வோர் 9/2023 செப்டம்பர் மாதம் கட்டிய மின்கட்டணத்தொகையையே நவம்பர் மாதத்திற்கு செலுத்த வேண்டும். மின் பயனீட்டாளர்கள் சென்ற மாத கணக்கீட்டு தேதியை இம்மாத தேதியாக எடுத்துக்கொண்டு அந்த தேதியிலிருந்து 20 நாட்களுக்குள் பணத்தை மின் வாரியத்திற்கு செலுத்துமாறு அறிவிக்கப்படுகிறது.தவறும் பட்சத்தில் எந்த வித முன்னறிவிப்பும் இன்றி மின் விநியோகம் துண்டிப்பு செய்யப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • மின் நுகா்வோருக்கான குறைதீா்க்கும் கூட்டம் செயற்பொறியாளா் அலுவலகத்தில் வருகிற 15-ந்தேதி காலை 11 மணியளவில் நடைபெறவுள்ளது.
    • திருப்பூா் மின்பகிா்மான வட்டத்துக்குள்பட்ட மின்நுகா்வோா் பங்கேற்று தங்களது குறைகளைத் தெரிவித்தும், மனுக்கள் அளித்தும் நிவா்த்தி செய்து கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    திருப்பூர்:

    திருப்பூா் மின்பகிா்மான வட்ட செயற்பொறியாளா் எஸ்.ராமசந்திரன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு விவரம் வருமாறு:- திருப்பூா் மின் பகிா்மான வட்டத்துக்குள்பட்ட மின் நுகா்வோருக்கான குறைதீா்க்கும் கூட்டம் செயற்பொறியாளா் அலுவலகத்தில் வருகிற 15-ந்தேதி காலை 11 மணியளவில் நடைபெறவுள்ளது.

    இக்கூட்டத்தில் திருப்பூா் மின்பகிா்மான வட்ட கூடுதல் தலைமைப் பொறியாளா் பங்கேற்று மின்நுகா்வோா் குறைகளைக் கேட்டறியவுள்ளாா்.

    எனவே, இக்கூட்டத்தில் திருப்பூா் மின்பகிா்மான வட்டத்துக்குள்பட்ட மின்நுகா்வோா் பங்கேற்று தங்களது குறைகளைத் தெரிவித்தும், மனுக்கள் அளித்தும் நிவா்த்தி செய்து கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • நாளை காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை கூட்டம் நடைபெற உள்ளது.
    • மின் நுகர்வோர் தங்களுக்கு எதேனும் குறைகள் இருந்தால் தெரிவிக்கலாம்.

    கும்பகோணம்:

    கும்போணத்தில் மின்நுகர்வோர் குறைதீர் நாள் கூட்டம் நாளை 9-ந்தேதி (வியாழக்கிழமை) நடைபெறவுள்ளது.

    இதுகுறித்து தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழக கும்பகோணம் செயற்பொறியாளர் திருவேங்கடம் வெளியிட்டு ள்ள அறிக்கையில் கூறியிப்பதாவது:-

    தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் கும்பகோணம் செயற் பொறியாளர் அலுவலகத்தில் இக் கூட்டத்தை மேற்பார்வை பொறியாளர் நளினி நாளை வியாழக்கிழமை முற்பகல் 11 மணி முதல் பிற்பகல் 1 மணிவரை நடத்தவுள்ளார்.

    இதில் கும்பகோணம் நகரம், கும்கோணம் புறநகர், பாபநாசம் நகரம், பாபநாசம் புறநகர், கபில்தலம், அய்யம்பேட்டை நகரம், அய்யம்பேட்டை புறநகர், திருக்கருகாவூர் கணபதிஅக்ரஹாரம், பட்டீஸ்வரம், சுவாமிமலை, திருப்புறம்பியம் பிரிவு அலுவலக பகுதியைச் சார்ந்த மின் நுகர்வோர் தங்களுக்கு எதேனும் குறைகள் இருந்தால் தெரிவிக்கலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • மின் நுகா்வோா் குறைதீா்க்கும் கூட்டம் தாராபுரம் மின்வாரிய செயற்பொறியாளா் அலுவலகத்தில் நாளை 8-ந்தேதி காலை 11 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை நடைபெறுகிறது.
    • மின் நுகா்வோா்கள் கலந்துகொண்டு மின் பயன்பாட்டில் உள்ள குறைகளைத் தெரிவித்து தீா்வு பெறலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    தாராபுரம்:

    தாராபுரம் கோட்ட மின்வாரிய செயற்பொறியாளா் வ.பாலன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு விவரம் வருமாறு:- தாராபுரம் கோட்டத்தில் நவம்பா் மாதத்துக்கான மின் நுகா்வோா் குறைதீா்க்கும் கூட்டம் தாராபுரம் மின்வாரிய செயற்பொறியாளா் அலுவலகத்தில் நாளை 8-ந்தேதி காலை 11 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை நடைபெறுகிறது. இதில், மின் நுகா்வோா்கள் கலந்துகொண்டு மின் பயன்பாட்டில் உள்ள குறைகளைத் தெரிவித்து தீா்வு பெறலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • கூட்டத்திற்கு பல்லடம் மின் பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் ஜவஹர் தலைமை தாங்கினார்.
    • ஆண்டிபாளையம் ரவி, கூலிபாளையம் ஈஸ்வரன் மற்றும் பொது மக்கள் கலந்து கொண்டனர்.

    திருப்பூர்:

    காங்கயம் கோட்ட அளவிலான மின்நுகர்வோர் குறை தீர்க்கும் கூட்டம் காங்கயம் கோட்ட மின்சார வாரிய அலுவலகத்தில் நடந்தது. கூட்டத்திற்கு பல்லடம் மின் பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் ஜவஹர் தலைமை தாங்கினார். கூட்டத்தில் மின்வாரிய பொது ஒப்பந்த தொ.மு.ச. மாநில செயலாளர் இணை பொதுச் செயலாளர் சமூக ஆர்வலர் ஈ.பி.அ.சரவணன் கொடுத்த மனுவில் கூறப்பட்டு இருப்பதாவது:-

    அரசின் விதிகளின் படி அரசாங்க கடிதங்கள் அரசு துறை நிறுவனமான இந்திய தபால் துறை மூலமாக தான் அனுப்ப வேண்டும். ஆனால் திருப்பூர் மின்சார வாரிய அலுவலகத்திற்குட்பட்ட பகுதியிலுள்ள அதிகாரிகள் தனியார் கூரியர் நிறுவனம் மூலமாக அனுப்பி வருவது சட்டவிரோத செயலாகும். சமூக ஆர்வலர்கள், பொது மக்கள் கொடுக்கும் மனுக்கள் மீது 30 நாட்களில் உரிய தீர்வுகாண வேண்டும். புகார் மனுக்களை கிடப்பில் போட்டு தவறு செய்தவர்களுக்கு சாதகமாக இருப்பது சட்டவிரோதமான செயலாகும். தவறு செய்தவர்கள் மீது சட்டரீதியாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். குறைத்தீர்க்கும் கூட்டத்தில் அளிக்கும் மனுக்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.இதில் சமூக ஆர்வலர்கள் கே.ஏ.கே.கிருஷ்ணசாமி, ஆண்டிபாளையம் ரவி, கூலிபாளையம் ஈஸ்வரன் மற்றும் பொது மக்கள் கலந்து கொண்டனர்.

    • காங்கயம் கோட்டத்தில் மாதாந்திர மின் பயனீட்டாளர்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம், ஒவ்வொரு மாதமும் முதல் புதன்கிழமை அன்று நடைபெற்று வருகிறது.
    • மின் பயனீட்டாளர்கள் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டு, தங்களின் குறைகளை தெரிவித்து, நிவர்த்தி பெறலாம்

    முத்தூர்:

    காங்கயத்தில் மின் பயனீட்டாளர்கள் குறைதீர்க்கும் கூட்டம் நாளை நடைபெற உள்ளது.

    காங்கயம் கோட்டத்தில் மாதாந்திர மின் பயனீட்டாளர்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம், ஒவ்வொரு மாதமும் முதல் புதன்கிழமை அன்று நடைபெற்று வருகிறது. இம்மாதத்திற்கான குறைதீர்க்கும் கூட்டம் நாளை 1-ந் தேதி (புதன்கிழமை) காங்கயம் பஸ் நிலையம் அருகே சென்னிமலை சாலையில் உள்ள மின்வாரிய அலுவலகத்தில் காலை 11 மணி முதல் மதியம் 1 மணிவரை மேற்பார்வை பொறியாளர் தலைமையில் நடைபெற உள்ளது. மின் பயனீட்டாளர்கள் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டு, தங்களின் குறைகளை தெரிவித்து, நிவர்த்தி பெறலாம் என மின் வாரிய காங்கயம் செயற்பொறியாளர் கணேஷ் தெரிவித்துள்ளார்.

    • நெல்லை மின் பகிர்மான வட்டத்திற்க்கு உட்பட்ட வள்ளியூர் கோட்டத்தில் மக்கள் குறைதீர்க்கும் முகாம் வள்ளியூர் செயற் பொறியாளர் அலுவலகத்தில் நடைபெற்றது.
    • நெல்லை மின் பகிர்மான வட்ட மேற்பார்வை மின் பொறியாளர் சந்திரசேகரன் கலந்து கொண்டு பொது மக்கள் அளித்த புகார்களுக்கு உடனடியாக நடவடிக்கை எடுக்க வள்ளியூர் செயற் பொறியாளர் வளன்அரசு மற்றும் ஏனைய அதிகாரிகளுக்கும் உத்தரவிட்டார்.

    வள்ளியூர்:

    நெல்லை மின் பகிர்மான வட்டத்திற்க்கு உட்பட்ட வள்ளியூர் கோட்டத்தில் மக்கள் குறைதீர்க்கும் முகாம் வள்ளியூர் செயற் பொறியாளர் அலுவ லகத்தில் நடைபெற்றது. நெல்லை மின் பகிர்மான வட்ட மேற்பார்வை மின் பொறியாளர் சந்திரசேகரன் கலந்து கொண்டு பொது மக்கள் அளித்த புகார்களுக்கு உடனடியாக நடவடிக்கை எடுக்க வள்ளியூர் செயற் பொறி யாளர் வளன்அரசு மற்றும் ஏனைய அதிகாரி களுக்கும் உத்தரவிட்டார். நிகழ்ச்சியில் வள்ளியூர் கோட்டத்திற்கு உட்பட்ட அனைத்து மின் பொறியாளர்களும் கலந்து கொண்டனர்.

    கூட்டம் முடிந்தவுடன் பொறியாளர்கள் மற்றும் அலுவலர்கள் மத்தியில் மேற்பார்வை மின் பொறியாளர் சந்திரசேகரன் பேசுகையில், நெல்லை, தென்காசி மாவட்டத்தில் வட கிழக்கு பருவ மழை நாட்களில் அனைத்து மின் பொறியாளர்களும் தொடர் கண்காணிப்பில் பணியில் இருந்து மின் தடங்கல் ஏற்பட்டால் உடனடியாக மின் வினியோகம் வழங்கு வதற்கும் அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என்றார்.

    வள்ளியூர் கோட்டத்திற்கு உட்பட்ட களக்காடு மற்றும் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரங்களில் வனத்துறையுடன் இணைந்து தொடர் ஆய்வு பணிகளை நடத்தி வன விலங்குகளால் மின் பாதைகள் மற்றும் மின் கம்பங்கள் சேதமாகி இருந்தால் உடனடியாக மாற்றுவதற்கு உத்தரவிட்டார். வள்ளியூர் கோட்டத்தில் நடைபெற்று வரும் வளர்ச்சி மேம்பாட்டு பணிகள் குறித்து ஆய்வு நடத்தி பணிகளை விரைந்து முடிக்கவும் உத்தரவிட்டார்.

    • காங்கயம் கோட்டத்தில் மாதாந்திர மின் நுகர்வோர் குறைதீ்ர்க்கும் நாள் கூட்டம் ஒவ்வொரு மாதமும் நடைபெறும்.
    • காங்கயம் பஸ்நிலையம் அருகில் பி.எஸ்.ஜி.லாட்ஜில் பல்லடம் மேற்பார்வை பொறியாளர் தலைமையில் நடைபெற உள்ளது.

    காங்கயம்:

    காங்கயம் மின்சார வாரிய செயற்பொறியாளர் கணேஷ்ராம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-

    காங்கயம் கோட்டத்தில் மாதாந்திர மின் நுகர்வோர் குறைதீ்ர்க்கும் நாள் கூட்டம் ஒவ்வொரு மாதமும் நடைபெறும். இதுபோல் இந்த மாதத்திற்கான குறைதீர்க்கும் நாள் கூட்டம் நாளை (புதன்கிழமை) காலை 11 மணிமுதல் மதியம் 1 மணிவரை காங்கயத்தில் பஸ்நிலையம் அருகில் பி.எஸ்.ஜி.லாட்ஜில் பல்லடம் மேற்பார்வை பொறியாளர் தலைமையில் நடைபெற உள்ளது.

    எனவே மின்நுகர்வோர் இந்த குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் கலந்துகொண்டு தங்களது கோரிக்கைகளை, குறைகளை தெரிவித்து பயன்பெற கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • மின்துறை அறிவிப்பு
    • விவசாயம், சிறு குடிசைகள் தவிர்த்து மற்ற அனைத்து மின் நுகர்வோரிடமும் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படும்.

    புதுச்சேரி:

    கோவா மற்றும் யூனியன் பிரதேசங்க ளுக்கான இணை மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தின் மூலம் புதுவையில் ஆண்டு தோறும் மின் கட்டணம் நிர்ணயிக்கப் படுகிறது

    ஆண்டுதோறும் உத்தேச மின் கட்டணம் அறிவிக்கப்படும் தொடர்ந்து ஒழுங்குமுறை ஆணையர் முன்னிலையில் பொது மக்களிடம் கருத்துகள் கேட்கப்படும். தொடர்ந்து மின் கட்டணம் ஏப்ரல் மாதம் முதல் உயர்த்தப்படும்.

    இதுபோல் நடப்பு ஆண்டுக்கான மின் கட்டண மும் உயர்த்தப்பட்டது. இந்த நிலையில் கொள்முதல் விலை உயர்வை ஈடு செய்ய புதுவை அரசின் மின்துறை கூடுதல் கட்டணம் வசூலிக்க உள்ளது.

    இதன்படி 2023 -24ம் ஆண்டின் முதல் காலாண்டான ஏப்ரல், மே, ஜூன் ஆகிய மாதங்களுக்காக மின் நுகர்வோரிடம் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்பட உள்ளது. விவசாயம், சிறு குடிசைகள் தவிர்த்து மற்ற அனைத்து மின் நுகர்வோரிடமும் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படும்.

    நுகர்வோர் வாரியாக முதல் காலாண்டுக்கு வசூலிக்கப்பட உள்ள மின் கட்டண விவரம் வருமாறு:

    வீடுகளுக்கு 100 யூனிட்டு வரை யூனிட்டுக்கு 25 பைசா, 101 முதல் 200 யூனிட்டு வரை யூனிட்டுக்கு 36 பைசா, 201 முதல் 300 யூனிட்டு வரை யூனிட்டுக்கு 40 பைசா, 300 யூனிட்டுக்கு மேல் யூனிட்டுக்கு 40 பைசாவும்.

    வர்த்தக மின் கட்டணம் 100 யூனிட்டு வரை யூனிட்டுக்கு 66 பைசா, 101 முதல் 250 வரை யூனிட்டுக்கு 77 பைசா, 250 யூனிட்டுக்கு மேல் 79 பைசா

    இதுபோல் தெருவிளக்கு யூனிட்டுக்கு 78 பைசா, எல்டி தொழிற்சாலை யூனிட்டுக்கு 70 பைசா, எல் டி தண்ணீர் தொட்டி யூனிட்டுக்கு 72 பைசா, குடிசைத் தொழிலுக்கு 100 யூனிட் வரை யூனிட்டுக்கு 25 பைசா, 101 முதல் 200 யூனிட் வரை யூனிட்டுக்கு 36 பைசா, 201 முதல் 300 யூனிட் வரை யூனிட்டுக்கு 40 பைசா, 300 யூனிட்டுக்கு மேல் யூனிட்டுக்கு 40 பைசா எச்டி தொழிற்சாலைக்கு யூனிட்டுக்கு 60 பைசா, எச்டி வர்த்தகம் யூனிட்டுக்கு 62 பைசா, விளம்பர பலகைகளுக்கு யூனிட்டுக்கு 59 பைசா கூடுதல் கட்டணமாக வசூலிக்கப்பட உள்ளது

    இந்த கூடுதல் கட்டணம் ஏப்ரல்,மே, ஜூன் மாதங்களுக்கு முறையே அக்டோபர், நவம்பர், டிசம்பர் மாதங்களில் வசூலிக்கப்படும். இதற்கான அறிவிப்பை புதுவை அரசின் மின்துறை வெளியிட்டுள்ளது.

    • செப்டம்பர் 25ந்தேதி (திங்கட்கிழமை) ஒருநாள் வேலை நிறுத்தம் தமிழ்நாடு முழுவதும் நடைபெற்றது.
    • அரசு தரப்பில் இருந்து கோரிக்கைகளுக்கு முக்கிய தீர்வு கிடைக்கவில்லை.

    திருப்பூர்:

    தமிழ்நாடு தொழில்துறை மின் நுகர்வோர்கள் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவரான கோபி பழனியப்பன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    சிறு குறு மற்றும் நடுத்தர தொழில்களுக்கான மின் கட்டண குறைப்புக்காக 5 அம்ச கோரிக்கையை முன்வைத்து பல கட்ட போராட்டங்களை நடத்தி வருகிறோம். அந்த வகையில் கடந்த செப்டம்பர் 25ந்தேதி (திங்கட்கிழமை) ஒருநாள் வேலை நிறுத்தம் தமிழ்நாடு முழுவதும் நடைபெற்றது. பிறகு செப்டம்பர் 26ந் தேதி தொழில்துறை அமைச்சர், தமிழ்நாடு தொழில்துறை மின் நுகர்வோர்கள் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர்களை அழைத்து பேசினார்.

    இந்த கூட்டத்தின் முடிவில் முதலமைச்சரிடம் எடுத்துக்கூறி இரண்டொரு நாளில் நல்ல பதிலை தெரிவிக்கிறோம் என்று கூறினார். அதன் பிறகு 29-ந் தேதி இரண்டாவது கூட்டம் சென்னையில் மீண்டும் அதிகாரிகள் தலைமையில் நடைபெற்றது. இதில் அனைத்து மாவட்ட தொழில் அமைப்புகளின் சங்க ஒருங்கிணைப்பாளர்கள் கலந்து கொண்டனர். நல்லதொரு தீர்வை அரசாங்கம் ஏற்படுத்தி கொடுக்கும் என்ற எதிர்பார்ப்பில் கலந்து கொண்டோம். ஆனால் அரசு தரப்பில் இருந்து கோரிக்கைகளுக்கு முக்கிய தீர்வு கிடைக்கவில்லை.

    இன்று மாலை திருப்பூர் பிருந்தாவன் சிட்கோவில் உள்ள ,தென் இந்திய பனியன் உற்பத்தியாளர்கள் சங்க (சைமா) அரங்கில் அவசர கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. திருப்பூரின் அனைத்து தொழில் அமைப்பு சங்கங்களும் கலந்து கொள்ள வேண்டுமாறு கேட்டுக்கொள்கிறேன்.இவ்வாறு அந்த அறிக்கையில் அவர் கூறியுள்ளார்.

    • திருமங்கலத்தில் மின் நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் நாளை நடக்கிறது.
    • மேற்கண்ட தகவலை மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் மங்களநாதன் தெரிவித்துள்ளார்.

    திருமங்கலம்

    திருமங்கலம் மின்வாரிய செயற்பொறியாளர் அலுவலகத்தில் நாளை (13-ந் தேதி) காலை 11 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை மின்நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் நடக்கிறது. இதில் மின்நுகர்வோர்கள் கலந்து கொண்டு தங்கள் குறை களை தெரிவித்து நிவர்த்தி பெறலாம்.

    மேற்கண்ட தகவலை மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் மங்களநாதன் தெரிவித்துள்ளார்.

    • அவிநாசியில் மின் நுகா்வோா் குறைதீா்க்கும் நாள் கூட்டம் நாளை 10-ந்தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
    • குறைதீா்க்கும் கூட்டத்தில் திருப்பூா் மின் பகிா்மான வட்ட மேற்பாா்வை பொறியாளா் முத்துவேல் கலந்துகொண்டு மின் நுகா்வோா் குறைகளைக் கேட்டறியவுள்ளாா்.

    அவிநாசி:

    அவிநாசியில் மின் நுகா்வோா் குறைதீா்க்கும் நாள் கூட்டம் நாளை 10-ந்தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.அவிநாசி- மங்கலம் சாலையில் உள்ள மின் கோட்ட செயற்பொறியாளா் அலுவலகத்தில் நாளை காலை 11 மணிக்கு நடைபெறும் குறைதீா்க்கும் கூட்டத்தில் திருப்பூா் மின் பகிா்மான வட்ட மேற்பாா்வை பொறியாளா் முத்துவேல் கலந்துகொண்டு மின் நுகா்வோா் குறைகளைக் கேட்டறியவுள்ளாா்.

    எனவே மின்நுகா்வோா் இக்கூட்டத்தில் கலந்துகொண்டு மின் சம்பந்தமான குறைகளைத் தெரிவித்து நிவா்த்தி செய்து கொள்ளலாம் என அவிநாசி மின் கோட்ட செயற்பொறியாளா் பழ.பரஞ்சோதி தெரிவித்துள்ளாா். 

    ×