கும்பகோணத்தில் நாளை, மின் நுகர்வோர் குறைதீர் கூட்டம்

நாளை காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை கூட்டம் நடைபெற உள்ளது.மின் நுகர்வோர் தங்களுக்கு எதேனும் குறைகள் இருந்தால் தெரிவிக்கலாம்.
கும்பகோணத்தில் நாளை, மின் நுகர்வோர் குறைதீர் கூட்டம்
Published on

கும்பகோணம்:

கும்போணத்தில் மின்நுகர்வோர் குறைதீர் நாள் கூட்டம் நாளை 9-ந்தேதி (வியாழக்கிழமை) நடைபெறவுள்ளது.

இதுகுறித்து தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழக கும்பகோணம் செயற்பொறியாளர் திருவேங்கடம் வெளியிட்டு ள்ள அறிக்கையில் கூறியிப்பதாவது:-

தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் கும்பகோணம் செயற் பொறியாளர் அலுவலகத்தில் இக் கூட்டத்தை மேற்பார்வை பொறியாளர் நளினி நாளை வியாழக்கிழமை முற்பகல் 11 மணி முதல் பிற்பகல் 1 மணிவரை நடத்தவுள்ளார்.

இதில் கும்பகோணம் நகரம், கும்கோணம் புறநகர், பாபநாசம் நகரம், பாபநாசம் புறநகர், கபில்தலம், அய்யம்பேட்டை நகரம், அய்யம்பேட்டை புறநகர், திருக்கருகாவூர் கணபதிஅக்ரஹாரம், பட்டீஸ்வரம், சுவாமிமலை, திருப்புறம்பியம் பிரிவு அலுவலக பகுதியைச் சார்ந்த மின் நுகர்வோர் தங்களுக்கு எதேனும் குறைகள் இருந்தால் தெரிவிக்கலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com