search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தமிழக அரசுடனான 2ம் கட்ட பேச்சுவார்த்தை தோல்வி: தொழில்துறை மின் நுகர்வோர் கூட்டமைப்பின் அவசர கூட்டம்
    X

    கோபி பழனியப்பன்.

    தமிழக அரசுடனான 2ம் கட்ட பேச்சுவார்த்தை தோல்வி: தொழில்துறை மின் நுகர்வோர் கூட்டமைப்பின் அவசர கூட்டம்

    • செப்டம்பர் 25ந்தேதி (திங்கட்கிழமை) ஒருநாள் வேலை நிறுத்தம் தமிழ்நாடு முழுவதும் நடைபெற்றது.
    • அரசு தரப்பில் இருந்து கோரிக்கைகளுக்கு முக்கிய தீர்வு கிடைக்கவில்லை.

    திருப்பூர்:

    தமிழ்நாடு தொழில்துறை மின் நுகர்வோர்கள் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவரான கோபி பழனியப்பன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    சிறு குறு மற்றும் நடுத்தர தொழில்களுக்கான மின் கட்டண குறைப்புக்காக 5 அம்ச கோரிக்கையை முன்வைத்து பல கட்ட போராட்டங்களை நடத்தி வருகிறோம். அந்த வகையில் கடந்த செப்டம்பர் 25ந்தேதி (திங்கட்கிழமை) ஒருநாள் வேலை நிறுத்தம் தமிழ்நாடு முழுவதும் நடைபெற்றது. பிறகு செப்டம்பர் 26ந் தேதி தொழில்துறை அமைச்சர், தமிழ்நாடு தொழில்துறை மின் நுகர்வோர்கள் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர்களை அழைத்து பேசினார்.

    இந்த கூட்டத்தின் முடிவில் முதலமைச்சரிடம் எடுத்துக்கூறி இரண்டொரு நாளில் நல்ல பதிலை தெரிவிக்கிறோம் என்று கூறினார். அதன் பிறகு 29-ந் தேதி இரண்டாவது கூட்டம் சென்னையில் மீண்டும் அதிகாரிகள் தலைமையில் நடைபெற்றது. இதில் அனைத்து மாவட்ட தொழில் அமைப்புகளின் சங்க ஒருங்கிணைப்பாளர்கள் கலந்து கொண்டனர். நல்லதொரு தீர்வை அரசாங்கம் ஏற்படுத்தி கொடுக்கும் என்ற எதிர்பார்ப்பில் கலந்து கொண்டோம். ஆனால் அரசு தரப்பில் இருந்து கோரிக்கைகளுக்கு முக்கிய தீர்வு கிடைக்கவில்லை.

    இன்று மாலை திருப்பூர் பிருந்தாவன் சிட்கோவில் உள்ள ,தென் இந்திய பனியன் உற்பத்தியாளர்கள் சங்க (சைமா) அரங்கில் அவசர கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. திருப்பூரின் அனைத்து தொழில் அமைப்பு சங்கங்களும் கலந்து கொள்ள வேண்டுமாறு கேட்டுக்கொள்கிறேன்.இவ்வாறு அந்த அறிக்கையில் அவர் கூறியுள்ளார்.

    Next Story
    ×