search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    லோக் அதாலத் மூலம் 1443 வழக்குகள் தீர்வு
    X

    லோக் அதாலத் நடைபெற்றது.

    லோக் அதாலத் மூலம் 1443 வழக்குகள் தீர்வு

    • 2636 மனுக்கள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.
    • இரு தரப்பினரையும் அழைத்து விசாரித்து சமரச நடவடிக்கைகளில் நீதிபதிகள் ஈடுபட்டனர்.

    திருவாரூர்:

    திருவாரூர் மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் உள்ள மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவில் மக்கள் நீதிமன்றம் என்ற லோக் அதாலத் நடைபெற்றது.

    இந்நிகழ்விற்கு திருவாரூர் மாவட்ட நீதிபதி சாந்தி தலைமை வகித்தார். இந்த முகாமில் மகளிர் விரைவு நீதிமன்ற நீதிபதி சங்கர், மாவட்ட குற்றவியல் நடுவர் பாலமுருகன், சார்பு நீதிபதி சரண்யா, திருவாரூர் குற்றவியல் நடுவர் ரெகுபதி ராஜா, கூடுதல் மகிளா நீதிமன்ற நடுவர் சிந்தா ஆகியோர் கலந்து கொண்டு மனுக்களை விசாரித்தனர்.

    இந்த முகாமில் சிவில் வழக்குகள், ஜீவனாம்சம் வழக்குகள், திருமண விவாகரத்து தொடர்பான வழக்குகள், காசோலை வழக்குகள் மற்றும் வங்கி சாரா வாரா கடன் வழக்குகள் உள்ளிட்ட 2636 மனுக்கள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

    இந்த முகாமில் வழக்கு முறையிட்டார் உள்ளிட்ட இரு தரப்பினரையும் அழைத்து விசாரித்து சமரசம் நடவடிக்கைகளில் நீதிபதிகளை ஈடுபட்டனர். அதில் 1443 மனுக்களுக்கு சமரசத் தீர்வு ஏற்படுத்தப்பட்டது.

    இந்த வழக்குகள் மூலம் ரூபாய் 1 கோடியே 96 லட்சத்து 8 ஆயிரத்து 835க்கான சமரசத்தொகை தொகை முறையீட்டாளர்களுக்கு வழங்கப்பட்டது.

    Next Story
    ×