search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "activities"

    • அறிவியல் செயல்பாடுகள், கணித செயல்பாடுகள் குறித்து செய்து காண்பிக்கப்பட்டன.
    • உள்ளூர் வளங்களை கொண்டு மாணவர்கள் படமாக வரைதல்.

    திருத்துறைப்பூண்டி:

    முத்துப்பேட்டை தாலுகா, ஜாம்புவானோடை வடகாடு தொடக்கப்பள்ளியில் வானவில் மன்றம் மற்றும் இல்லம் தேடி கல்வி ஆகியவை இணைந்து நடத்தும் ஆயிரம் ஆயிரம் அறிவியல் திருவிழா தொடங்கியது.

    நிகழ்ச்சிக்கு ஊராட்சி தலைவர் லதா பாலமுருகன் தலைமை தாங்கினார்.

    முன்னாள் மாணவர் சங்க தலைவர் கண்ணன், உதவி ஆசிரியர் செந்தில் ஆகியோர் முன்னிலை வகித்தார்.

    தலைமையாசிரியர் மகாலட்சுமி குத்து விளக்கேற்றி விழாவை தொடங்கி வைத்தார்.

    பயிற்சியில் பல்வேறு அறிவியல் செயல்பாடுகள், கணித செயல்பாடுகள், காகித மடிப்புகலை, பாடல்கள், நடனம், மேஜிக், கைரேகை, ஓவியங்கள், உள்ளூர் வளங்களை கொண்டு மாணவர்கள் படமாக வரைதல் போன்றவை செய்து காண்பிக்கப்பட்டன.

    பயிற்சியின் முதன்மை கருத்தாளர்களாக வானவில் மன்ற லாவண்யா மற்றும் இல்லம் தேடி கல்வி மைய தன்னார்வலர்கள் மங்கை, கல்பனா ஆகியோர் செயல்பட்டனர்.

    இதில் 50-க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர்.

    • விருதுநகர் மாவட்டத்தில் குறைந்தபட்ச ஊதியம் வழங்காத 17 கடைகள்-நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது.
    • தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) காளிதாஸ் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளார்.

    விருதுநகர்

    விருதுநகர் தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) காளிதாஸ் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    சென்னை தொழிலாளர் ஆணையர் அதுல்ஆனந்த் ஆணையின்படி கடைகள் மற்றும் வர்த்தக நிறுவ னங்களில் குறிப்பாக தனியார் நிதி நிறுவனங்கள், மருந்து கடைகள், ஸ்கேன் ைமயங்கள், ஸார்டுவேர் கடைகள், பரிசோதனை மையங்கள், கால் சென்டர்கள் உள்ளிட்ட நிறுவனங்க ளில் குறைந்தபட்ச ஊதிய சட்டத்தின் கீழ் ஆய்வுகள் மேற்கொள்ள உத்தரவிடப் பட்டது.

    அதன்படி இந்த கடைகள் மற்றும் வர்த்தக நிறுவனங்களில் குறைந்தபட்ச கூலி சட்டத்தின் கீழ் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டதில், தொழிலாளர்களுக்கு குறைந்தபட்ச ஊதியம் வழங்காத 17 நிறுவனங்கள் மீது முரண்பாடு கண்டறியப்பட்டது. 17 நிறுவனங்கள் மீது மதுரை தொழிலாளர் இணை ஆணையர் நீதிமன்றத்தில் கேட்பு மனு தாக்கல் செய்யப்பட்டு, 17 நிறுவனங்களில் பணிபுரிந்த 35 தொழிலாளர்களுக்கு குறைவுச்சம்பளம் ரூ.9லட்சத்து 66ஆயிரத்து 56-ஐ பெற்று வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அனைத்து நிறுவனங்களும் குறைந்த பட்ச கூலிச் சட்டத்தின் கீழ் அந்தந்த தொழில் நிறுவனங்களுக்கு நிர்ணயிக்கப்பட்ட குறைந்தபட்ச ஊதியத்தை (ஊதியம் மற்றும் அகவிலைப்படி) அளிக்க வேண்டும். குறைவு ஊதியம் தொடர்பான புகார் தெரிவிக்க 04562-225130 என்ற விருதுநகர் தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) அலுவலக தொலைபேசி எண்ணை அலுவலக வேலை நேரத்தில் தொடர்பு கொள்ளலாம். இந்த ஆய்வில் விருதுநகர், அருப்புக்கோட்டை, சிவகாசி முதல் மற்றும் 2-ம் சரகம், ஸ்ரீவில்லிபுத்தூர், ராஜபாளையம், உசிலம்பட்டி தொழிலாளர் உதவி ஆய்வர்கள் பங்கேற்றனர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • பொது இடங்களில், போஸ்டர் ஒட்டுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனபோலீசார் அறிவித்துள்ளனர். .
    • தமிழக முழுவதும் நகரப் பகுதி யில் விதிகளை மீறி பொது இடங்களில், போஸ்டர் ஒட்டி யவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு அபராதம் விதிக்கப்படுகிறது


    கடலூர்:

    பண்ருட்டி நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் விதிகளை மீறி பொது இடங்களில், போஸ்டர் ஒட்டுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனபோலீசார் அறிவித்துள்ளனர்.  இது குறித்து பண்ருட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் கண்ணன் கூறியிருப்பதாவது:-  சென்னை உள்ளிட்ட தமிழக முழுவதும் நகரப் பகுதி யில் விதிகளை மீறி பொது இடங்களில், போஸ்டர் ஒட்டி யவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு அபராதம் விதிக்கப்படுகிறது.

    எனவே பண்ருட்டி நகர பகுதியில் விதி களை மீறி யாரும் போஸ்டர், டிஜிட்டல் பேனர் ஆகியவை வைக்க கூடாது. இவ்வாறு அவர் அந்த அறிவிப்பில் கூறியுள்ளார்.

    • பொதுமக்களை நேரில் சந்தித்து அவர்களது குறைகளை கேட்டறிந்து 29 மனுக்களை பெற்றார்.
    • 12 மனுக்கள் மீது உடனடி தீர்வு காணப்பட்டது மீதமுள்ள மனுக்கள் விரைவில் எடுக்கப்படும் என உறுதி அளித்தார்.

    நாகப்பட்டினம்:

    நாகப்பட்டினம் மாவட்ட காவல் அலுவலகத்தில் நாகப்பட்டினம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜவஹர் பொதுமக்களை நேரில் சந்தித்து அவர்களது குறைகளை கேட்டறிந்து 29 மனுக்களை பெற்றார்.

    அதில் 12 மனுக்களுக்கு உடனடி தீர்வு காணப்பட்டது. மேலும் மீதமுள்ள மனுக்கள் மீதான நடவடிக்கைகள் விரைவில் எடுக்கப்படும் என்று பொதுமக்களிடம் உறுதி அளித்தார்.

    மேலும் காவல்துறையிடம் பொதுமக்கள் தங்களது குறைகளை நேரடியாக தெரிவிக்க இலவச எண்கள் மூலம் கள்ளச்சாராய விற்பனை, கஞ்சா விற்பனை மற்றும் பொதுமக்களுக்கு இடையூறாக உள்ள பிரச்சினைகள் குறித்து நேரடியாக புகார் தெரிவிக்கலாம் என்று மாவட்ட போலீஸ் சூப்பிரண்ட் தெரிவித்தார்.

    மேலும் இந்நிகழ்ச்சியில் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் சுகுமாரன், வேணுகோபால், நாகப்பட்டினம் உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் பாலகிருஷ்ணன், மற்றும் காவல் துறையினர், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    • அரசு மாதிரி பள்ளி செயல்பாடுகள் குறித்து கலெக்டர் நேரடி ஆய்வு செய்தார்.
    • ஒருங்கிணைப்பாளர் காளிதாஸ் ஆகியோர் உடன் இருந்தனர்.

    சிவகங்கை

    சிவகங்கை மாவட்டம் கீழக்கண்டனியில் உள்ள பொறியியல் கல்லூரி வளாகத்தில் அரசின் மாதிரி பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு மாவட்டகலெக்டர் மதுசூதன்ரெட்டி நேரடி ஆய்வு மேற்கொண்டார். அப்போது மாணவர்களின் கல்விகற்றல் குறித்து ஆசிரியர்களிடம் கேட்ட றிந்தார்.

    பள்ளியில் மாணவர்க ளுக்கு வழங்கப்படும் உணவின் தரம், அடிப்படை வசதிகள் தொடர்பாக கலெக்டர் நேரில் ஆய்வு மேற்கொண்டார். பின்னர் வகுப்பறைகளுக்கு சென்று அவர், அங்கு மாணவர்களிடம் கலந்துரையாடினார். ஆய்வின்போதுமாவட்ட கலெக்டர் கூறியதாவது:-

    முதல்-அமைச்சர் அரசு பள்ளி மாணவ-மாணவிகளின் நலனை கருத்தில் கொண்டு எண்ணற்ற திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். பிற மாநிலங்களுக்கு முன்மாதிரியாக தமிழகம் திகழ்ந்து வருகிறது. அரசு பள்ளி மாணவர்கள் இந்திய அளவிலான நுழைவு தேர்வு தயார் செய்யும் விதமாக கடந்த செப்டம்பர் 5-ந்தேதி ஆசிரியர் தினத்தன்று மாநிலம் முழுவதும் 15 மாவட்டங்களில் அரசு மாதிரி பள்ளிகளை முதல்-அமைச்சர் தொடங்கி வைத்தார்.

    அதில் சிவகங்கை கீழக்கண்டனி அரசு மாதிரி பள்ளியும் ஒன்று. இதில் 77 மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர். இங்கு படிக்கும் மாணவர்களுக்கு உணவு விடுதி, கட்ட மைப்பு வசதிகள் செய்யப்ப ட்டுள்ளன. அரசு பள்ளி மாணவர்கள் எதிர்கால நலனை கருத்தில் கொண்டு எவ்வித போட்டி தேர்வுகளையும், நுழைவு தேர்வுகளையும் எதிர்கொள்ள இந்த பள்ளிகள் தொடங்கப்ப ட்டுள்ளது. திறன்மிக்க ஆசிரியர்களை வைத்து இங்கு பாடங்கள் கற்பிக்க ப்படுகிறது.

    இவ்வாறு அவர் பேசினார்.

    ஆய்வின்போது முதன்மை கல்வி அதிகாரி சுவாமிநாதன், ஒருங்கி ணைப்பாளர் காளிதாஸ் ஆகியோர் உடன் இருந்தனர்.

    • சித்தர்களால் பூஜிக்கப்பட்ட கோவிலாகவும், அதிசயம் பல நடந்த கோவிலாகவும் கருதப்பட்டு வருகிறது.
    • கோவிலில் திருப்பணிகள், கட்டுமான பணிகளை உடனே ஆரம்பித்து விரைவில் முடிக்க ஆவண செய்ய வேண்டும்.

    தஞ்சாவூர்:

    தேசிய திருக்கோயில்கள் கூட்டமைப்பு பொதுச்செ யலாளர் வழக்கறிஞர் சந்திரபோஸ் பெருமாள் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்ப தாவது:-

    தஞ்சாவூர் அருகே நெடார் ஆலங்குடி கிராமத்தில் பல நூற்றாண்டுகள் பழமை வாய்ந்த பிரம்மபுரீஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் பிரம்மபுரீ ஸ்வரர், நித்திய கல்யாணி அம்பாள் சன்னதிகள் உள்ளன.

    இக்கோவில் முதன்மை திருக்கோயில் என்ற வகைபாட்டில் இந்து சமய அறநிலையத்துறை நிர்வாகத்தின் கட்டுப்பா ட்டில் உள்ளதுஇக்கோவிலில் ஒரு கால பூஜை திட்டத்தின் கீழ் ஒரு கால பூஜை நடைபெற்று வருகிறது.

    சித்தர்களால் பூஜிக்கப்பட்ட கோவிலாகவும், அதிசயம் பல நடந்த கோவிலாகவும் மக்களிடையே கருதப்பட்டு வருகிறது.

    ஆனால், தற்போது இக்கோவில் மிகவும் சிதிலமடைந்து மேற்கூரை இடிந்து விழும் நிலையில் காணப்படுகிறது. இதுபோ ன்ற கோவில்களை அதன் பழமை மாறாது காப்பது அரசின் கடமையாகும்.

    இக்கோவிலை புதுப்பிப்ப தற்கும், திருப்பணிகள் செய்வதற்கும் இந்து சமய அறநிலையத்துறை சார்பாக நிதி ஒதுக்கப்பட்டு அதன் செயல்பாடுகள் கிடப்பில் போடப்பட்டுள்ளது.

    எனவே, அறநிலையத்துறை அமைச்சர் தலையிட்டு கோவிலில் திருப்பணிகள், கட்டுமான பணிகளை உடனே ஆரம்பித்து விரைவில் முடிக்க ஆவண செய்யுமாறு கேட்டுக்கொள்கிறோன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. 

    • நெல் ஈரப்பதம் கண்டறியும் கருவியின் செயல்பாட்டுகளையும் கலெக்டர் ஆய்வு செய்தார்.
    • 328 கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு 82,622 மெ.டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.

    திருத்துறைப்பூண்டி:

    திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி தாலுகா கச்சனம் நேரடி நெல்கொள்முதல் நிலையத்தில் கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன் நெல்கொள்முதல் பதிவேடு, சாக்குகள் இருப்பு பதிவேடு ஆகியவைகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    தொடர்ந்து, நெல் ஈரப்பதம் கண்டறியும் கருவியின் செயல்பாட்டையும், நெல் மூட்டை எடை எந்திரத்தின் செயல்பாட்டையும் ஆய்வு செய்தார்.

    இதனைத் தொடர்ந்து, முத்துப்பேட்டை தாலுகா கற்பகநாதர்குளம் கிராமத்திலுள்ள பல்நோக்கு பேரிடர் மையத்தில் சாய்தளம், குடிநீர், கழிவறை, மின்சார வசதிகள் உள்ளிட்டவைகளையும் கலெக்டர் ஆய்வு செய்தார்.

    பின்னர், கள்ளிக்குடி கிராமத்தில் நேரடி நெல் விதைப்பு செய்யப்பட்டுள்ளதை பார்வையிட்டு வருவாய் துறையின் பயிர் சாகுபடி பதிவேட்டில் சரியாக பதிவுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதா என்பதையும் ஆய்வு செய்தார்.

    திருவாரூர் மாவட்டத்தில் கடந்த செப்டம்பர் 1-ம் தேதி முதல் இதுவரை 328 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு 82,622 மெ.டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் 8425 விவசாயிகள் பயனடைந்துள்ளனர்.

    விவசாயிகளிடம் கொள்முதல் செய்யப்பட்ட நெல்லிற்கான தொகையாக ரூ. 91 கோடியே 21 லட்சத்து 2 ஆயிரத்து 360 சம்மந்தப்பட்ட விவசாயிகளின் வங்கி கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்பட்டுள்ளது.

    ஆய்வின்போது வருவாய் கோட்டாட்சியர் கீர்த்தனா மணி, வட்டாட்சியர் மலர்கொடி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சாந்தி, கமலராஜன் உள்ளிட்ட அரசு அலுவலர்கள் உடன் இருந்தனர்.

    • விழுப்புரம் மாவட்டத்தில் தங்கும் விடுதிகளை முறைப்படி பதிவு செய்யாவிட்டால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கலெக்டர் மோகன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
    • 3 ஆண்டு காலம் சிறை தண்டனை மற்றும் ஒரு லட்சம் அபராதம் விதிக்கப்படும்.

    விழுப்புரம்:

    விழுப்புரம் மாவட்டத்தில் தனியார் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் தங்கும் விடுதிகளை நடத்தி வருகின்றனர். இது தவிர குழந்தைகள், முதியோர் இல்லங்கள் மற்றும் பணிபுரியும் மகளிர் விடுதிகள் ஆகியவை செயல்பட்டு வருகின்றன இவற்றில் சிலர் பதிவு செய்யாமலும், பதிவுகளை புதுப்பிக்காமலும் இயங்கி வருவதாக அவ்வப்போது புகார்கள் வந்தவண்ணம் உள்ளன. இவ்விடுதிகளை முறைப்ப டுத்தி கண்கா ணித்திட தமிழக அரசால் தமிழ்நாடு பெண்கள் மற்றும் குழந்தைகள் விடுதிகள் மற்றும் இல்லங்கள் சட்டம் 2014 கொண்டுவரப்பட்டு நடைமுறையில் உள்ளது. இச்சட்டத்தின்படி விடுதி நிர்வாகிகள் இணையதளம் மூலமாக உரிய சான்றுகளுடன் தாங்கள் நடத்திவரும் விடுதிகளை பதிவு செய்தல் மற்றும் புதுப்பித்தல் போன்றவற்றை 31.08.2022-க்குள் மேற்கொள்ளவேண்டும் என தெரிவித்துக் கொள்ளப்படுகிறது. மேலும், இதனை கண்காணித்திட மாவட்ட அளவில் குழுக்கள் ஏற்படுத்தப்பட்டு விடுதிகளின் செயல்பாடுகள் குறித்து தொடர் ஆய்வு மேற்கொள்ளப்படும்.

    அவ்வாறு ஆய்வின்போது குறைபாடுகளை கண்டறியும் பட்சத்தில் சட்டப்பிரிவு 20-ன் கீழ் விடுதிகள் மற்றும் இல்லங்களை உடனடியாக மூடுவதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்வதோடு சம்மந்தப்பட்ட நிர்வாகிகள் மீது காவல் துறையின் மூலம் வழக்கு தொடர்ந்து அதிகபட்சமாக 3 ஆண்டு காலம் சிறை தண்டனை மற்றும் ஒரு லட்சம் அபராதம் விதிக்கப்படும். எனவே, விழுப்புரம் மாவட்டத்தில் தனியார் விடுதிகள் மற்றும் இல்லங்கள் நடத்திவரும் அனைத்து விடுதி நிர்வாகிகளும் மேற்கண்ட இணையதளத்தில் தவறாமல் பதிவு செய்தல் மற்றும் புதுப்பித்தல் பணியினை 31.08.2022க்குள் முடித்திடுமாறு கேட்டுக்கொள்ளப்படு கிறார்கள். மேலும், விடுதியில் போதிய பாதுகாப்பு வழங்குதல் மற்றும் தேவையான உட்கட்டமைப்பு வசதிகள் உள்ளதை உறுதிப்படுத்திக்கொள்ள கேட்டுக்கொள்ளப்படு கிறார்கள். மேலும் விவரங்களுக்கு மாவட்ட ஆட்சியர் அலுவலக தரை தளத்தில் இயங்கி வரும் மாவட்ட சமூகநல அலுவலகத்தை (தொலைபேசி எண்: 04146222288) அணுகவும் என விழுப்புரம் மாவட்ட கலெக்டர் ேமாகன் தெரிவித்து உள்ளார். 

    • அரசின் பல்வேறு துறைகள் இருந்தாலும் பள்ளிக்கல்வித்துறைக்கு தான் முதல்-அமைச்சர் அதிக நிதி ஒதுக்கீடு செய்துள்ளார்.
    • பள்ளி கட்டிடங்கள் புதுமையாக கட்டி மாணவர்களின் கனவை நினைவாக்கும் வகையில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    கும்பகோணம்:

    திருப்பனந்தாள் அருகே மனக்குண்ணத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளிக்கு ரூ.17.32 லட்சம் மதிப்பிலான புதிய பள்ளி கட்டிட பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி திறந்து வைத்தார்.கல்யாணசுந்தரம் எம்.பி, அரசு தலைமை கொறடா கோவி செழியன், ஒன்றிய குழு தலைவர் தேவி ரவிச்சந்திரன்,ஒன்றிய குழு துணை தலைவர் அண்ணாதுரை ஆகியோர் குத்துவிளக்கேற்றினர். விழாவில் அமைச்சர் அன்பில்மகேஷ் பொய்யா மொழி பேசியதாவது:-தமிழகத்தின் கடைக்கோடி பகுதியிலும் தமிழக அரசின் நலத்திட்ட உதவிகள் சென்றடையும் வகையில் இந்த அரசு செயல்பட்டு வருகிறது.

    அரசின் பல்வேறு துறைகள் இருந்தாலும் பள்ளிக்கல்வித்துறைக்கு தான் முதலமைச்சர் அதிக நிதி ஒதுக்கீடு செய்துள்ளார்.அந்த வகையில் பெரும்பாலான பள்ளி கட்டிடங்கள் புதுமையாக கட்டி மாணவ -மாண வர்களின் கனவை நினைவாக்கும் வகையில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.இவ்வாறுஅவர் பேசினார்.

    ×