search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "accommodation"

    • முதலில் சாப்பிட்ட மாணவிகள் 10க்கும் மேற்பட்டோருக்கு வாந்தி, தலைச்சுற்றல் ஆகியவை ஏற்பட்டது.
    • உணவை ஆய்வுக்காக அனுப்பி வைத்தனர்.

    திண்டுக்கல்:

    திண்டுக்கல் மாவட்ட விளையாட்டு அரங்கில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் மாணவிகளுக்கான விடுதி செயல்பட்டு வருகிறது.

    இந்த விடுதியில் தங்கி பல்வேறு ஊர்களைச் சேர்ந்த மாணவிகள் விளையாட்டு பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர்.

    இந்த விடுதியில் நேற்று இரவு மாணவிகளுக்கு உணவு சமைத்து வழங்கப்பட்டது. முதலில் சாப்பிட்ட மாணவிகள் 10க்கும் மேற்பட்டோருக்கு வாந்தி, தலைச்சுற்றல் ஆகியவை ஏற்பட்டது. இதனால் மற்ற மாணவிகள் உணவு சாப்பிட தயக்கம் காட்டினர்.

    இது குறித்து விடுதி நிர்வாகத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் சம்பவ இடத்துக்கு வந்து மாணவிகளுக்காக தயார் செய்து வைத்திருந்த உணவின் தரம் மற்றும் சமையல் அறை ஆகியவற்றை ஆய்வு செய்தனர். மேலும் உணவை ஆய்வுக்காக அனுப்பி வைத்தனர்.

    இதனிடையே விடுதியில் உணவு சாப்பிட்ட காவியா (வயது14), நாகலட்சுமி (14), ஜெயப்பிரியா (13), நிரோஷா (13), பாவனா (17), இந்துஜா (13), யமுனா (15), கோபிகா (17), கோகிலா (16) உள்ளிட்ட 10 மாணவிகளுக்கு உடல் நலக்குறைவு ஏற்படவே அவர்கள் திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சம்பவம் சக மாணவிகள் மத்தியில் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியது.

    மாணவிகளுக்கு தரமான உணவு, சுகாதாரமான முறையில் தயார் செய்து வழங்க வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

    • 32 குடும்பங்களை சேர்ந்தவர்கள் வசித்து வருகிறோம்.
    • ஆலடிக்குமுளை பக்கத்தில் உள்ள முனி கோவில் பின்புறம் நத்தம் புறம்போக்கு உள்ளது.‌

    தஞ்சாவூர்:

    தஞ்சை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடந்த குறைதீர்க்கும் கூட்டத்தில் பட்டுக்கோட்டை பாலிடெக்னிக் சாலை நரியம்பாளையம் தெற்கு பகுதியை சேர்ந்த பெண்கள் 30-க்கும் மேற்பட்டோர் அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது :-

    பட்டுக்கோட்டை புதிய பஸ் நிலையம் நரியம்பாளை யத்தின் தென்புறம் வேலை நடைபெற்று வருகிறது. இதன் அருகில் 32 குடும்ப ங்களை சேர்ந்தவர்கள் வசித்து வருகிறோம். எங்களுக்கு பூவானம் கிராமத்தில் இடம் ஒதுக்கி உள்ளதாக தெரிகிறது. ஆனால் நரியம்பாளை யத்திற்கும் , பூவானம் கிராமத்திற்கும் 15 கி.மீ. இருப்பதால் நாங்கள் அனைவரும் அங்கு செல்வது மிகவும் கஷ்டமாக இருக்கும்.

    குழந்தைகள், பெரியவர்களை அங்கிருந்து அழைத்துச் செல்ல முடியாது. போதிய பஸ் வசதியும் கிடையாது. எனவே எங்களுக்கு ஆலடிக்குமுளை பக்கத்தில் உள்ள முனி கோவில் பின்புறம் நத்தம் புறம்போக்கு உள்ளது. அந்த இடத்தில் இடம் வழங்க வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • வருகின்ற 13-ந் தேதி சிறப்பு தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம் நடைபெறுகிறது.
    • பயனாளிகளுக்கு ரூ.15 ஆயிரம் சம்பளம் மற்றும் உணவு தங்கும் இடம் இலவசமாக வழங்கப்படுகிறது.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் முரளிதரன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில கூறி இருப்பதாவது:- கள்ளக்குறிச்சி நேபால் தெருவில் அமைந்துள்ள மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையத்தில் வருகின்ற 13-ந் தேதி காலை 10 மணி முதல் மாலை 2 மணி வரை ஐ.டி.ஐ. மற்றும் டிப்ளமோ முடித்தவர்களுக்கு சிறப்பு தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம் நடைபெறுகிறது.

    இதில் 18 வயது முதல் 26 வயது வரை உள்ளமாணவ, மாணவிகள் கலந்து கொள்ளலாம். தேர்வு செய்யப்படும் பயனாளிகளுக்கு ரூ.15 ஆயிரம் சம்பளம் மற்றும் உணவு தங்கும் இடம் இலவசமாக வழங்கப்படுகிறது. எனவே ஐ.டி.ஐ. மற்றும் டிப்ளமோ முடித்துள்ள மாணவர்கள் இந்த சிறப்பு வேலை வாய்ப்பு முகாமை பயன்படுத்திக் கொள்ளலாம் . இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • தேர்வு செய்யப்படுபவர்கள் விளையாட்டு விடுதியில் சேருவதற்கு பரிந்துரை செய்யப்படும்.
    • பயிற்சி முகாமில் கலந்து கொள்ளும் மாணவ- மாணவிகளுக்கு சிற்றுண்டி வழங்கப்பட உள்ளது.

    தஞ்சாவூர்:

    தஞ்சை மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது:-

    தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் தஞ்சை மாவட்டம் சார்பில் கோடைகால பயிற்சி முகாம் தஞ்சை அன்னை சத்யா விளையாட்டு அரங்கில் அடுத்தமாதம் (மே) 2-ந் தேதி முதல் 16-ந் தேதி வரை 15 நாட்கள் காலை 6.30 மணி முதல் காலை 8.30 மணி வரையிலும், மாலை 4.30 மணி முதல் 6.30 மணி வரையிலும் நடக்கிறது. தடகளம், கூடைப்பந்து, கால்பந்து, ஆக்கி மற்றும் கைப்பந்து ஆகிய விளையாட்டுகளுக்கு பயிற்சி அளிக்கப்பட உள்ளது.

    இந்த பயிற்சியில் கலந்து கொள்ளும் மாணவர்கள் மற்றும் மாணவிகளுக்கு தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் நடத்தும் விளையாட்டு விடுதியில் சேர்வதற்கான அறிவுரை மற்றும் ஆலோசனை வழங்கப்படும். மேலும் பயிற்சி முகாமில் கலந்து கொள்ளும் அனைவருக்கும் சான்றிதழ்கள் வழங்கப்படும்.

    தகுதியின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுபவர்கள் விளையாட்டு விடுதியில் சேருவதற்கு பரிந்துரை செய்யப்படும். இந்த கோடைகால பயிற்சி முகாமில் கலந்து கொள்ளும் மாணவ, மாணவிகளுக்கு சிற்றுண்டி வழங்கப்பட உள்ளது.

    முகாமில் தஞ்சை மாவட்டத்தில் உள்ள அரசு உயர்நிலை, மேல்நிலை, மெட்ரிக், நடுநிலைப் பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவிகள் மற்றும் மாணவர் அல்லாதோர் கலந்து கொள்ளலாம்.

    முகாமில் கலந்து கொள்பவர்கள் தங்களது பெயர்களை அன்னை சத்யா விளையாட்டு அரங்கத்தில் அலுவலக வேலை நேரங்களில் இன்று (வெள்ளிக்கிழமை) முதல் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை நேரடியாகவோ அல்லது 04362-235633 என்ற தொலைபேசி வாயிலாகவோ பெயர்களை முன்கூட்டியே பதிவு செய்து கொள்ளலாம்.

    தஞ்சை மாவட்டத்தில் உள்ள பள்ளிகளில் பயிலும் விளையாட்டில் ஆர்வமுள்ள மாணவ, மாணவிகள் இந்த முகாமில் அதிகஅளவில் கலந்து கொண்டு பயன்பெற வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • எஸ்.எஸ்.எஸ். பார்க் தங்கும் விடுதி திறப்பு விழா நடந்தது.
    • கோவிலூர் எஸ்.எஸ்.சுப்பிரணியன்,பொறியாளர் முருகானந்தம் குடும்பத்தினர் திறப்பு விழா ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

    காரைக்குடி

    சிவகங்கை மாவட்டம் காரைக்குடி தாலுகா கோவிலூரில் திருச்சி-ராமேசுவரம் தேசிய நெடுஞ்சாலையில் குளிர்சாதன வசதியுடன் கூடிய எஸ்.எஸ்.எஸ். பார்க் தங்கும் விடுதி திறப்பு விழா குன்றக்குடி பொன்னம்பல அடிகளார் அருளாசியுடன் நடந்தது.

    முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கற்பகம் இளங்கோ, காரைக்குடி அ.தி.மு.க நகர செயலாளர் மெய்யப்பன்,தொழிலதிபர் சத்குரு தேவன் முன்னிலை வகித்தனர். கோவிலூர் ஊராட்சி மன்ற தலைவர் சுந்தரி சுப்பிரமணியன் வரவேற்றார். தொழிபதிபர் படிக்காசு திறந்து வைத்தார்.

    சட்டமன்ற உறுப்பினர்கள் செந்தில்நாதன், மாங்குடி, ஆடிட்டர் ராஜகோபால், மாநில நல்லாசிரியர் வீரபாண்டியன், சென்னை ஏ.வி.எம். ஸ்டுடியோ மேலாளர் விஸ்வநாதன் ஆகியோர் குத்துவிளக்கேற்றினர். லிப்ட் வசதியை முன்னாள் அமைச்சர் பாஸ்கரனும், ஜெனரேட்டரை ஐ.ஓ.பி. வங்கி மேலாளர் மனோஜ்குமாரும் தொடங்கி வைத்தனர்.

    ஆவின் சேர்மன் அசோகன், அ.ம.மு.க. மாவட்ட செயலாளர் தேர்போகி பாண்டி,ஒன்றிய செயலாளர்கள் ஜெயகுணசேகரன், சேவியர்தாஸ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். முன்னாள் ஒன்றிய செயலாளர் கோவிலூர் எஸ்.எஸ்.சுப்பிரணியன்,பொறியாளர் முருகானந்தம் குடும்பத்தினர் திறப்பு விழா ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

    • சங்க நிர்வாகிகள், உறுப்பினர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
    • பல்லடம் கடை வீதியில் வாகனங்கள் நிறுத்துமிடம் வசதியை நகராட்சி நிர்வாகம் ஏற்பாடு செய்து தர வேண்டும்.

    பல்லடம்:

    பல்லடத்தில் அனைத்து வணிகர்கள் சங்க ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் வரும் 30ந்தேதி பல்லடம் கடை வீதியில் வணிகர் சங்க அலுவலக திறப்பு விழாவிற்க்கு வரும் மாநிலத் தலைவர் விக்கிரமராஜாவிற்கு சிறப்பான வரவேற்பு அளிப்பது, பல்லடம் கடை வீதியில் வாகனங்கள் நிறுத்துமிடம் வசதியை நகராட்சி நிர்வாகம் ஏற்பாடு செய்து தர வேண்டும். கொரோனா காலத்தில் பாதிக்கப்பட்ட வியாபாரிகளுக்கு நகராட்சி நிர்வாகம் வாடகையை தள்ளுபடி செய்ய வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. இக்கூட்டத்தில் பல்லடம் அனைத்து வணிகர்கள் சங்க நிர்வாகிகள், உறுப்பினர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • விருதுநகர் மாவட்டத்தில் இயங்கும் பெண்கள் விடுதிகள் கண்டிப்பாக உரிமம் பெற்று பதிவு செய்ய வேண்டும்.
    • 2 ஆண்டு காலம் வரை சிறைதண்டனை விதிப்பதுடன் உரிமம் ரத்து செய்யப்படும்.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்ட கலெக்டர் மேகநாதரெட்டி விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    விருதுநகர் மாவட்டத்தில் செயல்படும் பணிபுரியும் மகளிர் விடுதிகளை சமூகநலத்துறையின் மூலம் தமிழ்நாடு மகளிர் மற்றும் குழந்தைகளுக்கான விடுதிகள் மற்றும் காப்பகங்களுக்கான ஒழுங்கு முறைப்படுத்தும் சட்டம் 2014-ன் கீழ் அரசு மற்றும் அரசு சாரா நிறுவனங்கள் நடத்தும் பெண்கள் விடுதிகள், அறக்கட்டளைகள், சங்கங்கள் மற்றும் மதம் சார்ந்த நிறுவனங்கள், தொழிற்கல்வி பயிற்சி நிறுவனங்கள் நடத்தும் பெண்கள் விடுதிகள் மற்றும் நிறுவனங்கள், தொழிற்சாலைகள், தனியார் மற்றும் தனிநபர் ஆகியோரால் நடத்தப்பட்டு வரும் பெண்கள் விடுதிகள் தற்காலிகமாக நடத்தும் விடுதிகள் அனைத்தும் கண்டிப்பாக பதிவு செய்யப்பட வேண்டும்.

    பதிவு உரிமம் பெறுவதற்கு தமிழ்நாடு அரசின் http://tnswp.com என்ற இணையதளம் வழியாக விண்ணப்பம் செய்து அதன் நகலினை இணைத்து உரிய ஆவணங்களுடன் விருதுநகர் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தினுள் செயல்படும் மாவட்ட சமூகநல அலுவலகத்தில் விண்ணப்பிக்க வேண்டும்.

    குறிப்பிட்ட காலத்திற்குள் பதிவு செய்ய தவறினால் விடுதியின் உரிமையாளர், மேலாளர் ஆகியோருக்கு சட்டப்பிரிவின் படி, 2 ஆண்டு காலம் வரை சிறைதண்டனை விதிப்பதுடன் உரிமம் ரத்து செய்யப்படும். அபராதமும் விதிக்கப்படும்.

    மேலும் பதிவு உரிமம் தொடர்பான கூடுதல் விவரங்களுக்கு விருதுநகர் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தினுள் செயல்படும் மாவட்ட சமூகநல அலுவலக தொலைபேசி எண்: 04562-252701-ஐ தொடர்பு கொள்ளலாம். மேலும் 18 வயதிற்கு கீழ் உள்ள பள்ளி குழந்தைகள் விடுதி மற்றும் குழந்தைகள் இல்லங்கள் பதிவிற்கு மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகினை அணுகலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • விழுப்புரம் மாவட்டத்தில் தங்கும் விடுதிகளை முறைப்படி பதிவு செய்யாவிட்டால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கலெக்டர் மோகன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
    • 3 ஆண்டு காலம் சிறை தண்டனை மற்றும் ஒரு லட்சம் அபராதம் விதிக்கப்படும்.

    விழுப்புரம்:

    விழுப்புரம் மாவட்டத்தில் தனியார் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் தங்கும் விடுதிகளை நடத்தி வருகின்றனர். இது தவிர குழந்தைகள், முதியோர் இல்லங்கள் மற்றும் பணிபுரியும் மகளிர் விடுதிகள் ஆகியவை செயல்பட்டு வருகின்றன இவற்றில் சிலர் பதிவு செய்யாமலும், பதிவுகளை புதுப்பிக்காமலும் இயங்கி வருவதாக அவ்வப்போது புகார்கள் வந்தவண்ணம் உள்ளன. இவ்விடுதிகளை முறைப்ப டுத்தி கண்கா ணித்திட தமிழக அரசால் தமிழ்நாடு பெண்கள் மற்றும் குழந்தைகள் விடுதிகள் மற்றும் இல்லங்கள் சட்டம் 2014 கொண்டுவரப்பட்டு நடைமுறையில் உள்ளது. இச்சட்டத்தின்படி விடுதி நிர்வாகிகள் இணையதளம் மூலமாக உரிய சான்றுகளுடன் தாங்கள் நடத்திவரும் விடுதிகளை பதிவு செய்தல் மற்றும் புதுப்பித்தல் போன்றவற்றை 31.08.2022-க்குள் மேற்கொள்ளவேண்டும் என தெரிவித்துக் கொள்ளப்படுகிறது. மேலும், இதனை கண்காணித்திட மாவட்ட அளவில் குழுக்கள் ஏற்படுத்தப்பட்டு விடுதிகளின் செயல்பாடுகள் குறித்து தொடர் ஆய்வு மேற்கொள்ளப்படும்.

    அவ்வாறு ஆய்வின்போது குறைபாடுகளை கண்டறியும் பட்சத்தில் சட்டப்பிரிவு 20-ன் கீழ் விடுதிகள் மற்றும் இல்லங்களை உடனடியாக மூடுவதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்வதோடு சம்மந்தப்பட்ட நிர்வாகிகள் மீது காவல் துறையின் மூலம் வழக்கு தொடர்ந்து அதிகபட்சமாக 3 ஆண்டு காலம் சிறை தண்டனை மற்றும் ஒரு லட்சம் அபராதம் விதிக்கப்படும். எனவே, விழுப்புரம் மாவட்டத்தில் தனியார் விடுதிகள் மற்றும் இல்லங்கள் நடத்திவரும் அனைத்து விடுதி நிர்வாகிகளும் மேற்கண்ட இணையதளத்தில் தவறாமல் பதிவு செய்தல் மற்றும் புதுப்பித்தல் பணியினை 31.08.2022க்குள் முடித்திடுமாறு கேட்டுக்கொள்ளப்படு கிறார்கள். மேலும், விடுதியில் போதிய பாதுகாப்பு வழங்குதல் மற்றும் தேவையான உட்கட்டமைப்பு வசதிகள் உள்ளதை உறுதிப்படுத்திக்கொள்ள கேட்டுக்கொள்ளப்படு கிறார்கள். மேலும் விவரங்களுக்கு மாவட்ட ஆட்சியர் அலுவலக தரை தளத்தில் இயங்கி வரும் மாவட்ட சமூகநல அலுவலகத்தை (தொலைபேசி எண்: 04146222288) அணுகவும் என விழுப்புரம் மாவட்ட கலெக்டர் ேமாகன் தெரிவித்து உள்ளார். 

    • 10-ம் வகுப்பு வரை பயிலும் மாணவ-மாணவிகளுக்கு சீருடைகள் வழங்கப்படும்.
    • விடுதிகளில் சேருவதற்கான தகுதிகளானது, பெற்றோர் பாதுகாவலரது ஆண்டு வருமானம் 2 லட்சத்திற்கு மிகாமல் இருத்தல் வேண்டும்.

    தரங்கம்பாடி:

    மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் லலிதா செய்தி குறிப்பில் கூறியுள்ளதாவது:- மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மிகப்பிற்படுத்தப்பட்டோர் மாணவ-மாணவியர்க–ளுக்காக பள்ளி விடுதிகள் 15, கல்லூரி விடுதிகள் 4 என மொத்தம் 19 விடுதிகள் செயல்படுகின்றன. இந்த 4 கல்லூரி விடுதிகளில் 3 மாணவியர்கள் விடுதி, 1 மாணவர் விடுதி, மேலும் 15 பள்ளி விடுதிகளில் 8 மாணவியர்கள் விடுதி, 7 மாணவர்கள் விடுதி ஆகும்.

    பள்ளி விடுதிகளில் 4 முதல் 12-ம் வகுப்புவரை படிக்கும் மாணவ-மாணவியர்களும். அதற்கு மேல் படிக்கும் மாணவ-மாணவிளுக்கு கல்லூரி விடுதிகளில் சேர தகுதியுடைவர்கள் ஆவர். அனைத்து வகுப்பைச்சார்ந்த மாணவ-மாணவியர்களும் குறிப்பிட்ட விகிதாச்சார அடிப்படையில் சேர்த்து–க்கொள்ள–ப்படுவார்கள். விடுதிகளில் எவ்வித செலவினமும் இல்லாமல் சலுகைகள் இலவசமாக வழங்கப்படுகின்றன. அனைத்து விடுதி மாணவ-மாணவி களுக்கும்உணவும், தங்கும் வசதியும் அளிக்கப்படும்.

    10-ம் வகுப்பு வரை பயிலும் மாணவ-மாணவிகளுக்கு சீருடைகள் வழங்கப்படும். 10-ம் வகுப்பு மற்றும் 12-ம் வகுப்பு பயிலும் மாணவ-மாணவிகளுக்கு சிறப்பு வழிகாட்டி நூல்கள் வழங்கப்படும். விடுதிகளில் சேருவதற்கான தகுதிகளானது, பெற்றோர் பாதுகாவலரது ஆண்டு வருமானம் 2 லட்சத்திற்கு மிகாமல் இருத்தல் வேண்டும். இருப்பிடத்திலிருந்து பயிலும் கல்வி நிலையத்தின் தொலைவு குறைந்த பட்சம் 8 கி.மீ.க்கு மேல் இருக்கவேண்டும். இந்த தூர விதி மாணவியர்களுக்கு பொருந்தாது.

    தகுதியுடைய மாணவ-மாணவிகள் விண்ணப்பங்களை சம்பந்த–ப்பட்ட விடுதிகாப்பாளர்கள், காப்பாளினிகளிடமிருந்தோ அல்லது மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் அலுவலகத்திலிருந்தோ இலவசமாக பெற்றுக்கொ ள்ளலாம்பூர்த்தி செய்ய ப்பட்ட விண்ணப்பங்கள்கல்லூரி மற்றும் பள்ளிவிடுதிகா ப்பாளர், காப்பாளினி களிடம் மற்றும் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தில் வருகின்ற 15.7.22க்குள் சமர்ப்பிக்க வேண்டும். மாணவ-மாணவிகள் விண்ணப்பிக்கும் போது, சாதி மற்றும் பெற்றோரது ஆண்டு வருமானம் குறித்த சான்றிதழ் ஏதும் அளிக்க தேவையில்லை. விடுதியில் சேரும் போது மட்டும் இச்சான்றிதழ்களை அளித்தால் போதுமானது.

    தமிழ் நாட்டில் உள்ள ஒவ்வொரு விடுதியிலும் முகாம் வாழ் இலங்கை தமிழர்களின் குழந்தைக ளுக்கென தனியே 5 இடங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. ஒவ்வொரு விடுதியிலும் மீட்கப்படும் குழந்தைத் தொழிலாளர்களை எக்காலத்திலும் எந்த நேரத்திலும் எந்தவித நிபந்தனைகளும் இல்லாமல் சேர்த்துக்கொள்ளவும் அவர்களது படிப்பு முடியும்வரை விடுதிகளில் தங்கி பயிலவும் அனுமதிக்க ப்படுகின்றனர். எனவே மாணவ-மாணவிகள் அரசின் இச்சலுகைகளை பெற்று பயனடையவாம். இவ்வாறு கலெக்டர் லலிதா தெரிவித்துள்ளார்.

    ×