search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தஞ்சையில், மே 2-ந் தேதி கோடைகால பயிற்சி முகாம் தொடக்கம்- கலெக்டர் தகவல்
    X

    கலெக்டர் தினேஷ்பொன்ராஜ் ஆலிவர்

    தஞ்சையில், மே 2-ந் தேதி கோடைகால பயிற்சி முகாம் தொடக்கம்- கலெக்டர் தகவல்

    • தேர்வு செய்யப்படுபவர்கள் விளையாட்டு விடுதியில் சேருவதற்கு பரிந்துரை செய்யப்படும்.
    • பயிற்சி முகாமில் கலந்து கொள்ளும் மாணவ- மாணவிகளுக்கு சிற்றுண்டி வழங்கப்பட உள்ளது.

    தஞ்சாவூர்:

    தஞ்சை மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது:-

    தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் தஞ்சை மாவட்டம் சார்பில் கோடைகால பயிற்சி முகாம் தஞ்சை அன்னை சத்யா விளையாட்டு அரங்கில் அடுத்தமாதம் (மே) 2-ந் தேதி முதல் 16-ந் தேதி வரை 15 நாட்கள் காலை 6.30 மணி முதல் காலை 8.30 மணி வரையிலும், மாலை 4.30 மணி முதல் 6.30 மணி வரையிலும் நடக்கிறது. தடகளம், கூடைப்பந்து, கால்பந்து, ஆக்கி மற்றும் கைப்பந்து ஆகிய விளையாட்டுகளுக்கு பயிற்சி அளிக்கப்பட உள்ளது.

    இந்த பயிற்சியில் கலந்து கொள்ளும் மாணவர்கள் மற்றும் மாணவிகளுக்கு தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் நடத்தும் விளையாட்டு விடுதியில் சேர்வதற்கான அறிவுரை மற்றும் ஆலோசனை வழங்கப்படும். மேலும் பயிற்சி முகாமில் கலந்து கொள்ளும் அனைவருக்கும் சான்றிதழ்கள் வழங்கப்படும்.

    தகுதியின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுபவர்கள் விளையாட்டு விடுதியில் சேருவதற்கு பரிந்துரை செய்யப்படும். இந்த கோடைகால பயிற்சி முகாமில் கலந்து கொள்ளும் மாணவ, மாணவிகளுக்கு சிற்றுண்டி வழங்கப்பட உள்ளது.

    முகாமில் தஞ்சை மாவட்டத்தில் உள்ள அரசு உயர்நிலை, மேல்நிலை, மெட்ரிக், நடுநிலைப் பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவிகள் மற்றும் மாணவர் அல்லாதோர் கலந்து கொள்ளலாம்.

    முகாமில் கலந்து கொள்பவர்கள் தங்களது பெயர்களை அன்னை சத்யா விளையாட்டு அரங்கத்தில் அலுவலக வேலை நேரங்களில் இன்று (வெள்ளிக்கிழமை) முதல் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை நேரடியாகவோ அல்லது 04362-235633 என்ற தொலைபேசி வாயிலாகவோ பெயர்களை முன்கூட்டியே பதிவு செய்து கொள்ளலாம்.

    தஞ்சை மாவட்டத்தில் உள்ள பள்ளிகளில் பயிலும் விளையாட்டில் ஆர்வமுள்ள மாணவ, மாணவிகள் இந்த முகாமில் அதிகஅளவில் கலந்து கொண்டு பயன்பெற வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    Next Story
    ×