search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Manu"

    பலமுறை புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை.

    கள்ளக்குறிச்சி:

    விழுப்புரம் மாவட்டம் ஆமூர் கிராமத்தைச் சேர்ந்த சுமார் 30-க்கும் மேற்பட்ட விவசாயிகள் கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தனர். மனுவில் கூறியுள்ளதாவது:-

    விழுப்புரம் மாவட்டம் ஆமூர் கிராமத்தை ச் சேர்ந்த சுமார் 150- க்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு, கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே வேலூர் கிராம எல்லையில் சுமார் 500 ஏக்கர் விவசாய நிலம் உள்ளது. இந்த நிலத்தில் நாங்கள் நெல், கரும்பு, உளுந்து உள்ளிட்ட பயிர்களை பயிர் செய்து வருகிறோம். இந்நிலையில் எங்களது விவசாய நிலங்களுக்கு செல்லும் பொது பாதையை ஒரு சிலர் ஆக்கிரமித்துள்ளனர். இதனால் விவசாய நிலங்களுக்குச் செல்ல முடியாமல் ஏரியில் ஒத்தையடி பாதையில் வந்து செல்லும் அவல நிலை உள்ளது. இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிடம் பலமுறை புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நேரில் வந்து ஆய்வு செய்து பாதை ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும். மேலும் பொதுப் பாதையை அகற்றவில்லை என்றால் தொடர் உண்ணாவிரதப் போராட்டம் இருக்கப் போவதாகவும் மனுவில் கூறியுள்ளனர்.

    • பெரியாறு கால்வாயை சாத்தியார் அணையுடன் இணைக்க வேண்டும்.
    • கலெக்டரிடம் பா.ஜ.க.வினர் மனு அளித்தனர்.

    அலங்காநல்லூர்

    மதுரை மாவட்டம் பாலமேடு அருகே உள்ள சாத்தியார் அணையை முல்லைப் பெரியாறு கால்வாயுடன் இணைக்க வலியுறுத்தியும், அணையை தூர்வாரி ஆழப்படுத்த வேண்டியும் பா.ஜ.க. மாநில விவசாய அணி துணை தலைவர் முத்துராமன்ஜி, புறநகர் மாவட்ட தலைவர் ராஜ நரசிம்மன், மாவட்ட பொது செயலாளர் கண்ணன், பிரச்சார பிரிவு மாவட்ட தலைவர் தமிழ்முரசு மற்றும் நிர்வாகி கள் மாவட்ட கலெக்டரிடம் மனு அளித்தனர்.

    இதுகுறித்து விவசாய அணி மாநில துணைத் தலைவர் முத்துராமன்ஜி கூறியதாவது:-

    உங்கள் தொகுதியின் ஸ்டாலின் முதலமைச்சர் நிகழ்ச்சியின் தேர்தல் வாக்குறுதியில் கூறியபடி ஆட்சிக்கு வந்தவுடன் மதுரை மாவட்டத்தின் முதல் கையெழுத்து முல்லைப் பெரியாறு கால்வாய்- சாத்தையாறு அணை இணைப்பு திட்டம் என கூறிவிட்டு இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்க வில்லை. திட்டத்தை விரைவில் நிறைவேற்ற வேண்டும். இல்லாவிட்டால் விரைவில் மாநில தலைவர் அண்ணாமலை தலைமை யில் மாபெரும் சாகும் வரை உண்ணாவிரத போராட்டம் நடத்தப்படும். சாத்தியார் அணையை தூர்வார வேண்டும்.

    சிறுமலை பாதுகாக்கப் பட்ட வனப்பகுதியில் அதிகப்படியான மரங்கள் நடுவதற்கு சிறப்பு அனுமதி அளிக்க வேண்டும். சாத்தையாறு அணை மதகு பழுதை விரைந்து சரிசெய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோ ரிக்கைகளை வலியுறுத்தி மனு அளிக்கப்பட்டு உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

    • மின் கட்டண உயர்வை குறைக்க வலியுறுத்தி மதுரை மாவட்ட எம்.எல்.ஏ.க்களை சந்தித்து இன்று கோரிக்கை மனு கொடுத்தனர்.
    • தமிழகத்தில் உள்ள 10 லட்சம் குறு-சிறு தொழில் களை காப்பாற்ற முடியும்.

    மதுரை

    தமிழ்நாடு தொழில்துறை மின் நுகர்வோர்கள் கூட்ட மைப்பு ஒருங்கிணைப்பா ளர்கள் பி.என்.ரகுநாத ராஜா, பொன் குமார் வெளி யிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    மின்கட்டன உயர்வால் தமிழகத்தில் உள்ள பல்லா யிரக்கணக்கான தொழிற்சா லைகள் மிகவும் பாதிக்கப் பட்ட நிலையில் தமிழக முதல் வர் நேரடியாக தலை யிட்டு மின் கட்டண உயர்வை ரத்து செய்ய வேண்டும் என கோரி தமிழ்நாடு தொழில்துறை மின் நுகர்வோர்கள் கூட்ட மைப்பு சார்பில் தமிழகம் முழுவதிலும் உள்ள தொழிற் சாலைகள் சார்பாக தமிழக முதல்வருக்கு கோரிக்கை மனுவை தபால் மூலமாகவும், விரைவு தபால் மூலம் அனுப்பப்பட்டது.

    அதனைத் தொடர்ந்து கவனஈர்ப்பு ஆர்ப்பாட்டம், தொழில் உற்பத்தி ஒரு நாள் நிறுத்தம் கதவடைப்பு. சென் னையில் மாபெரும் உண் ணாவிரதப் போராட்டங்க ளையும் நடத்தி உள்ளோம். இது தொடர்பாக தமிழக சிறு தொழில் அமைச்சர், மின்வாரிய உயர் அதிகாரி களிடம் நடத்திய பேச்சு வார்த்தையும் தோல்வி அடைந்துள்ளது.

    எங்களது கோரிக்கைக ளில் கிலோ வாட்டுக்கான நிலை கட்டணம் குறைப்பு என்பது மிகவும் முக்கியமான கோரிக்கையாகும். எங்களது கோரிக்கைகளை முழுமை யாக நிறைவேற்றினால் மட்டுமே தமிழகத்தில் உள்ள 10 லட்சம் குறு-சிறு தொழில் களை காப்பாற்ற முடியும். அதற்கான தொடர் முயற்சி யின் ஒரு பகுதியாக ஏழாம் கட்ட கவன ஈர்ப்புக்காக இன்று (6-ந்தேதி) தமிழகம் முழுவதிலும் உள்ள அனைத்து சட்டமன்ற உறுப் பினர்களையும் நேரடியாக சந்தித்து மின் கட்டணம் உயர்வை குறைக்க வேண் டும் என்பதை தமிழக முதல் வரின் நேரடி கவனத்திற்கு கொண்டு செல்ல வேண்டும் என்பதை வலியுறுத்தி கோரிக்கை மனுவை அளிக்க இருக்கிறோம்.

    அதன்படி மதுரையில் தமிழ்நாடு தொழில் துறை மின் நுகர்வோர் கூட்ட மைப்பு சார்பாக மடீட்சியா மற்றும் இணைப்பு சங்கங்க ளின் நிர்வாகிகள் அனைவ ரும் மதுரையில் உள்ள 10 சட்டமன்ற உறுப்பினர்களை இன்று நேரில் சந்தித்து மின் கட்டண உயர்வை குறைக்க கூறும் கோரிக்கை மனுவை அவர்களிடம் சமர்ப்பிக்க உள்ளோம்.

    இவ்வாறு அவர்கள் அந்த அறிக்கையில் தெரி–வித்துள்ளனர்.

    • அப்போதே புதிய கட்டிடங்கள் கட்டவும் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்ட தாகவும் கூறப்படுகிறது.
    • பழைய தொடக்கப்பள்ளி கட்டிடத்திலேயே உயர்நிலைப் பள்ளி இயங்கி வருகிறது.

    கடலூர்:

    விருத்தாசலம் தாலுக்கா மங்கலம்பேட்டை அருகே கோ.பவழங்குடியில் அரசு உயர்நிலைப் பள்ளி இயங்கி வருகிறது. தொடக்கப் பள்ளியாக செயல்பட்ட இப்பள்ளி கடந்த 2017-ம் ஆண்டு உயர்நிலை பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டது. அப்போதே புதிய கட்டிடங்கள் கட்டவும் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்ட தாகவும் கூறப்படுகிறது. தரம் உயர்த்தப்பட்ட இப்பள்ளியில் கோ.பூவனூர், மாத்தூர், வயலூர் மற்றும் கோ.பவழங்குடியை சேர்ந்த 240 மாணவ, மாணவியர் இங்கு பயின்று வருகின்றனர். இவர்கள் அனைவரும் தொடக்கப்பள்ளிக்கென கட்டப்பட்ட 10 வகுப்பறையில் அமர்ந்து பயில்கின்றனர். அதாவது 1 முதல் 3-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்கள் அனைவரும் ஒரு வகுப்பறையிலும், 4. 5-ம் வகுப்பு மாணவர்கள் மற்றொரு வகுப்பறையிலும், 6 முதல் 10-ம் வகுப்பு வரை உள்ள மாணவர்கள் தனித்தனி வகுப்பறையிலும் பயின்று வருகின்றனர். இந்த கட்டிடமும் மிகவும் பழைமையானது என்பதால், கட்டிடத்தின் காரைகள் மாணவர்கள் மீது விழுகின்றன. அப்போதெல்லாம் மாணவர்கள் வெளியில் அமரவைக்கப்பட்டும், கலை அரங்கத்திலும் அமர வைக்கப்படு கின்றனர்.

    எனவே, உயர்நிலை பள்ளிக்கென புதிய கட்டிடம் கட்ட வேண்டு மென மாணவர்களின் பெற்றோர் கல்வி அமைச்சர், கல்வி செயலாளர், மாவட்ட கலெக்டர், அமைச்சர்கள் என அனைவரிடமும் மனு கொடுத்தனர். 3 ஆண்டு களாக மனு கொடுத்தும் பள்ளியின் நிலை மாறாமல் பழைய தொடக்கப்பள்ளி கட்டிடத்தி லேயே உயர்நிலைப் பள்ளி இயங்கி வருகிறது. இதனால் ஆத்திர மடைந்த மாணவர்கள் இன்று காலை வகுப்ப றைக்குள் செல்லாமல் புறக்கணித்து பள்ளியின் முன்பாக அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட னர். பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர் பேச்சு நடத்திய போதும் மாணவர்கள் போராட்டத்தை தொடர்ந்தனர். மாணவர்களின் போராட்டத்தை அறிந்த அவரது பெற்றோர்களும் பள்ளிக்கு விரைந்து வந்து மாணவர்களுடன் சேர்ந்து போராட்டம் நடத்தினர்.

    இது குறித்த தகவல் அறிந்து மங்கலம்பேட்டை சப்-இன்ஸ்பெக்டர் தேவி மற்றும் போலீ சார் பள்ளிக்கு விரைந்து வந்தனர். போராட்டம் நடத்தி வந்த மாணவர்க ளிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். மாணவர்களின் நியாயமான கோரிக்கை குறித்து அரசு அதிகாரி களிடம் தெரிவித்து, விரைவில் பள்ளிக்கு புதிய கட்டிடம் கட்டித்தர நடவடிக்கை எடுப்பதாக சப்-இன்ஸ்பெக்டர் தேவி மாணவர்களிடம் உறுதியளித்தார். இதனை யேற்ற மாணவர்கள் போராட்டத்தை கைவிட்டு வகுப்பிற்கு சென்றனர். மாணவர்களின் திடீர் போராட்டத்தால் அப்பகுதியில் திடீர் பரபரப்பு ஏற்பட்டது.

    ஆண்டுக்கு ஒரு முறை மட்டுமே மழையை நம்பி விவசாயம் செய்யும் விவசாயிகளான நாங்கள் எங்கள் குழந்கதைளின் கல்வி செலவு, உணவு மற்றும் மருத்துவ செலவுகள் எப்படி சமாளிப்பது என்று தெரியாமல் பரிதவித்து வருகின்றோம்.

    கடலூர்:

    கடலூர் கலெக்டர் அலுவ லகத்தில் இன்று காலை முதல் ஏராளமான பொது மக்கள் மக்கள் குறை தீர்ப்பு கூட்டத்தில் கோரிக்கை மனு அளித்தனர். இந்த நிலையில் திட்டக்குடி அருகே உள்ள மங்களூர் ஒன்றியம் தொழுதூர் மற்றும் திட்டக்குடி மேற்கு குறுவட்டத்தை சேர்ந்த விவசாயிகள் இன்று காலை கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தனர்.அப்போது மழை பெய்து கொண்டு இருந்த நிலையில் விவசாயிகள் திடீ ரென்று தாங்கள் கொண்டு வந்த கருகிய மக்கா சோளத் துடன் திரண்டு நின்றனர்.அவர்கள் வைத்தி ருந்த மனுவில் கூறப்பட்டிருந்ததா வது:-எங்கள் பகுதியில் சுமார் 30 ஆயிரத்துக்கு மேற்பட்ட ஏக்கரில் மக்கா சோளம் பயிரிட்டு இருந்தோம். மானாவாரி விவசாயி களான நாங்கள் மழைைய நம்பி வங்கியில் கடன் பெற்று நகைகளை அடகு வைத்து 30 ஆயிரம் முதல் 40 ஆயிரம் வரை செலவு செய்து இருந்தோம். கடந்த சில மாதங்களாக போதிய மழை பெய்யாததால் நாங்கள் பயிரிட்ட மக்காச்சோளம் முழுவதும் கருகி படைப்புழுக்களுக்கு இரையாகி உள்ளது

    ஆண்டுக்கு ஒரு முறை மட்டுமே மழையை நம்பி விவசாயம் செய்யும் விவசாயிகளான நாங்கள் எங்கள் குழந்கதைளின் கல்வி செலவு, உணவு மற்றும் மருத்துவ செலவுகள் எப்படி சமாளிப்பது என்று தெரியாமல் பரிதவித்து வருகின்றோம். மேலும் 90 நாளான மக்காச்சோளம் பயிரிட்டு 80 நாட்கள் கடந்த நிலையில் இனி மழை பெய்தாலும் உரிய மகசூல் பெற இயலாத நிலையில் உள்ளோம். ஆகையால் எங்கள் வாழ்வாதாரத்தை மேம்படுத்த உரிய நிவாரணம் வழங்க வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.

    • பொதுமக்களிடம் குறைகள் கேட்டு மனுக்களை மாவட்ட கலெக்டர் பெற்றார்.
    • மாவட்டம் முழுவதிலும் உள்ள பிரச்சினைகளை சரிசெய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்று கலெக் டர் தெரிவித்தார்.

    முதுகுளத்தூர்

    ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் விஷ்ணு சந்திரன் முதுகுளத்தூர் தாலுகா மைக்கேல் பட்டணம் கிரா மத்தில் பொதுமக்களி டம் குறைகள் கேட்டு அவர்களி டம் இருந்து மனுக்களை பெற்றார். முன்னதாக அவரை மைக்கேல் பட்ட ணம் ஊராட்சி மன்ற தலை வர் குழந்தை தெரஸ் சிங்க ராயர் வரவேற்றார்.

    அப்போது கலெக்டர் விஷ்ணுசந்திரன், பொதுமக் களிடம் போதுமான குடிநீர் கிடைக்கிறதா? நிலத்தடி நீர் உள்ளதா? என கேட்டறிந் தார். இதற்கு பதிலளித்த பொதுமக்கள் குடிநீர் தின சரி வருவதில்லை எனவும், சிலநேரங்களில் சிரமம் ஏற்படுகிறது என தெரிவித் தனர். மேலும் கலெக்டரிடம் போர்வெல் அமைத்துத்தர வேண்டும் என ஊராட்சி மன்ற தலைவர் கோரிக்கை விடுத்தார்.

    மைக்கேல் பட்டணம் பஞ்சாயத்து எல்லையில் சோலார் பிளாண்ட் உள் ளது. ஆனால் தொழில் வரி செல்லூர் பஞ்சாயத்தில் செலுத்தப்படுகிறது. சோலார் பிளாண்டை சுற்றி யுள்ள சாலைகளை மைக் கேல் பட்டணம் ஊராட்சி தான் மராமத்து செய்து வருகிறது. ஆகையால் மைக் கேல் பட்டணம் ஊராட்சி எல்லையில் உள்ள சோலார் பிளாண்ட் தொழில் வரியை மைக்கேல் பட்டணம் ஊராட்சியில் செலுத்தினால் ஊராட்சித் வளர்ச்சியடை யும் என்றார். மேலும் பட்டா இல்லாத வீடுகளுக்கு பட்டா வழங்க வேண்டும் என கோரிக்கை மனு கொடுத்த னர். மேலும் பேவர்பிளாக் சாலை, கல்வெட்டுகள் வேலை முடிக்கப்படாமல் உள்ளவற்றை சுட்டிக் காட்டி உடனடியாக முடிக்க வேண் டும் என உத்தரவிட்டார்.

    நிகழ்ச்சியில் மண்டல துணை தாசில்தார் சங்கர், கிராம நிர்வாக அலுவலர் பிரபாவதி, ஊராட்சி எழுத் தர் லீலாவதி ஆகியோர் கலந்து கொண்டனர். பின் னர் பிரபக்கவூர் ஊராட்சி மீசல் கிராமத்தில் கலெக்டர் விஷ்ணு சந்திரன் பொதுமக் களிடம் குறைகள் கேட்டார். பிரபக்களுர் ஊராட்சி மன்ற தலைவர் தீப்ரநீதிரா ஜன் வரவேற்றார். குடிநீர், மின்விநியோகம் சாலை வசதி ஆகியவற்றை கேட்ட றிந்தார். மீசல் கிராமம் முழுவதும் மண் சாலையாகவே உள் ளன. இதனை பேவர் பிளாக் சாலையாக மாற்றித் தரவேண்டும் எனவும், போர்வெல் அமைத்துதர வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தனர். மாவட்டம் முழுவதிலும் உள்ள பிரச்சினைகளை சரிசெய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்று கலெக் டர் தெரிவித்தார்.

    • தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படை தாக்குதல்கள் தடுத்து நிறுத்தப்பட வேண்டும்.
    • டெல்லியில் மத்திய மந்திரியிடம் ஏ.ஐ.டி.யூ.சி. மீனவ குழுவினர் மனு அளித்தனர்.

    ராமேசுவரம்

    மன்னார் வளைகுடா கடலில் காற்றாலை அமைக் கும் திட்டம், கடல் அட்டை தடை நீக்கம், இலங்கை கடற் படை தாக்குதல் உள்ளிட்ட பிரச்சினைகளுக்கு தீர்வு காண நடவடிக்கை எடுக்க கோரி மத்திய மீன்வளம் மற்றும் கால்நடைத்துறை அமைச்சர் பர்ஷோத்தம் ரூபாலாவை ஏ.ஐ.டி.யூ.சி. மீனவ சங்க நிர்வாக குழுவி னர் டெல்லியில் சந்தித்து மனு அளித்தனர்.

    ஏ.ஐ.டி.யூ.சி. மீனவ சங்க மாநிலச் செயலாளர் சி.ஆர்.செந்தில்வேல் தலைமையில் மீனவர் சங்க நிர்வாகிகள் குழுவினர் அளித்த மனுவில் கூறியதாவது:-

    மந்திரியிடம் மனு

    மன்னார் வளைகுடா பகுதி ராமநாதபுரம் மாவட் டம் பாம்பன் தீவு முதல் கன்னியாகுமரி மாவட்டம் வரை பரவியுள்ளது. இது 10,500 சதுர கி.மீ. பரப்ப ளவைக் கொண்டது. இதில் பாம்பன் முதல் தூத்துக்குடி மாவட்டம் வரை 560 சதுர கி.மீ. பரப்பளவைக்கொண்ட 21 தீவுகள் மன்னார் வளை குடா கடல் வாழ் உயிரின தேசியப் பூங்காவாக 1986-ல் மத்திய அரசால் அறிவிக் கப்பட்டு பாதுகாக்கப்பட்டு வருகிறது.

    இது தென்கிழக்கு ஆசியா வில் ஏற்படுத்தப்பட்ட முதல் கடல்சார் தேசியப் பூங்காவாகும். இப்பகுதியில் 2,700-க்கும் மேற்பட்ட பல்வகை கடல் வாழ் உயிரி னங்கள் காணப்படுகின்றன. இப்படிப்பட்ட சூழலியல் முக்கியத்துவம் வாய்ந்த கடல் பகுதியில் கடலில் காற்றாலை அமைக்கும் திட்டம் கொண்டு வருவது மீன் வளத்தையும் கடல் வாழ் உயிரினங்களுக்கும் பெரும் அச்சுறுத்தலாக அமையும். அத்துடன் மீன வர் வாழ்வாதாரம் பேர ழிவை சந்திக்கும் என்பதால் இத்திட்டத்தை ரத்து செய்ய வேண்டுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

    இலங்கை கடற்படையி னர் பல ஆண்டுகளாக நமது மீனவர்கள் மீது நடத்தப்படும் தாக்குதல்கள் தடுத்தது நிறுத் தப்பட்டவேண்டும். இப்பி ரச்சினைக்கு நிரந்தர தீர்வு கான ஆழ்கடல் மீன்பிடித் திட்டத்தின் கீழ் மீனவர்க ளுக்கு 100 சதவீதம் மானி யத்துடன் ஆழ்கடல் மீன்பிடி படகுகள் வழங்கப்பட வேண்டும். ஏற்கனவே வழங்கப்பட்ட ஆழ்கடல் மீன்பிடி படகுகளுக்கான கடன்கள் தள்ளுபடி செய்ய வேண்டும்.

    மத்திய அரசு கடந்த 2001-ம் ஆண்டு முதல் கடல் அட்டைகளை பிடிக்க தடை விதித்துள்ளது. இந்த தடையை நீக்கி, மீனவர்கள் நலன் கருதி கடல் அட்டை களை ஏற்றுமதி செய்ய நட வடிக்கை எடுக்க வேண்டும் என மீனவர்கள் எதிர்பார்க் கின்றனர். கடல் அட்டைகள் பிடிப்பதற்கான சிறப்பு வலை இல்லாததால், கடல் அட்டைகள் மீன்பிடி வலை யில் தானாகவே சிக்குகின் றன. கடல் அட்டைகள் அழிந்து வரும் இனம் அல்ல ஆறு மாதங்களுக்கு ஒரு முறை 10 லட்சம் குஞ்சுகளை பொரிக்கும் திறன் கொண் டது

    கடந்த 22 ஆண்டுகளாக கடல் வெள்ளரிக்கு விதிக் கப்பட்ட தடையால் அதனை நம்பியுள்ள மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப் பட்டுள்ளது. பல வெளிநா டுகளில் கடல் அட்டைகளை பிடித்தல் முறைப்படுத்தப் பட்டு அனு மதி வழங்கப்பட் டுள்ளது. இதனை அடிப்ப டையாகக் கொண்டு நமது நாட்டிலும் அனுமதி வழங்கு மாறு கேட்டுக்கொள்கின் றோம்.

    இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது.

    இந்த குழுவில் ஏ.ஐ.டி.யூ.சி. நிர்வாகிகள் செந்தில், அழகுபாண்டி, முகேஷ், மீனவ மகளிர் சங்க நிர்வாகிகள் வடகொரியா, ஏ.சண்முககனி, காளியம் மாள், அனிதாசீலி, லெட்சுமி, ஆ.நம்பு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    • இந்து முன்னணி நிர்வாகிகள் திண்டிவனம் போலீஸ் நிலையத்தில் புகார் மனு அளித்தனர்.
    • எழிலரசன் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்

    விழுப்புரம்:

    திண்டிவனம் பாஜக வழக்கறிஞர்கள் சங்கத்தின் மாநில துணைத்தலைவர் செந்தில்குமார் தலைமையில் வக்கீல் பாலசுப்பிரமணியன், இந்து முன்னணி மாவட்ட செயலாளர் பிரபு மற்றும் வக்கீல்கள், இந்து முன்னணி நிர்வாகிகள் திண்டிவனம் போலீஸ் நிலையத்தில் புகார் மனு அளித்தனர். அதில் சனாதானம் குறித்து தவறாக பேசிய அமைச்சர் உதயநிதி மீதும், சங்கரமடத்தை தகர்த்தெறி வோம் என்று பேசிய விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகி எழிலரசன் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டிருந்தது.

    • 32 குடும்பங்களை சேர்ந்தவர்கள் வசித்து வருகிறோம்.
    • ஆலடிக்குமுளை பக்கத்தில் உள்ள முனி கோவில் பின்புறம் நத்தம் புறம்போக்கு உள்ளது.‌

    தஞ்சாவூர்:

    தஞ்சை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடந்த குறைதீர்க்கும் கூட்டத்தில் பட்டுக்கோட்டை பாலிடெக்னிக் சாலை நரியம்பாளையம் தெற்கு பகுதியை சேர்ந்த பெண்கள் 30-க்கும் மேற்பட்டோர் அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது :-

    பட்டுக்கோட்டை புதிய பஸ் நிலையம் நரியம்பாளை யத்தின் தென்புறம் வேலை நடைபெற்று வருகிறது. இதன் அருகில் 32 குடும்ப ங்களை சேர்ந்தவர்கள் வசித்து வருகிறோம். எங்களுக்கு பூவானம் கிராமத்தில் இடம் ஒதுக்கி உள்ளதாக தெரிகிறது. ஆனால் நரியம்பாளை யத்திற்கும் , பூவானம் கிராமத்திற்கும் 15 கி.மீ. இருப்பதால் நாங்கள் அனைவரும் அங்கு செல்வது மிகவும் கஷ்டமாக இருக்கும்.

    குழந்தைகள், பெரியவர்களை அங்கிருந்து அழைத்துச் செல்ல முடியாது. போதிய பஸ் வசதியும் கிடையாது. எனவே எங்களுக்கு ஆலடிக்குமுளை பக்கத்தில் உள்ள முனி கோவில் பின்புறம் நத்தம் புறம்போக்கு உள்ளது. அந்த இடத்தில் இடம் வழங்க வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • குறித்த காலத்திற்குள் தீர்வு வழங்கிட வேண்டும்
    • மனுக்களை நேரடியாக பெறப்பட்டு உரிய நடவடிக்கை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டது.

    விழுப்புரம்:

    விழுப்புரம் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில், கலெக்டர் பழனி தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று நடைபெற்றது. பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்கள் பெற்று மனுதாரர்கள் முன்னிலையில் விசாரணை மேற்கொண்டு தொடர்பு டைய அலுவலர்கள் மனுக்கள் மீது உடனடியாக கவனம் எடுத்து குறித்த காலத்திற்குள் தீர்வு வழங்கிட வேண்டும் என அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.

    இதில் 452 மனுக்கள் பெறப்பட்டது. அதில் முதியோர் உதவித்தொகை, வீட்டுமனை பட்டாக் கோருதல், ஆதரவற்றோர் உதவித்தொகை, பட்டா மாறுதல், தொழில் தொடங்க கடனுதவி கோருதல், பிரதம மந்திரி வீடு கட்டும் திட்டம், முதலமைச்சரின் பசுமை வீடு திட்டம் உட்பட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுக்களை நேரடியாக பெறப்பட்டு உரிய நடவடிக்கை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டது. தொடர்ந்து, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில், மாற்றுத்திறனாளிக்கு 3சக்கர கை மிதிவண்டியினை கலெக்டர் பழனி வழங்கினார். இதில் மாவட்ட வருவாய் அலுவலர் பரமேஸ்வரி, மாவட்ட வருவாய் அலுவலர் (நில எடுப்பு) சரஸ்வதி, தனித்துணை கலெக்டர் விஸ்வநாதன், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் தங்கவேலு உட்பட துறை சார்ந்த அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

    • 100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்தின் கீழ் என் மனை விக்கு வேலை வேண்டி விண்ணப்பித்திருந்தேன்.
    • வேலைக்கு வராமல் வேலை செய்ததாக முறைகேடாக பண பரிவர்த்தனை செய்துள்ளனர்.

    கடலூர்:

    கடலூர் கலெக்டர் அலு வலகத்தில் இன்று குறைகேட்பு கூட்டம் நடை பெற்றது. குறிஞ்சிப்பாடி கருங்குழி பகுதியை சேர்ந்த ராஜேந்திரன், அவரது மனைவி ஆகியோர் மனு அளிக்க வந்தனர்.  100 நாள் வேலை திட்டத்தில் வேலை வழங்க வேண்டும். 18 வயது பூர்த்தி அடையாத சிறுவர்களை வேலையில் அமர்த்திய ஊராட்சி மன்ற தலைவரை கண்டித்து பதாகைகள் ஏந்தி நின்றிருந்தனர். மேலும் ராஜேந்திரன் சில்வர் பாத்திரம் மற்றும் மண்வெட்டி ஆகியவற்றை மாலையாக கழுத்தில் மாட்டிக் கொண்டிருந்தார். அப்போது அவர் வைத்திருந்த மனுவில் கூறியிருப்பதாவது:-

    எங்கள் கிராமத்தில் 100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்தின் கீழ் என் மனை விக்கு வேலை வேண்டி விண்ணப்பித்திருந்தேன். ஆனால் இதுநாள் வரை என் மனைவிக்கு இந்த திட்டத்தில் வேலை தர மறுக்கின்றனர். பலமுறை இது சம்பந்தமாக அதிகாரிகளிடம் கேட்டறிந்தும் நடவடிக்கை ஏதும் எடுக்கவில்லை. மேலும் வேலை அட்டை பதிவு செய்யவில்லை. ஆனால் ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் அவரது உறவினர்கள் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலையில் பள்ளி மாணவர்கள், கல்லூரி மாணவர்கள் இந்த வேலை திட்டத்தில் சேர்த்து முறைகேடு செய்துள்ளனர். மேலும் 100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்தில் வேலைக்கு வராமல் வேலை செய்ததாக முறைகேடாக பண பரிவர்த்தனை செய்துள்ளனர். ஆகையால் இது சம்பந்தமாக உரிய விசாரணை நடத்தி 100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்தில் அனைவருக்கும் சமமாக வேலை வழங்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் அவர் கூறியிருந்தார்.

    • திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் இந்நாள் வரையில் எந்த விதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை.
    • சார் ஆட்சியர் ஐஸ்வர்யா ராமநாதனிடம் கோரிக்கை மனு அளித்தனர்.

    பொன்னேரி:

    பொன்னேரி அடுத்த பழவேற்காடு ஊராட்சிக்கு உட்பட்ட கள்ளுக்கடைமேடு கிராம மக்கள் 6 தலைமுறையாக வசித்து வருகின்றனர். கடந்த ஐந்தாண்டு காலமாக வீட்டுமனைகள் இல்லை எனக்கோரி கடந்த 2020-ம் ஆண்டும் 2022-ம் ஆண்டும் பொன்னேரி கோட்டாட்சியரிடம் மனு அளித்துள்ளனர். இதை தொடர்ந்து பொன்னேரி கோட்டாட்சியர் குழு அமைத்து பட்டா தருவதற்கான முகாந்திரம் உள்ளதால் பட்டாதாரர்களுக்கான பயனாளிகள் பட்டியல் மற்றும் வரைபடம் தயார் செய்து மாவட்ட கலெக்டருக்கு அனுப்பி உள்ளார்.

    ஆனால் திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் இந்நாள் வரையில் எந்த விதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதை தொடர்ந்து அப்பகுதி மக்கள் பொன்னேரி கோட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு சார் ஆட்சியர் ஐஸ்வர்யா ராமநாதனிடம் கோரிக்கை மனு அளித்தனர்.

    அதில் இனிவரும் மழை காலங்களில் தங்குவதற்கான இட வசதி இல்லாத காரணத்தினால் கடந்த 10-7-2023 அன்று முன்னாள் முதல்வர் கருணாநிதி நூற்றாண்டு விழாவை முன்னிட்டு வெளியிடப்பட்ட இலவச பட்டாக்கள் வழங்கும் உத்தரவு பிறப்பிக்கப் பட்டுள்ளதை உடனடியாக செயல்படுத்த திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் உத்தரவிடும்படி வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

    மேலும் தேர்வு செய்யப்பட்ட நிலத்தில் ஏற்கனவே தயார் செய்த பயனாளிகள் பட்டியல் மற்றும் வரைபடத்தை கொண்டு உடனடியாக பயனாளிகளை தற்காலிக குடிசைகள் அமைக்க அனுமதி வழங்க உத்தரவிடும் படியும் வலியுறுத்தி உள்ளனர்.

    ×