என் மலர்
நீங்கள் தேடியது "Beneficiary"
- பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 510 மனுக்கள் பெறப்பட்டது.
- பயனாளிக்கு ஒருவருக்கு விலையில்லா இலவச வீட்டு மனை பட்டாவிற்கான ஆணை.
தஞ்சாவூர்:
தஞ்சாவூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்ற பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தலைமையேற்று பேசியதாவது:-
மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் இலவச வீட்டுமனை பட்டா, முதியோர் உதவித்தொகை, குடும்ப அட்டை, பட்டா மாற்றம், கல்வி கடன் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 510 மனுக்கள் பெறப்பட்டது.
இந்த மனுக்களை விசாரணை செய்து உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.
மேலும், மனுக்கள் மீது மேற்கொள்ளப்படும் நடவடிக்கை குறித்த விவரத்தை உடனடியாக மனுதாரருக்கு தெரிவிக்க சம்பந்தப்பட்ட அலுவ லர்களுக்கு அறிவுறுத்த ப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
அதனைத் தொடர்ந்து அவர், சமூக பாதுகாப்பு திட்டத்தின் மூலம் முதலமைச்சரின் உழவர் பாதுகாப்புத்திட்டத்தின் கீழ் தற்காலிக இயலாமை உதவித்தொகை பெறுவ தற்கான ஆணையினை 1 நபருக்கும், தஞ்சாவூர் வட்டத்தைச் சார்ந்த 1 பயனாளிக்கு விலையில்லா இலவச வீட்டு மனை பட்டாவிற்கான ஆணை யினையும் வழங்கினார்.
பின்னர் மாவட்ட நிர்வாகம் மற்றும் தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் சார்பில் "நெகிழி மாசில்லா தஞ்சாவூர் மாவட்டம்" என்ற சுற்றுச்சூழல் திட்ட செயலாக்க புத்தகத்தினை வெளியிட்டார்.
இக்கூட்டத்தில் கூடுதல் கலெக்டர்கள் சுகபுத்ரா (வருவாய்), ஸ்ரீகாந்த் (வளர்ச்சி), தனித்துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்பு திட்டம்) தவவளவன், தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரிய மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் ரவிக்குமார் மற்றும் அனைத்து அரசுத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
- 53 பயனாளிகளுக்கு தலா ரூ.50 ஆயிரம் வீதம் நலத்திட்ட உதவிகள் வழங்கல்.
- 44 ஊராட்சிகளிலும் தேசியக்கொடி ஏற்றப்பட்டு கிராமசபை கூட்டம் நடைபெற்றது.
திருவாரூர்:
இந்திய குடியரசின் 74-வது தினத்தை முன்னிட்டு கொரடாச்சேரி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் தேசிய கொடி ஏற்றுதல் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
ஒன்றிய குழு தலைவர் உமாபிரியா தேசிய கொடியை ஏற்றி வைத்தார்.
நிகழ்ச்சியில் இரு பெண் குழந்தைகள் பாது காப்பு திட்டத்தின் கீழ் 53 பயனாளிகளுக்கு தலா ரூ.50 ஆயிரம் வீதம் நலத்திட்ட உதவிகளை பூண்டி கலைவாணன் எம்.எல்.ஏ. வழங்கினார்.
மேலும் ஒன்றியக்குழுத் தலைவர் உமாபிரியா தலைமையில் பெண்கள் பாதுகாப்பு குறித்த உறுதிமொழி ஏற்கப்பட்டது.
நிகழ்ச்சியில் ஒன்றியக்குழு துணைத்தலைவர் பாலச்சந்திரன், ஒன்றியக் குழு உறுப்பினர்கள் சத்தியே ந்திரன், நாகூரான், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் விஸ்வநாதன் மற்றும் முத்துக்குமரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
ஒன்றியத்திற்குட்பட்ட 44 ஊராட்சிகளிலும் தேசியக்கொடி ஏற்றப்பட்டு கிராமசபை கூட்டங்களும் நடைபெற்றது.
- பல்வேறு கோரிக்கைகள் குறித்த 192 மனுக்களை கலெக்டரிடம் அளித்தனர்.
- சம்மந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் வழங்கி உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ளுமாறு உத்தரவிட்டார்.
திருவாரூர்:
திருவாரூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நடந்த மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்துக்கு கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன் தலைமை தாங்கினார்.
கூட்டத்தில் பொதுமக்கள் பட்டா மாறுதல், புதிய குடும்ப அட்டை, ஆக்கிரமிப்பு அகற்றுதல், கல்விக்கடன், வீட்டுமனைப் பட்டா உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் குறித்த 192 மனுக்களை கலெக்டரிடம் அளித்தனர்.
பொதுமக்களிடம் இருந்து மனுக்களை விசாரித்து பெற்றுக்கொண்ட கலெக்டர் அதனை சம்மந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் வழங்கி குறித்த காலத்திற்குள் உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ளுமாறு உத்தர விட்டார். அதனைத்தொடர்ந்து, மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில் பயனாளிக்கு ஊன்று கோலினை வழங்கினார்.
இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் சிதம்பரம், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் பாலசந்திரன், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை அலுவலர் புவனா உள்ளிட்ட பல்வேறு துறை அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.