330 பயனாளிகளுக்கு ரூ.51 லட்சத்தில் நலத்திட்ட உதவிகள் வழங்கல்

முகாமில் பல்வேறு கோரிக்கைகள் தொடா்பாக 180 மனுக்கள் வரப்பெற்றன.மொத்தம் ரூ. 51 லட்சத்து 11 ஆயிரத்து 407 மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் 330 பயனாளிகளுக்கு வழங்கப்பட்டன.
விவசாயிகளுக்கு பயன்பாட்டு பொருட்களை கலெக்டர் தினேஷ்பொன்ராஜ் ஆலிவர் வழங்கினார்.
விவசாயிகளுக்கு பயன்பாட்டு பொருட்களை கலெக்டர் தினேஷ்பொன்ராஜ் ஆலிவர் வழங்கினார்.
Published on

தஞ்சாவூர்:

தஞ்சை மாவட்டம் திருவையாறு அருகே திருவேதிக்குடி கிராமத்தில் மக்கள் நோ்காணல் முகாம் நடைபெற்றது.

இதில் கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தலைமை தாங்கி 330 பயனாளிகளுக்கு ரூ. 51 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.

பின்னர் அவர் பேசியதாவது :-

மக்கள் நேர்காணல் முகாமில் பல்வேறு கோரிக்கைகள் தொடா்பாக 180 மனுக்கள் வரப்பெற்றன.

அவற்றை விசாரித்து உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள தொடா்புடைய அலுவலா்களுக்கு அறிவுறு த்தப்பட்டுள்ளது .

இந்த முகாமில் பல்வேறு துறைகள் சாா்பில் வீட்டு மனை பட்டாவுக்கான ஆணைகள், மாதாந்திர ஓய்வூதிய தொகைக்கான ஆணை, விவசாயப் பயன்பாட்டுப் பொருள்கள், தொழில் முனைவோா்களுக்கு காசோலை, குழுக் கடன் உள்பட மொத்தம் ரூ. 51 லட்சத்து 11 ஆயிரத்து 407 மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் 330 பயனாளிகளுக்கு வழங்கப்பட்டன.

இவ்வாறு அவர் பேசினார்.

முன்னதாக அவர் வருவாய்த்துறை, வேளாண்மை , தோட்டக்கலை, சமூகம், சுகாதாரம் மற்றும் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித் துறையின் சார்பில் திட்டங்கள் மற்றும் சாதனைகள் குறித்து அமை க்கப்பட்டிருந்த அரங்குகளை பார்வை யிட்டார்.

இந்த முகாமில் கூடுதல் ஆட்சியா் (வருவாய்) சுகபுத்ரா, தஞ்சாவூா் கோட்டாட்சியா் (பொ) பழனிவேல், தனித்துணை ஆட்சியா் (சமூகப் பாதுகாப்பு திட்டம்) தவவளவன், தோட்டக்கலை த்துறை துணை இயக்குனர் கலைச்செல்வன், தாசில்தார் சக்திவேல், மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவா் உஷா புண்ணியமூா்த்தி, தஞ்சாவூா் ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவா் வைஜெயந்தி மாலா கேசவன், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனா்.

X

Maalai Malar
www.maalaimalar.com