12 பயனாளிகளுக்கு ரூ.1.57 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவி வழங்கல்

கல்வி கடன் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 27 மனுக்கள் பெறப்பட்டது.மனுக்கள் மீது உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.
கூட்டத்தில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் வழங்கினார்.
கூட்டத்தில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் வழங்கினார்.
Published on

தஞ்சாவூர்:

தஞ்சாவூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் முன்னாள் படைவீரர்கள் மற்றும் அவர்களைச் சார்ந்தோர்க ளுக்கான சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது.

இதற்கு மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தலைமையேற்று பேசியதா வது:-

சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் இலவச வீட்டுமனை பட்டா, வேலைவாய்ப்பு மற்றும் கல்வி கடன் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 27 மனுக்கள் பெறப்பட்டது.

இந்த மனுக்களை விசாரணை செய்து உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது .

மேலும், மனுக்கள் மீது மேற்கொள்ள ப்படும் நடவடிக்கை குறித்த விவரத்தை உடனடியாக மனுதாரருக்கு தெரிவிக்க சம்பந்தப்பட்ட அலுவலர்க ளுக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.பின்னர் அவர், முன்னாள் படைவீரர் நலத்துறையின் சார்பில் 12 பயனாளிகளுக்கு ரூ.1,57,500 மதிப்பில் தொகுப்பு நிதி கல்வி உதவித்தொகை, ஊனமுற்றோர் நிதி உதவி, கண் கண்ணாடி நிதி உதவி மற்றும் ஈமச் சடங்கு உதவித் தொகைக்கான காசோலை களையும் வழங்கினார்.

இக்கூட்டத்தில் தஞ்சாவூர் மாவட்ட முப்படை வீரர் வாரிய உப தலைவர் மேஜர் பாலகிருஷ்ணன், தஞ்சாவூர் மாவட்டம் முன்னாள் படைவீரர் நல உதவி இயக்குனர் மேஜர் சரவணன் (ஓய்வு) மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com