பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவி வழங்கல்

53 பயனாளிகளுக்கு தலா ரூ.50 ஆயிரம் வீதம் நலத்திட்ட உதவிகள் வழங்கல்.44 ஊராட்சிகளிலும் தேசியக்கொடி ஏற்றப்பட்டு கிராமசபை கூட்டம் நடைபெற்றது.
பூண்டி கலைவாணன் எம்.எல்.ஏ. பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.
பூண்டி கலைவாணன் எம்.எல்.ஏ. பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.
Published on

திருவாரூர்:

இந்திய குடியரசின் 74-வது தினத்தை முன்னிட்டு கொரடாச்சேரி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் தேசிய கொடி ஏற்றுதல் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

ஒன்றிய குழு தலைவர் உமாபிரியா தேசிய கொடியை ஏற்றி வைத்தார்.

நிகழ்ச்சியில் இரு பெண் குழந்தைகள் பாது காப்பு திட்டத்தின் கீழ் 53 பயனாளிகளுக்கு தலா ரூ.50 ஆயிரம் வீதம் நலத்திட்ட உதவிகளை பூண்டி கலைவாணன் எம்.எல்.ஏ. வழங்கினார்.

மேலும் ஒன்றியக்குழுத் தலைவர் உமாபிரியா தலைமையில் பெண்கள் பாதுகாப்பு குறித்த உறுதிமொழி ஏற்கப்பட்டது.

நிகழ்ச்சியில் ஒன்றியக்குழு துணைத்தலைவர் பாலச்சந்திரன், ஒன்றியக் குழு உறுப்பினர்கள் சத்தியே ந்திரன், நாகூரான், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் விஸ்வநாதன் மற்றும் முத்துக்குமரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

ஒன்றியத்திற்குட்பட்ட 44 ஊராட்சிகளிலும் தேசியக்கொடி ஏற்றப்பட்டு கிராமசபை கூட்டங்களும் நடைபெற்றது.

X

Maalai Malar
www.maalaimalar.com