search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Apartment houses"

    • 432 குடியிருப்புகள் கொண்ட அடுக்குமாடி வீடு குடியிருப்புகள் கட்டப்பட்டு வருகின்றன.
    • ரூ. 3.08 லட்சத்தை பயனாளிகள் பங்களிப்பு தொகையாக செலுத்த வேண்டும்.

    திருப்பூர்,அக்.24-

    தமிழ்நாடு நகா்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய திருப்பூா் கோட்டம் விடுத்துள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:-

    பல்லடம் ஒன்றியம், சுக்கம்பாளையம் ஊராட்சி கோவை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் பெரும்பாளி கிராமத்தில் உயா்தொழில்நுட்ப ஜவுளி பூங்கா அருகே, 8 தளங்களுடன், 432 குடியிருப்புகள் கொண்ட அடுக்குமாடி வீடு குடியிருப்புகள் கட்டப்பட்டு வருகின்றன. இவற்றுக்கு பயனாளிகள் தோ்வு செய்வதற்கான விண்ணப்பங்கள் தற்போது பெறப்பட்டு வருகின்றன. இதற்காக ரூ. 3.08 லட்சத்தை பயனாளிகள் பங்களிப்பு தொகையாக செலுத்த வேண்டும்.

    பயனாளிகள் திருமணமானவராகவும், நகராட்சி பகுதிக்குள் வசிப்பவராகவும், ஆண்டு வருமானம், ரூ.3 லட்சத்துக்குள்ளும் இருக்க வேண்டும். பயனாளி மற்றும் குடும்ப உறுப்பினருக்கு சொந்த வீடு, வீட்டுமனை இருக்கக் கூடாது. குடும்பத் தலைவா் மற்றும் உறுப்பினா்களின் ஆதாா் அட்டை, பயனாளியின் புகைப்படம், ரேஷன் காா்டு நகல், வாக்காளா் அடையாள அட்டை மற்றும் வங்கிக் கணக்கு புத்தக நகல் ஆகியவற்றுடன் நவம்பா் 10-ந்தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

    மேலும், இது குறித்து தொடா்புக்கு 9626727628 என்ற தொலைபேசி எண்ணில் தொடா்பு கொள்ளலாம் என அதில் கூறப்பட்டுள்ளது

    • தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சார்பில் 224 புதிய அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்பட்டுள்ளது.
    • முதல்-அமைச்சர் சென்னையில் இருந்து காணொலிக் காட்சி மூலமாக திறந்து வைத்தார்.

    அனுப்பர்பாளையம் :

    திருப்பூரை அடுத்த திருமுருகன்பூண்டி நக ராட்சிக்குட்பட்ட பூண்டிநகர் பகுதியில் தமிழ் நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சார்பில் ரூ.18 கோடியே 80 லட்சத்தில் 224 புதிய அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்பட் டுள்ளது. இதனை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னையில் இருந்து காணொலிக் காட்சி மூலமாக திறந்து வைத்தார். அதே நேரம் இங்கு நடைபெற்ற நிகழ்ச்சியில் திருப்பூர் சப்-கலெக்டர் ஸ்ருதன் ஜெய் நாராயணன் கலந்து கொண்டு, அடுக்குமாடி குடியிருப்பு வளாகத்தில் மரக்கன்றுகளை நட்டு, பயனாளிகளுக்கு வீடுகளுக்கான ஆணைகளை வழங்கினார். நிகழ்ச்சியில் திருமுருகன்பூண்டி நகராட்சி தலைவர் குமார், கவுன்சிலர் கார்த்திகேயன் ஆகியோர் வாழ்த்தி பேசினர்.

    இதில் துணைத்தலைவர் ராஜேஸ்வரி, கவுன்சிலர்கள் காயத்ரி, ராஜன், யுவராஜ், முருகசாமி, செல்வராஜ், தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டுவாரிய உதவி நிர்வாக பொறியாளர் அன்பழகன் மற்றும் பயனாளிகள் கலந்து கொண்டனர். முன்னதாக அடுக்குமாடி குடியிருப்பில் கட்டப்பட்டுள்ள வீடுகளை சப்-கலெக்டர் ஆய்வு செய்தார்.

    ×