விழுப்புரம் குறைதீர் முகாம் பொது மக்களிடமிருந்து 452 மனுக்கள் பெறப்பட்டன

குறித்த காலத்திற்குள் தீர்வு வழங்கிட வேண்டும் மனுக்களை நேரடியாக பெறப்பட்டு உரிய நடவடிக்கை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டது.
மாற்றுத்திறனாளிக்கு 3 சக்கர சைக்கிளை விழுப்புரம் கலெக்டர் பழனி வழங்கினார்.
மாற்றுத்திறனாளிக்கு 3 சக்கர சைக்கிளை விழுப்புரம் கலெக்டர் பழனி வழங்கினார்.
Published on

விழுப்புரம்:

விழுப்புரம் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில், கலெக்டர் பழனி தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று நடைபெற்றது. பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்கள் பெற்று மனுதாரர்கள் முன்னிலையில் விசாரணை மேற்கொண்டு தொடர்பு டைய அலுவலர்கள் மனுக்கள் மீது உடனடியாக கவனம் எடுத்து குறித்த காலத்திற்குள் தீர்வு வழங்கிட வேண்டும் என அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.

இதில் 452 மனுக்கள் பெறப்பட்டது. அதில் முதியோர் உதவித்தொகை, வீட்டுமனை பட்டாக் கோருதல், ஆதரவற்றோர் உதவித்தொகை, பட்டா மாறுதல், தொழில் தொடங்க கடனுதவி கோருதல், பிரதம மந்திரி வீடு கட்டும் திட்டம், முதலமைச்சரின் பசுமை வீடு திட்டம் உட்பட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுக்களை நேரடியாக பெறப்பட்டு உரிய நடவடிக்கை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டது. தொடர்ந்து, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில், மாற்றுத்திறனாளிக்கு 3சக்கர கை மிதிவண்டியினை கலெக்டர் பழனி வழங்கினார். இதில் மாவட்ட வருவாய் அலுவலர் பரமேஸ்வரி, மாவட்ட வருவாய் அலுவலர் (நில எடுப்பு) சரஸ்வதி, தனித்துணை கலெக்டர் விஸ்வநாதன், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் தங்கவேலு உட்பட துறை சார்ந்த அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com