என் மலர்
உள்ளூர் செய்திகள்

கடலூர் கலெக்டர் அலுவலகத்தில் காட்டுமன்னார்கோயில் பூர்த்தங்குடி கிராம மக்கள் மதுபான கடையை அகற்றக்கோரி மனு கொடுக்க வந்தனர்,
நெடுஞ்சாலையில் உள்ள டாஸ்மாக் கடையை அகற்றகிராம மக்கள் கலெக்டரிடம் மனு
கடலூர்:
காட்டுமன்னார்கோவில் பூர்த்தங்குடி, தெ.நெடுஞ்சேரி ஊர் பொதுமக்கள் கடலூர் கலெக்டர் அலுவலகத்தில் கோரிக்கை மனு அளித்த னர். அந்த மனுவில் கூறியி ருப்பதாவது காட்டுமன்னார்கோயில் பெட்ரோல் பங்க் அரு காமையிலும், காட்டு மன்னார்கோயில் நெடுஞ்சாலை ஒரத்திலும் டாஸ்மாக் கடை மற்றும் பார் அமைந்துள்ளது. இங்கு வரும் மதுபான பிரியர்கள் சாலையிலேேய வாகனங்களை நிறுத்தி விடு கின்றனர். மேலும், குடித்து விட்டு மது போதையில் கூச்சலிடுகின்றனர். இதனால் கோயிலுக்கு வரும் பக்தர்கள் மற்றும் அருகாமையில் உள்ள குடியிருப்பு வாசிகள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். குறிப்பாக மாலையில் பள்ளியில் இருந்து வீடு திரும்பும் மாணவ, மாணவியர்கள் பெரிதும் பாதிப்படை கின்றனர். இதனால் டி.நெடுஞ்சேரி முதல் கந்தகுமாரன் வரை அதிகளவில் வாகன விபத்துக்கள் நடக்கின்றன. இந்த மதுபான கடை டி.நெடுஞ்சேரி ஊராட்சி எல்லைக்கு உட்பட்டது. இடப்பற்றாகுறை காரண மாக பூர்த்தங்குடி ஊராட்சி யில் முறை கேடாக இயங்கி வருகின்றது. இந்த டாஸ்மாக் கடையை நிரந் தரமாக எங்கள் ஊராட்சியில் இருந்து இட மாற்றம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.






