பொதுமக்களிடம் பெறப்பட்ட 463 மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை

பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 463 மனுக்கள் பெறப்பட்டது.மாணவி ஒருவருக்கு தொழிற்கல்வி பயின்று வருவதற்கான உதவித்தொகை.
கலெக்டர் தீபக்ஜேக்கப்.
கலெக்டர் தீபக்ஜேக்கப்.
Published on: 

தஞ்சாவூர்:

தஞ்சாவூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் கலெக்டர் தீபக்ஜேக்கப் தலைமையேற்று பேசியதாவது:-

மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் இலவச வீட்டுமனை பட்டா, முதியோர் உதவித்தொகை, குடும்ப அட்டை, பட்டா மாற்றம், கல்வி கடன் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 463 மனுக்கள் பெறப்பட்டது.

இந்த மனுக்களை விசாரணை செய்து உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. மேலும், மனுக்கள் மீது மேற்கொள்ளப்படும் நட வடிக்கை குறித்த விவரத்தை உடனடியாக மனுதாரருக்கு தெரிவிக்க சம்பந்தப்பட்ட அலுவலர்க ளுக்கு அறிவுறுத்த ப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் பேசினார்.

அதனைத் தொடர்ந்து அவர், முதலமைச்சர் பொது நிவாரண நிதியிலிருந்து 1 மாணவிக்கு தொழிற்கல்வி பயின்று வருவதற்கான உதவித்தொகை ரூ. 50,000 காசோலையினை மற்றும் முதலமைச்சர் விரிவான மருத்துவ காப்பீடு திட்டத்தின் மூலம் 13 திருநங்கைகளுக்கு முதலமைச்சரின் இலவச மருத்துவ காப்பீடு அடையாள அட்டையினை வழங்கினார்.

இக்கூட்டத்தில் கூடுதல் கலெக்டர்கள் சுகபுத்ரா (வருவாய்), ஸ்ரீகாந்த் (வளர்ச்சி), தனித்துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்பு திட்டம்) தவவளவன், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் குளோரி குணசீலி, மாவட்ட திட்ட அலுவலர் விஜய் ஆனந்த் (முதலமைச்சர் விரிவான மருத்துவ காப்பீடு திட்டம்) மற்றும் அனைத்து அரசுத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com