search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பிரம்மபுரீஸ்வரர் கோவிலில் திருப்பணிகள் தொடங்க வேண்டும்
    X

    சிதிலமடைந்து காணப்படும் பிரம்மபுரீஸ்வரர் கோவில்.


    பிரம்மபுரீஸ்வரர் கோவிலில் திருப்பணிகள் தொடங்க வேண்டும்

    • சித்தர்களால் பூஜிக்கப்பட்ட கோவிலாகவும், அதிசயம் பல நடந்த கோவிலாகவும் கருதப்பட்டு வருகிறது.
    • கோவிலில் திருப்பணிகள், கட்டுமான பணிகளை உடனே ஆரம்பித்து விரைவில் முடிக்க ஆவண செய்ய வேண்டும்.

    தஞ்சாவூர்:

    தேசிய திருக்கோயில்கள் கூட்டமைப்பு பொதுச்செ யலாளர் வழக்கறிஞர் சந்திரபோஸ் பெருமாள் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்ப தாவது:-

    தஞ்சாவூர் அருகே நெடார் ஆலங்குடி கிராமத்தில் பல நூற்றாண்டுகள் பழமை வாய்ந்த பிரம்மபுரீஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் பிரம்மபுரீ ஸ்வரர், நித்திய கல்யாணி அம்பாள் சன்னதிகள் உள்ளன.

    இக்கோவில் முதன்மை திருக்கோயில் என்ற வகைபாட்டில் இந்து சமய அறநிலையத்துறை நிர்வாகத்தின் கட்டுப்பா ட்டில் உள்ளதுஇக்கோவிலில் ஒரு கால பூஜை திட்டத்தின் கீழ் ஒரு கால பூஜை நடைபெற்று வருகிறது.

    சித்தர்களால் பூஜிக்கப்பட்ட கோவிலாகவும், அதிசயம் பல நடந்த கோவிலாகவும் மக்களிடையே கருதப்பட்டு வருகிறது.

    ஆனால், தற்போது இக்கோவில் மிகவும் சிதிலமடைந்து மேற்கூரை இடிந்து விழும் நிலையில் காணப்படுகிறது. இதுபோ ன்ற கோவில்களை அதன் பழமை மாறாது காப்பது அரசின் கடமையாகும்.

    இக்கோவிலை புதுப்பிப்ப தற்கும், திருப்பணிகள் செய்வதற்கும் இந்து சமய அறநிலையத்துறை சார்பாக நிதி ஒதுக்கப்பட்டு அதன் செயல்பாடுகள் கிடப்பில் போடப்பட்டுள்ளது.

    எனவே, அறநிலையத்துறை அமைச்சர் தலையிட்டு கோவிலில் திருப்பணிகள், கட்டுமான பணிகளை உடனே ஆரம்பித்து விரைவில் முடிக்க ஆவண செய்யுமாறு கேட்டுக்கொள்கிறோன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    Next Story
    ×