search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ID card"

    • தேசிய மனித உரிமை சமூக நீதி கவுன்சில் சார்பில் புதிய நிர்வாகிகளுக்கு அடையாள அட்டை வழங்கப்பட்டது.
    • விழாவில் சிறப்பு அழைப்பாளர்களாக தொழி–லதிபர் பி.டி.ஆர்.டேனியல் கலந்து கொண்டார்.

    மதுரை

    தேசிய மனித உரிமை சமூக நீதி கவுன்சில் ஆப் இந்தியா குளோபல் தேசிய இயக்குனர் சர்க்கார் ஆணைக்கிணங்க, மதுரை கோ.புதூர் டி.ஆர்.ஓ. காலனி அலுவலகத்தில் புதிய நிர் வாகிகளுக்கு அடையாள அட்டை மற்றும் அங்கீகார சான்றிதழ், சிறந்த சமூக சேவை செய்தவர்களுக்கு விருது வழங்கும் விழா நடைபெற்றது.

    நிகழ்ச்சிக்கு அமைப்பின் மாநில தலை–வர் டாக்டர் எம்.பாரீஸ், மாநில பொதுச் செயலாளர் டாக்டர் கா.கவியரசு, மாநில ஒருங்கி–ணைப்பாளர் டாக்டர் பிச்சைவேல், மாநகர் வடக்கு மாவட்ட தலைவர் டாக்டர் வி.பி.ஆர்.செல்வ–குமார் ஆகியோர் தலைமை தாங்கினர்.

    இவ்விழாவில் சிறப்பு அழைப்பாளர்களாக தொழி–லதிபர் பி.டி.ஆர்.டேனியல் தங்கராஜ், திரைப்பட நடிகர் டாக்டர் எம்.செல்வம், சேது திரைப்படத்தின் தயாரிப்பா–ளர் கந்தசாமி, சேது நல்ல–மணி டிரான்ஸ்போர்ட் உரிமையாளர் முருகன் ஆகி–யோர் கலந்து கொண்டனர்.

    இந்நிகழ்வில் மாநில துணைத்தலைவர் டாக்டர் கஜேந்திரன், மாநிலச்செ–யலாளர் கீதாமுருகன், மாநில செயலாளர் சிக்கந்தர், மாநில ஆலோசகர் டாக்டர் குசலவன், மாநில மகளிரணி துணைத்தலைவி குருலட்சுமி, மாநில துணை பொதுச்செயலாளர் ஷர்மி–ளாபானு, மாநில துணைச்செயலாளர் ஜெக–நாதன் மற்றும் ஒருங்கிணைந்த மாவட்ட நிர்வாகிகள் உமா மகேஸ்வரி, ராமன், முருகேச–பாண்டி, பொன்.முருகன், விஜயா, ராஜன், சங்க–ரேஸ்வரி உள்பட ஏராளமா–னோர் கலந்து கொண்டனர்.

    நிகழ்ச்சிக்கான ஏற்பா–டுகளை வடக்கு மாவட்ட நிர்வாகிகள் டாக்டர் சின்ன–சாமி, பிர–காஷ், தெற்கு மாவட்ட தலைவர் சங்கர் பிரபு, செயலாளர் பவர்.ராஜேந்திரன், வடக்கு புறநகர் மாவட்ட தலைவர் திருப்பதி, செயலாளர் விஜயராஜா உள்ளிட்டோர் சிறப்பாக செய்திருந்தனர்.

    • 3பேருக்கு அடையாள அட்டை மற்றும் நூல்கள் எடுத்துச் செல்லும் பை வழங்கப்பட்டது
    • தன்னார்வலர்கள் நூலகத்திற்கு நேரடியாக வர இயலாதவர்களுக்கு நூல்களை வழங்குவர்.

    உடுமலை:

    உடுமலை அருகே உள்ள மலையாண்டிபட்டினம் ஊர் புற நூலகத்தில் நூலக நண்பர்கள் திட்டத்தில் தன்னார்வலர்கள் 3பேருக்கு அடையாள அட்டை மற்றும் நூல்கள் எடுத்துச் செல்லும் பை வழங்கப்பட்டது. நூலக வாசகர் வட்டத்தின் சார்பில் நடந்த அடையாள அட்டை வழங்கும் நிகழ்ச்சிக்கு நூலக வாசகர் வட்ட தலைவர் சிவராஜ் தலைமை வகித்தார். துணைத்தலைவர் மளிகை செல்வம், வாசகர் வட்ட உறுப்பினர் லட்சுமிபதி ஆகியோர் முன்னிலை வகித்தனர். நூலகர் மலர்க்கொடி வரவேற்றார்.

    தன்னார்வலர்கள் நூலகத்திற்கு நேரடியாக வர இயலாதவர்களுக்கு நூல்களை வழங்குவர். இவர்கள் தங்கள் பகுதியில் உள்ள மக்களை தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நூலகங்களில் உறுப்பினராக சேர்க்கவும் ஒரு முறை அதிகபட்சமாக 25 நூல்கள் வரை எடுத்துச் சென்று நூலக உறுப்பினர்களின் இல்லங்களுக்கு நேரடியாக வழங்கி வரும் இந்த திட்டத்தில் பத்மாவதி, கற்பகம், ராமராஜன் ஆகியோர் தன்னார்வலர்களாக இணைந்துள்ளனர். அவர்களுக்கு அடையாள அட்டை மற்றும் நூல் எடுத்து செல்லும் பை வழங்கப்பட்டது.

    • அஞ்சுகம் திருமண மண்டபத்தில் வேறு நிகழ்ச்சி நடைபெற உள்ளதால் வேறு இடத்திற்கு மாற்றப்படுகிறது.
    • ஆதார் அட்டை, குடும்ப அட்டையின் அசல் மற்றும் நகல்கள் 4 பாஸ்போர்ட் புகைப்படம் கொண்டு வரவேண்டும்

    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரம் மாவட்டத்தில் தேசிய மாற்றுத்திறனாளிகள் அடையாள அட்டை பெறாத மாற்றுத்திறனாளிகள் ஒவ்வொரு மாதத்தின் இரண்டாவது மற்றும் நான்காவது செவ்வாய்க்கிழமைகளில் அரசு மருத்துவமனை எதிரில் அமைந்துள்ள அஞ்சுகம் திருமண மண்டபத்தில் இதுவரை நடைபெற்று வந்தது.

    23.05.2023 அன்று அஞ்சுகம் திருமண மண்டபத்தில் வேறு நிகழ்ச்சி நடைபெற உள்ளதால் அன்றைய முகாம் மட்டும் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக வளாகத்தில் உள்ள மக்கள் குறை தீர்க்கும் மையம் கூட்ட அரங்கில் (GDP HALL) நடைபெற உள்ளது.

    இம்முகாமில் தேசிய அடையாள டை பெறாத மாற்றுத்திறனாளிகள் ஆதார் அட்டை, குடும்ப அட்டை ஆகியவற்றின் அசல் மற்றும் நகல்கள் பாஸ்போர்ட் அளவிலான புகைப்படம் 4 ஆகியவற்றுடன் முகாமில் கலந்துகொண்டு தேசிய அடையாள அட்டை பெற்று பயனடைந்திடுமாறு காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் மா.ஆர்த்தி தெரிவித்துள்ளார்.

    • வெளி மாநில தொழிலாளர்களுக்கான ஒருங்கிணைப்பு குழு கூட்டம், கோவை கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது.
    • வடமாநில தொழிலாளர்களைஎப்படி வரைமுறைப்படுத்துவது என்பது குறித்து விவாதிக்கப்பட்டது.

    திருப்பூர் :

    தொழிலாளர் நலத்துறை, திறன் மேம்பாட்டு துறை சார்பில் கோவை மண்டல அளவிலான வெளி மாநில தொழிலாளர்களுக்கான ஒருங்கிணைப்பு குழு கூட்டம், கோவை கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது.

    இதில் தொழிலாளர் நலத்துறை, போலீசார், தொழில் அமைப்புகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர். வடமாநில தொழிலாளர்களைஎப்படி வரைமுறைப்படுத்துவது என்பது குறித்து விவாதிக்கப்பட்டது. தொழில்துறையினர் பலர் கருத்துக்களை தெரிவித்தனர்.

    இந்த கூட்டம் குறித்து அதில் பங்கேற்ற திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்க இணை செயலாளர் குமார் துரைசாமி கூறுகையில், எளிதாக தரவுகளை கையாளும் வகையில், தமிழக அரசு வடமாநில தொழிலாளர்களுக்கு கைரேகையுடன் கூடிய அடையாள அட்டை வழங்க வேண்டும்.அனைத்து தன்னார்வ அமைப்புகள், தொழில்துறை உள்ளிட்டோரை அழைத்து கூட்டம் நடத்த வேண்டுமென வலியுறுத்தப்பட்டது என்றார்.

    • புள்ளியியல் உதவி ஆய்வாளர் பதவி உள்பட 217 காலியிடங்களுக்கு இன்று தேர்வு நடைபெற்றது.
    • நெல்லை மாவட்டத்தில் மொத்தம் 10 மையங்கள் இந்த தேர்வுக்காக ஒதுக்கப்பட்டிருந்தது.

    நெல்லை:

    தமிழக ஒருங்கிணைந்த புள்ளியியல் சார்நிலை பணிகளில் புள்ளியியல் உதவி ஆய்வாளர் பதவியில் 211 பேர், கணக்காளர் 5 பேர், புள்ளியியல் கோர்ப்பாளர் ஒருவர் என மொத்தம் 217 காலியிடங்களுக்கு இன்று தேர்வு நடைபெற்றது.

    தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வா ணையம் மூலம் நடத்தப்பட்ட இந்த தேர்வு இன்று காலை மற்றும் மாலை என 2 வேளைகளில் நடந்தது. இந்த தேர்வையொட்டி நெல்லையில் தேர்வு மையங்கள் நேற்றே தயார் நிலையில் வைக்கப்பட்டு இருந்தது.

    நெல்லை மாவட்டத்தில் மொத்தம் 10 மையங்கள் இந்த தேர்வுக்காக ஒதுக்கப் பட்டிருந்தது. மாவட்ட அளவில் 2 கல்லூரிகளில் 4 மையங்களும் மாநகரப் பகுதியில் 5 பள்ளிகளில் 6 மையங்களிலும் தேர்வு இன்று நடந்தது. இந்த தேர்வுக்காக நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் இருந்து 2,773 பேர் விண்ணப்பித்திருந்தனர். காலையில் நடந்த தேர்வை 1,482 பேர் மட்டுமே எழுதினர். இது 53.44 சதவீதம் ஆகும். 1,296 பேர் தேர்வு எழுத வரவில்லை.

    தேர்வு எழுதுவதற்காக தேர்வர்கள் காலை 8 மணி முதலே தேர்வு மையங்களுக்கு வர தொடங்கினர். பின்னர் அவர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட தேர்வு எழுதும் அறைக்கு சென்றனர். முன்னதாக அவர்களது நுழைவு சீட்டை அதிகாரிகள் சரி பார்த்தனர்.

    இதில் ஹால்டிக்கெட், அடையாள அட்டை கொண்டு வந்தவர்கள் மட்டுமே தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டனர். மேலும் குறிப்பிட்ட நேரத்தி ற்குள் தேர்வு மையங்களுக்கு வராத வர்கள் உள்ளே அனுமதிக்கப்படவில்லை.

    சங்கரன்கோவிலை சேர்ந்த ஒரு பெண் டவுன் சாப்டர் பள்ளியில் தேர்வு எழுதுவதற்காக வந்திருந்தார். ஆனால் அவர் 5 நிமிடம் தாமதமாக வந்ததாக அவரை தேர்வு எழுத அனுமதிக்கவில்லை. இது தொடர்பாக அவர் பள்ளி தலைமை ஆசிரியரிடம் முறையிட்டார். ஆனாலும் அவர் தேர்வு எழுத அனுமதிக்கப்படவில்லை.இதனால் அந்த பெண் தேர்வு மையம் முன்பு நின்று அழுது கொண்டிருந்தார். இது பார்க்க பரிதாபமாக இருந்தது.

    • தனியார்துறை வேலை வாய்ப்பு முகாமில் தேர்வானவர்களுக்கு பணிநியமன ஆணை வழங்கினார்.
    • தேசிய அடையாள அட்டை மாற்றுதிறனாளிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது.

    திருவாரூர்:

    திருவாரூர் மாவட்டம் அம்மையப்பன் ஊராட்சியில் உலக மாற்றுத்திறனாளிகள் தின விழா நடைபெற்றது. விழாவிற்கு மாவட்ட கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன் தலைமை வகித்தார்.

    திருவாரூர் சட்டமன்ற உறுப்பினர் பூண்டி.கே.கலைவாணன் முன்னிலை வகித்தார். நிகழ்ச்சியில் 59 பயனாளிகளுக்கு ரூ.14 லட்சத்து 89 ஆயிரத்து 400 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளும், தனியார்துறை வேலை வாய்ப்பு முகாமில் தேர்வானவர்களுக்கு பணிநியமன ஆணைகளையும் மாவட்ட கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன் வழங்கினார்.

    இந்நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் தெரிவித்தததாவது, தமிழக அரசானது மாற்றுத்திறனாளிகளுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கி வருகிறது.

    அந்தவகையில் திருவாரூர் மாவட்டத்தில் 31824 மாற்றுத்திறனாளிகளுக்கு தேசிய அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது. அடையாள அட்டை வைத்திருப்பவர்களில் தனித்துவம் வாய்ந்த 19439 நபர்களுக்கு முதலமைச்சர் காப்பீட்டு அட்டை வழங்கப்பட்டுள்ளது. மாற்றுத்திறனாளிகள் சுயதொழில்புரிய மானியத்துடன் கூடிய கடனுதவிகளும் வங்கி பங்களிப்புடன் வழங்கப்பட்டு வருகிறது.

    மன வளர்ச்சி குன்றியோர், கடும் ஊனத்தால் பாதிக்கப்பட்டோர், தசை சிதைவு நோயால் பாதிக்கப்பட்டோர், தொழுநோயால் பாதிக்கப்பட்ட மற்றும் முதுகு தண்டுவடம் பாதிக்கப்பட்டோர், பார்கின்சன் நோய், தண்டுவட மரப்பு நோய் ஆகிய நாட்பட்ட நரம்பியல் பாதிப்புக்கு உள்ளான மாற்றுத்திறனாளிகளுக்கு பராமரிப்பு உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது.

    18 வயதிற்கு மேற்பட்ட பார்வைதிறன் மற்றும் செவித்திறன் குறைவுடைய மாற்றுத்திறனாளிகளுக்கு ஸ்மார்ட் செல்போன் வழங்கும் திட்டத்தின்கீழ் பார்வைதிறன் குறைபாடுடைய மாற்றுத்திறனாளிகளுக்கு ஸ்மார்டு செல்போன் வழங்கப்பட்டு வருகிறது.

    மாற்றுத்திறனாளிகளுக்கு மோட்டார் பொருத்தப்பட்ட தையல் இயந்திரங்கள் வழங்கப்பட்டு வருகிறது. மேலும் பொது பிரிவு திட்டத்தின்கீழ், ஊன்றுகோல், மூன்று சக்கர சைக்கிள்கள், மடக்கு சக்கர நாற்காலிகள், 9ஆம் வகுப்புக்கு மேல் கல்வி பயிலும் குறைகண் பார்வையுடைய மாணவ, மாணவியர்களுக்கு எழுத்தை பெரிதாக்கி காட்டும் உருப்பெருக்கிகள் ஆகிய உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளது.

    மேலும் தமிழக அரசின் நலத்திட்ட உதவிகளை மாற்றுத்திறனாளிகள் அனைவரும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இவ்வாறு மாவட்ட கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன் தெரிவித்தார்.

    இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் ப.சிதம்பரம், மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் புவனா, வருவாய் கோட்டாட்சியர் சங்கீதா, சமூக பாதுகாப்பு திட்டம் தனித்துணை ஆட்சியர் லதா, மாவட்ட ஊராட்சி உறுப்பினர் கலைவாணி மோகன் உள்ளிட்ட அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    ×