நெல்லையில் 10 மையங்களில் புள்ளியியல் சார்நிலைப் பணிக்கான தேர்வை 53 சதவீதம் பேர் எழுதினர்

புள்ளியியல் உதவி ஆய்வாளர் பதவி உள்பட 217 காலியிடங்களுக்கு இன்று தேர்வு நடைபெற்றது.நெல்லை மாவட்டத்தில் மொத்தம் 10 மையங்கள் இந்த தேர்வுக்காக ஒதுக்கப்பட்டிருந்தது.
டவுனில் ஒரு மையத்தில் தேர்வு எழுதியவர்களை படத்தில் காணலாம்.
டவுனில் ஒரு மையத்தில் தேர்வு எழுதியவர்களை படத்தில் காணலாம்.
Published on

நெல்லை:

தமிழக ஒருங்கிணைந்த புள்ளியியல் சார்நிலை பணிகளில் புள்ளியியல் உதவி ஆய்வாளர் பதவியில் 211 பேர், கணக்காளர் 5 பேர், புள்ளியியல் கோர்ப்பாளர் ஒருவர் என மொத்தம் 217 காலியிடங்களுக்கு இன்று தேர்வு நடைபெற்றது.

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வா ணையம் மூலம் நடத்தப்பட்ட இந்த தேர்வு இன்று காலை மற்றும் மாலை என 2 வேளைகளில் நடந்தது. இந்த தேர்வையொட்டி நெல்லையில் தேர்வு மையங்கள் நேற்றே தயார் நிலையில் வைக்கப்பட்டு இருந்தது.

நெல்லை மாவட்டத்தில் மொத்தம் 10 மையங்கள் இந்த தேர்வுக்காக ஒதுக்கப் பட்டிருந்தது. மாவட்ட அளவில் 2 கல்லூரிகளில் 4 மையங்களும் மாநகரப் பகுதியில் 5 பள்ளிகளில் 6 மையங்களிலும் தேர்வு இன்று நடந்தது. இந்த தேர்வுக்காக நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் இருந்து 2,773 பேர் விண்ணப்பித்திருந்தனர். காலையில் நடந்த தேர்வை 1,482 பேர் மட்டுமே எழுதினர். இது 53.44 சதவீதம் ஆகும். 1,296 பேர் தேர்வு எழுத வரவில்லை.

தேர்வு எழுதுவதற்காக தேர்வர்கள் காலை 8 மணி முதலே தேர்வு மையங்களுக்கு வர தொடங்கினர். பின்னர் அவர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட தேர்வு எழுதும் அறைக்கு சென்றனர். முன்னதாக அவர்களது நுழைவு சீட்டை அதிகாரிகள் சரி பார்த்தனர்.

இதில் ஹால்டிக்கெட், அடையாள அட்டை கொண்டு வந்தவர்கள் மட்டுமே தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டனர். மேலும் குறிப்பிட்ட நேரத்தி ற்குள் தேர்வு மையங்களுக்கு வராத வர்கள் உள்ளே அனுமதிக்கப்படவில்லை.

சங்கரன்கோவிலை சேர்ந்த ஒரு பெண் டவுன் சாப்டர் பள்ளியில் தேர்வு எழுதுவதற்காக வந்திருந்தார். ஆனால் அவர் 5 நிமிடம் தாமதமாக வந்ததாக அவரை தேர்வு எழுத அனுமதிக்கவில்லை. இது தொடர்பாக அவர் பள்ளி தலைமை ஆசிரியரிடம் முறையிட்டார். ஆனாலும் அவர் தேர்வு எழுத அனுமதிக்கப்படவில்லை.இதனால் அந்த பெண் தேர்வு மையம் முன்பு நின்று அழுது கொண்டிருந்தார். இது பார்க்க பரிதாபமாக இருந்தது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com