search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கடைக்கோடி மக்களுக்கும் நலத்திட்ட உதவிகள் கிடைக்க நடவடிக்கை-அமைச்சர் பெரியகருப்பன்
    X

    வேளாண்மை துறையின் சார்பில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை அமைச்சர் பெரியகருப்பன் வழங்கினார். அருகில் தமிழரசி எம்.எல்.ஏ. கலெக்டர் மதுசூதன்ரெட்டி மற்றும் பலர் உள்ளனர்.

    கடைக்கோடி மக்களுக்கும் நலத்திட்ட உதவிகள் கிடைக்க நடவடிக்கை-அமைச்சர் பெரியகருப்பன்

    • சிவகங்கை மாவட்டத்தில் கடைக்கோடி மக்களுக்கும் நலத்திட்ட உதவிகள் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படுவதாக அமைச்சர் பெரியகருப்பன் பேசினார்.
    • ஊராட்சி மன்றத்தலைவர் மணிமுத்து உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    சிவகங்கை

    முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆட்சிப் பொறுப்பேற்று 2 ஆண்டுகள் நிறைவடைந்தததை யொட்டி சிவகங்கை கலெக்டர் அலுவலகக் கூட்டரங்கில் பயனாளி களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடந்தது.

    கலெக்டர் மதுசூதன் ரெட்டி தலைமை தாங்கினார். மானாமதுரை எம்.எல்.ஏ. தமிழரசி முன்னிலை வகித்தார். இதில் அமைச்சர் பெரியகருப்பன் பங்கேற்று 365 பயனாளிகளுக்கு ரூ.1 கோடியே 59 லட்சத்து 93 ஆயிரத்து 372 மதிப்பிலான பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

    பின்னர் அவர் பேசியதாவது:-

    ஒவ்வொரு துறையிலும் எண்ணற்ற திட்டங்கள் மற்றும் வளர்ச்சிப்பணிகளை கடந்த 2 ஆண்டுகளில் செயல்படுத்தி தமிழகத்தை முன்னேற்றப் பாதையில் வழி நடத்தி சென்று இந்தியாவில் உள்ள பிற மாநிலங்களுக்கு முன்மாதி ரியான முதலமைச்சராக, மு.க.ஸ்டாலின் திகழ்ந்து வருகிறார். எல்லோருக்கும் எல்லாமும் என்ற அடிப்ப டையில் மக்களாட்சியில் 3-வது ஆண்டை தொடங்கி யிருக்கும் முதல்- அமைச்சருக்கு, சிவகங்கை மாவட்ட மக்களின் சார்பில் வாழ்த்துக்களையும், நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

    சிவகங்கை மாவட்டத்தில் தமிழக அரசால் செயல்படுத்தப்பட்டு வரும் அனைத்து நலத்திட்டங்களும் மாவட்டத்தின் கடைக்கோடி பகுதியில் வசிக்கும் மக்களுக்கும் கிடைக்கும் வகையில் மாவட்ட நிர்வாக த்தால் சிறப்பான நடவடி க்கைகள் எடுக்கப்பட்டு, பிற மாவட்டங்களுக்கும் முன்மாதிரியான மாவட்டமாக சிவகங்கை திகழ்ந்து வருகிறது.

    இவ்வாறு அவர் பேசினார்.

    இந்த நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் மணிவண்ணன், கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் கோ.ஜினு, மேலாண்மை இயக்குநர் (மத்திய கூட்டுறவு வங்கி) ரவிச்சந்திரன், திருப்புவனம் பேரூராட்சித் தலைவர் சேங்கை மாறன், சிவகங்கை நகர்மன்றத்தலைவர் சி.எம்.துரை ஆனந்த், துணைத் தலைவர் கார்கண்ணன், மாவட்ட ஊராட்சி உறுப்பினர்கள் செந்தில் குமார், ஆரோக்கிய சாந்தா ராணி, காஞ்சிரங்கால் ஊராட்சி மன்றத்தலைவர் மணிமுத்து உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×