என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "financial assistance"

    • சாலை விபத்து ஒன்றில் உயிரிழந்தார் என்ற செய்தியைக் கேட்டு மிகுந்த அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன்.
    • முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன்.

    கத்தார் நாட்டில் நிகழ்ந்த சாலை விபத்தில் உயிரிழந்த திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்தவரின் குடும்பத்தினருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நிதியுதவி அறிவித்து உத்தரவிட்டுள்ளார்.

    இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:-

    திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் வட்டம், பக்கிரிபாளையம் கிராமம், ரஹமான்பேட்டையைச் சேர்ந்த நவாஸ் (35 வயது) த/பெ.அன்வர் என்பவர் கத்தார் நாட்டில் கடந்த 10 ஆண்டுகளாக கார் டிரைவராக பணிபுரிந்து வந்த நிலையில், கடந்த 25.8.2025 அன்று நிகழ்ந்த சாலை விபத்து ஒன்றில் உயிரிழந்தார் என்ற செய்தியைக் கேட்டு மிகுந்த அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன்.

    கத்தார் நாட்டில் சாலை விபத்தில் உயிரிழந்த நவாசின் குடும்பத்தினருக்கும் அவரது உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதல்களையும் தெரிவித்துக்கொள்வதோடு, உயிரிழந்த நவாசின் குடும்பத்தினருக்கு தமிழ்நாடு அரசின் சார்பில் ஐந்து லட்சம் ரூபாய் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன்.

    இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

    • படத்தின் முக்கியமான கார் சேசிங் காட்சிகள் விழுந்தமாவடி பகுதியில் சமீபத்தில் படமாக்கப்பட்டது.
    • பட காட்சியில் சண்டை பயிற்சியாளர் மோகன்ராஜ் ஈடுபட்டு பரிதாபமாக உயிரிழந்தார்.

    நாகை மாவட்டம், கீழ்வேளூர், வெண்மணி, விழுந்தமாவடி, காரைமேடு உள்ளிட்ட பகுதிகளில் இயக்குனர் பா.ரஞ்சித் இயக்கத்தில் உருவாகும் 'வேட்டுவம்' படத்தின் படப்பிடிப்பு கடந்த ஒரு மாதமாக நடைபெற்று வருகிறது.

    இந்த படத்தின் முக்கியமான கார் சேசிங் காட்சிகள் விழுந்தமாவடி பகுதியில் சமீபத்தில் படமாக்கப்பட்டது.

    இந்த காட்சியில் சண்டை பயிற்சியாளர் மோகன்ராஜ் (வயது 52) ஈடுபட்டு அதில் பரிதாபமாக உயிரிழந்தார்.

    இந்த நிலையில், வேட்டுவம் பட ஷூட்டிங்கில் உயிரிழந்த ஸ்டண்ட் கலைஞர் மோகன் ராஜுவின் குடும்பத்துக்கு இயக்குநர் பா.ரஞ்சித் ரூ.20 லட்சம் நிதியுதவி வழங்குவதாக அறிவித்துள்ளார்.

    • பட்டாசு ஆலையில் ஏற்பட்ட பயங்கர வெடிவிபத்தில் 2 பெண்கள் உட்பட 3 பேர் உயிரிழந்துள்ளனர்.
    • விபத்தில் படுகாயமைடைந்த மூன்று பேரை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

    விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் உள்ளஆண்டியபுரத்தில் உள்ள பட்டாசு ஆலையில் பயங்கர வெடிவிபத்து ஏற்பட்டது. இதில், 2 பெண்கள் உட்பட 3 பேர் உயிரிழந்துள்ளனர்.

    இதனால், சம்பந்தப்பட்ட பட்டாசு ஆலையின் உரிமம் ரத்து செய்யப்பட்டது. நிகழ்விடத்துக்கு தீயணைப்பு வீரர்கள் விரைந்து தீயை அணைத்தனர்.

    மேலும், விபத்தில் படுகாயமைடைந்த மூன்று பேரை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

    இந்நிலையில், சிவகாசி வெடி விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.4 லட்சம் வழங்குவதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-

    விருதுநகர் மாவட்டம், சிவகாசி வட்டம், நாரணாபுரம் கிராமத்தில் இயங்கிவரும் தனியாருக்குச் சொந்தமான பட்டாசு ஆலையில் இன்று (21.07.2025) பிற்பகல் சுமார் 3.50 மணியளவில் எதிர்பாராதவிதமாக ஏற்பட்ட வெடிவிபத்தில் கீழத்திருத்தங்கல், முத்துராமலிங்கம் காலனியைச் சேர்ந்த திரு.கார்த்திக் (வயது 23) த/பெ.தங்கராஜ் மற்றும் இரண்டு நபர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர் என்ற துயரகரமான செய்தியைக் கேட்டு மிகவும் அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன்.

    மேலும், இவ்விபத்தில் காயமடைந்து சிவகாசி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நாகலட்சுமி (வயது 55), மாரியம்மாள் (வயது 53), மற்றும் மாரியம்மாள் (வயது 50) ஆகிய மூன்று நபர்களுக்கு சிறப்பு சிகிச்சை அளிக்கவும் உத்தரவிட்டுள்ளேன்.

    இந்த விபத்தில், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும் அவர்களது உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்வதோடு, உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா நான்கு லட்சம் ரூபாயும், பலத்த காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவருக்கு ஒரு லட்சம் ரூபாயும், லேசான காயமடைந்து மருத்துவனையில் சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு தலா ஐம்பதாயிரம் ரூபாயும் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன்.

    இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

    • வீட்டுமனை பட்டாவிற்கான ஆணையினை அஜித்குமார் தாயார் மாலதி அவர்களுக்கு வழங்கினார்.
    • குடும்பத்திற்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்து தருவதாகவும் தெரிவித்தார்.

    சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அஜித்குமார் குடும்பத்திற்கு தமிழக அரசு சார்பில் ரூ.5 லட்சம் நிவாரணத் தொகையை அறிவித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

    இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-

    சிவகங்கை மாவட்டம் மடப்புரம் பத்திரகாளியம்மன் கோயில் காவலாளி அஜித்குமார் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் நேற்றையதினம் (01.07.2025) அலைபேசியின் வாயிலாக அவரது தாயார் மற்றும் சகோதரரை தொடர்பு கொண்டு, தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து, உரிய சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்வதாகவும், அக்குடும்பத்திற்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்து தருவதாகவும் தெரிவித்தார்.

    அதனைத்தொடர்ந்து, தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் உத்தரவிற்கிணங்க, மாண்புமிகு கூட்டுறவுத்துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் அவர்கள், இன்றையதினம் (2.7.2025) சிவகங்கை மாவட்ட ஆட்சித்தலைவர் கா.பொற்கொடி, மானாமதுரை சட்டமன்ற உறுப்பினர் ஆ.தமிழரசி ரவிக்குமார் ஆகியோர் முன்னிலையில், பணி நியமன ஆணையினை மறைந்த அஜித்குமார் சகோதரரான நவீன்குமாருக்கு காரைக்குடியில் உள்ள சிவகங்கை மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர் ஒன்றியத்தில் டெக்னீசியன் பணியிடத்திற்கு கருணை அடிப்படையிலான பணி நியமன ஆணையினை வழங்கினார்.

    மேலும், தேளி வருவாய் கிராமத்திற்குட்பட்ட பகுதியில் வீட்டுமனை பட்டாவிற்கான ஆணையினையும் அஜித்குமார் தாயார் மாலதி அவர்களுக்கு வழங்கினார்.

    இந்நிலையில், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஆணையின்படி, கூட்டுறவுத்துறை அமைச்சரும், சிவகங்கை மாவட்ட கழகச் செயலாளருமான பெரியகருப்பன், திருப்புவனம் வட்டத்தைச் சேர்ந்த மரணம் அடைந்த அஜித்குமார் தாயாரிடம் திமுக சார்பில் ரூ.5 லட்சம் நிதியினை வழங்கினார்.

    இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

    • பாகிஸ்தான் தனது பாதுகாப்பு செலவினங்களை அதிகரித்து வருகிறது.
    • பாகிஸ்தானுக்கு சர்வதேச நாணய நிதியம் (IMF) மூலம் ஒரு பில்லியன் டாலர்கள் (சுமார் ரூ. 8,500 கோடி) நிதியுதவி கிடைத்தது.

    ஆசிய வளர்ச்சி வங்கி (ADB) சமீபத்தில் சுமார் 800 மில்லியன் டாலர்கள் (இந்திய மதிப்பில் சுமார் ரூ. 6,800 கோடி) நிதி உதவிக்கு ஒப்புதல் அளித்ததற்கு இந்தியா கடும் ஆட்சேபனை தெரிவித்துள்ளது.

    இந்தியாவின் வாதத்தின்படி, பாகிஸ்தானின் பொருளாதாரம் ஆபத்தான முறையில் பலவீனமடைந்து வருகிறது.

    பாகிஸ்தானின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (GDP) வரி வருவாய் 2018 ஆம் ஆண்டில் 13 சதவீதமாக இருந்தது, ஆனால் 2023 ஆம் ஆண்டில் அது வெறும் 9.2 சதவீதமாகக் குறைந்துள்ளது. அதே நேரத்தில், பாகிஸ்தான் தனது பாதுகாப்பு செலவினங்களை அதிகரித்து வருகிறது, இது நாட்டின் பொருளாதார பாதிப்பின் பிரதிபலிப்பாகும்.

    இதுபோன்ற சூழ்நிலையில், சர்வதேச நிதியமைச்சகம் மற்றும் ADB போன்ற சர்வதேச நிதி நிறுவனங்களிடமிருந்து பெறப்பட்ட நிதியை வளர்ச்சித் திட்டங்களுக்குப் பதிலாக இராணுவத் தேவைகள் மற்றும் பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு பாகிஸ்தான் அரசு திருப்பிவிட்டதாக இந்தியா குற்றம் சாட்டியுள்ளது.

    கடந்த மாதம், பாகிஸ்தானுக்கு சர்வதேச நாணய நிதியம் (IMF) மூலம் ஒரு பில்லியன் டாலர்கள் (சுமார் ரூ. 8,500 கோடி) நிதியுதவி கிடைத்தது. அப்போதும் இந்தியாவும் தனது ஆட்சேபனை தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.  

    • ஆம்னி பேருந்தில் பயணித்த சிறுவன், சிறுமி, ஓட்டுநர் உள்பட 5 பேர் உயிரிழந்தனர்.
    • விபத்தில் காயமடைந்து அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் 27 நபர்களுக்கு சிறப்பு சிகிச்சை.

    கரூர் செம்மடை நாவல் நகர் அருகே ஆம்னி பேருந்து, சாலையின் தடுப்பு சுவரை தாண்டி எதிர் திசையில் வந்த சுற்றுலா வேன் மீது மோதியதில் அதில் பயணித்த சிறுவன், சிறுமி, ஓட்டுநர் உள்பட 5 பேர் உயிரிழந்தனர். மேலும் 15 பேர் காயமடைந்தனர்.

    இந்நிலையில், விபத்தில் உயிரிழந்த குடும்பத்தினருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்ததுடன் நிதியுதவி அறிவித்துள்ளார்.

    இதுகுறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    கரூர் மாவட்டம், மண்மங்கலம் வட்டம், ஆத்தூர் கிராமம் பரணி பார்க் பள்ளியின் கிழக்குப் பக்கம், நாமக்கல் கரூர் தேசிய நெடுஞ்சாலை, சின்ன வடுகப்பட்டி அருகில் இன்று (17.5.2025) காலை சுமார் 5.30 மணியளவில் பெங்களூருவிலிருந்து நாகர்கோவில் நோக்கிச் சென்ற தனியார் ஆம்னி பேருந்து ஒன்று முன்னாள் சென்ற டிராக்டர் ஒன்றின் மீது மோதி பின்னர் எதிர் சாலையில் கோவில்பட்டியிலிருந்து சேலம் நோக்கி வந்துகொண்டிருந்த மேக்ஸி கேப் வாகனம் ஒன்றின் மீது எதிர்பாராதவிதமாக மோதிய விபத்தில் மேக்ஸி கேப் வாகனத்தில் பயணம் செய்த தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியைச் சேர்ந்த சசிகுமார் (வயது 52) அருண் திருப்பதி (வயது 45) , செல்வன்.காமாட்சி அஸ்வின் (வயது 10), விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த செல்வி.எழில் தஷனா (வயது 12) ஆகிய நான்கு நபர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

    மேலும் விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த செல்வி.ஹேமவர்ஷினி (வயது 20) சிகிச்சைக்காக கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிசிச்சை பலனின்றி உயிரிழந்தார் என்ற துயரகரமான செய்தியைக் கேட்டு மிகுந்த அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன்.

    மேலும், இவ்விபத்தில் காயமடைந்து அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வரும் 27 நபர்களுக்கு சிறப்பு சிகிச்சை அளிக்கவும் உத்தரவிட்டுள்ளேன்.

    இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும். அவர்களது உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்வதோடு உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா மூன்று லட்சம் ரூபாயும், பலத்த காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு தலா ஒரு லட்சம் ரூபாயும், இலேசான காயமடைந்தவர்களுக்கு தலா ஐம்பதாயிரம் ரூபாயும் முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன்.

    இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

    • தனியார் பட்டாசு ஆலையில் இன்று மதியம் வெடி விபத்து ஏற்பட்டது.
    • விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு அவர்களது உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கல் என்றார்.

    விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள பட்டாசு ஆலைகளில் தற்போது உற்பத்தி பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன.

    கோடை காலம் என்பதால் விபத்துக்கள் அதிகம் ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே தொழிலாளர் கவனமுடன் செயல்பட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டு வருகிறார்கள்.

    இந்த நிலையில், சிவகாசி அருகே உள்ள எம்.புதுப்பட்டியில் இயங்கி வரும் தனியார் பட்டாசு ஆலையில் இன்று மதியம் வெடி விபத்து ஏற்பட்டது. இதில் 3 பேர் உடல் கருகி பலியானார்கள்.

    பட்டாசு ஆலை வெடி விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நிதியுதவி அறிவித்துள்ளார்.

    அதன்படி, பட்டாசு ஆலையில் ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்தர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.4 லட்சம் நிதியுதவி அறிவிக்கப்பட்டுள்ளது.

    மேலும், பட்டாசு ஆலை வெடி விபத்தில் 3 பேர் உயிரிழந்தனர் என்ற துயரமான செய்தி கேட்டு அதிர்ச்சி, வேதனை அடைந்தேன். விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு அவர்களது உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கல் என்றார்.

    விபத்தில் படுகாயம் அடைந்தவர்களுக்கு தலா ரூ.1 லட்சமும், லேசான காயம் அடைந்தவர்களுக்கு ரூ.50 ஆயிரம் வழங்க முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.

    • வெடி விபத்தில் படுகாயமடைந்த 7 பேர் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
    • வெடி விபத்து ஏற்பட்டதற்கான காரணம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    ஆந்திர பிரதசேம் மாநிலம், அனகபள்ளி மாவட்டத்தில் உள்ள கைலாசப்பட்டினத்தில் பட்டாசு தொழிற்சாலையில் வெடி விபத்து ஏற்பட்டது. இதனால் ஏற்பட்ட தீ விபத்தில், 8 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், படுகாயமடைந்த 7 பேர் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

    இந்நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்த ஆந்திரா முதல்வர் சந்திரபாபு நாயுடு உத்தரவிட்டார்.

    மேலும, வெடி விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு தலா ரூ.2 லட்சம் நிதியுதவி வழங்கிட பிரதமர் மோடி உத்தரவிட்டுள்ளார்.

    இதுகுறித்த பிரதமர் மோடி வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:-

    ஆந்திராவின் அனகாப்பள்ளி மாவட்டத்தில் நடந்த தொழிற்சாலை விபத்தில் ஏற்பட்ட உயிரிழப்பு மிகுந்த வருத்தத்தை அளிக்கிறது.

    தங்கள் அன்புக்குரியவர்களை இழந்தவர்களுக்கு இரங்கல். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடையட்டும்.

    உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு பிரதமரின் தேசிய நிவாரண நிதியிலிருந்து ரூ.2 லட்சம் நிவாரணத் தொகை வழங்கப்படும். காயமடைந்தவர்களுக்கு ரூ. 50 ஆயிரம் வழங்கப்படும்.

    இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

    • திருவிழாவில் மின் அலங்காரத்திற்கு ஏணியை அகற்றிய போது மின்சாரம் தாக்கியது.
    • அரசு சார்பில் தலா ஒரு லட்ச ரூபாய் வழங்கப்பட்டது.

    கன்னியாகுமரி மாவட்டம் இனையம் புத்தன்துறை மீனவ கிராமத்தில் கடந்த மார்ச் 1- ம் தேதி, தேவாலய திருவிழாவில் மின் விளக்குகள் அலங்காரத்திற்கு பயன்படுத்திய ஏணியை அகற்றிய போது மின்சாரம் தாக்கி விஜயன் வயது 52, ஜஷ்டஸ் வயது 33, சோபன் வயது 45, மைக்கேல் பின்டோ வயது 42 ஆகிய நான்கு பேர் உயிரிழந்தனார்.

    மின்சாரம் தாக்கி உயிரிழந்த நான்கு பேரின் குடும்பத்திற்கு தலா ஐந்து லட்ச ரூபாய் நிவாரண நிதியை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.

    இந்நிலையில் உயிரிழந்த மீனவர்களின் குடும்பத்திற்கு மீனவரணி மாநில செயலாளர் ஏற்பாட்டில் தலா ஒரு லட்ச ரூபாய் வழங்கப்பட்டது.

    மீனவரணி மாநில செயலாளர் ஜோசப் ஸ்டாலின், மேயர் மகேஷ் ஆகியோர் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினரிடம் நிவாரண நிதியை வழங்கினர்.

    நிகழ்ச்சியில் தமிழ்நாடு மாநில மீனவர் நல்வாரிய உறுப்பினர் ஜோஸ், கிழக்கு மாவட்ட மீனவரணி தலைவர் எஸ். கே. ஆன்டனிராஜ், மீனவரணி அமைப்பாளர் அனனியாஸ் உள்ளிட்ட பலரும் உடனிருந்தனர்.

    • நெல்லை மாவட்டத்தில் செல்லத்துரை என்ற காவலர் கடந்த மாதம் உடல்நலக் குறைவால் உயிரிழந்தார்
    • 2009 -ம் ஆண்டு அவருடன் பணியில் சேர்ந்த சக போலீஸ் நண்பர்கள் ஒருங்கிணைந்து அவரது குடும்பத்துக்கு உதவி செய்ய திட்டமிட்டனர்

    நெல்லை:

    நெல்லை மாவட்டத்தில் செல்லத்துரை என்ற காவலர் கடந்த மாதம் உடல்நலக் குறைவால் உயிரிழந்தார். இதனையடுத்து தமிழகம் முழுவதும் 2009 -ம் ஆண்டு அவருடன் பணியில் சேர்ந்த சக போலீஸ் நண்பர்கள் ஒருங்கிணைந்து அவரது குடும்பத்துக்கு உதவி செய்ய திட்டமிட்டனர்.

    அதன்படி ரூ.24,85,450 வசூல் செய்து செல்லத்துரையின் மனைவி பெயரில் காப்பீட்டு நிறுவனத்தில் ரூ.12,21,600-ஐ டெபாசிட் செய்துள்ளனர். அதேபோல் அவரது மகள்கள் பெயரிலும் 10 ஆண்டுகளுக்கு டெபொசிட் செய்துள்ளனர்.

    இதுகுறித்து போலீசார் கூறுகையில், மறைந்த செல்லத்துரையின் இழப்பு ஈடுசெய்ய இயலாது என்ற போதிலும் அவரது குடும்பத்தை 2009- பேட்ஜ் போலீஸ் சொந்தங்கள் அனைவரும் இணைந்து வறுமையில் இருந்து மீட்பதற்காக எங்களால் முடிந்த உதவியை செய்துள்ளோம் என்றனர்.

    • அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு ரூ.16 கோடி நிதி உதவி அளிப்பதாக தொழிலாளர் உதவி ஆணையர் தகவல் தெரிவித்துள்ளார்.
    • கடந்த மாத இறுதிவரை 9,151 பேருக்கு ரூ.3 கோடியே 9 லட்சத்து 58 ஆயிரத்து 390 நிதி உதவி வழங்கப்பட்டுள்ளது.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்ட கலெக்டர் தலைமையில் நடந்த கண்காணிப்பு குழு கூ ட்டத்தில் விருதுநகர் மாவட்டத்தில் கடந்த 11 மாதங்களில் அமைப்பு சாரா தொழிலாளர் நல வாரியங்களில் 21,739 நபர்கள் புதிதாக உறுப்பினராக சேர்க்கப்பட்டுள்ளனர். 15,629 பேரின் பதிவு புதுப்பிக்கப்பட்டுள்ளது.

    ஓய்வூதியம் 455 நபர்களுக்கும், கல்வி உதவித்தொகை 27,253 நபர்களுக்கும், இயற்கை மரண நிதி உதவி 579 நபர்களுக்கும் மற்றும் இதர நலத்திட்ட உதவிகள் சேர்த்து மொத்தம் 31,890 நபர்களுக்கு ரூ.16 கோடியே 40 லட்சம் நிதி உதவி வழங்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.

    தமிழ்நாடு கட்டுமான தொழிலாளர் நல வாரியத்தில் பதிவு செய்து குறைந்த பட்சம் 3 ஆண்டுகள் உறுப்பினராக உள்ள சொந்த வீடு இல்லாத கட்டுமான தொழிலாளயர்களுக்கு தாமாக சொந்தமாக வீடு கட்ட அல்லது அரசின் அடுக்குமாடி குடியிருப்பில் வீடு ஒதுக்கீடு பெற ரூ.4 லட்சம் நிதி உதவி அளிக்கப்படும் திட்டம் அறிமுகப்படுத்தப் பட்டுள்ளது.

    6 கட்டுமான தொழிலாளர்களுக்கு நிதி உதவி அளிக்க சென்னை தமிழ்நாடு கட்டுமான தொழிலாளர் நல வாரியத்தால் இறுதி அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

    மாவட்டத்தில் முதன்மையாக நடைபெறும் பட்டாசு மற்றும் தீப்பெட்டி தொழிலில் ஈடுபட்டுள்ள இ.எஸ்.ஐ. மற்றும் சேமநலநிதி பிடித்தம் செய்யப்படாத அமைப்பு சாரா தொழிலாளர்களின் சமூக பாதுகாப்பிற்கு தமிழக அரசால் தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு துறை உத்தரவின் பேரில் தமிழ்நாடு பட்டாசு மற்றும் தீப்பெட்டி தொழிலாளர் நல வாரியம் கடந்த 2021-ம் ஆண்டு முதல் செயல்பட்டு வருகிறது. கடந்த மாத இறுதிவரை 9,151 பேருக்கு ரூ.3 கோடியே 9 லட்சத்து 58 ஆயிரத்து 390 நிதி உதவி வழங்கப்பட்டுள்ளது.

    மேற்கண்ட தகவலை தொழிலாளர் உதவி ஆணையர் காளிதாஸ் தெரிவித்தார்.

    • விவசாயிகள் உடனடியாக தங்களது பதிவுகளை புதுப்பிக்க வேண்டியது அவசியம்.
    • புதுப்பிக்க தவறியவர்களுக்கு நிதி வழங்குவது நிறுத்தி வைக்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.

    விளாத்திகுளம்:

    புதூர் வேளாண்மை உதவி இயக்குநர் சின்னகண்ணு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    பிரதமரின் கிசான் சம்மன் நிதி திட்டத்தின் கீழ் ஆண்டுக்கு ரூ.6 ஆயிரம் தங்கள் வங்கி கணக்கில் பெற்று வரும் விவசாயிகள் உடனடியாக தங்களது பதிவுகளை புதுப்பிக்க வேண்டியது அவசியம். தங்கள் பதிவினை புதுப்பித்தல் மூலம் தாங்கள் தொடர்ந்து இந்த நிதியை பெற இயலும்.

    புதுப்பிக்க தவறியவர்களுக்கு நிதி வழங்குவது நிறுத்தி வைக்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.இத்திட்டத்தில் பயன்பெறும் விவசாயிகள் தங்களது பதிவினை புதுப்பிக்க ஆதார் எண், ஏற்கெனவே பதிவு செய்த செல்போன் எண் எடுத்துச் சென்று அங்கிகரிக்கப்பட்ட பொது சேவை மையங்கள் அல்லது அஞ்சல் அலுவலகங்களில் இ.கே.ஒய்.சி மூலம் புதுப்பித்துக் கொள்ளலாம்.

    விவசாயிகளுக்கு 13-வது தவணை டிசம்பர் மாதம் வங்கி கணக்கில் செலுத்தப்பட உள்ளதால் டிசம்பர் முதல் வாரத்திற்குள் விவசாயிகள் தங்களது பதிவினை புதுப்பித்தல் அவசியம்.மேலும் விவரங்களுக்கு புதூர் வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

    ×