என் மலர்
உள்ளூர் செய்திகள்

காவலர் குடும்பத்திற்கு சக போலீஸ் நண்பர்கள் நிதி உதவி வழங்கிய காட்சி
நெல்லையில் உயிரிழந்த காவலரின் குடும்பத்திற்கு நிதி உதவி
- நெல்லை மாவட்டத்தில் செல்லத்துரை என்ற காவலர் கடந்த மாதம் உடல்நலக் குறைவால் உயிரிழந்தார்
- 2009 -ம் ஆண்டு அவருடன் பணியில் சேர்ந்த சக போலீஸ் நண்பர்கள் ஒருங்கிணைந்து அவரது குடும்பத்துக்கு உதவி செய்ய திட்டமிட்டனர்
நெல்லை:
நெல்லை மாவட்டத்தில் செல்லத்துரை என்ற காவலர் கடந்த மாதம் உடல்நலக் குறைவால் உயிரிழந்தார். இதனையடுத்து தமிழகம் முழுவதும் 2009 -ம் ஆண்டு அவருடன் பணியில் சேர்ந்த சக போலீஸ் நண்பர்கள் ஒருங்கிணைந்து அவரது குடும்பத்துக்கு உதவி செய்ய திட்டமிட்டனர்.
அதன்படி ரூ.24,85,450 வசூல் செய்து செல்லத்துரையின் மனைவி பெயரில் காப்பீட்டு நிறுவனத்தில் ரூ.12,21,600-ஐ டெபாசிட் செய்துள்ளனர். அதேபோல் அவரது மகள்கள் பெயரிலும் 10 ஆண்டுகளுக்கு டெபொசிட் செய்துள்ளனர்.
இதுகுறித்து போலீசார் கூறுகையில், மறைந்த செல்லத்துரையின் இழப்பு ஈடுசெய்ய இயலாது என்ற போதிலும் அவரது குடும்பத்தை 2009- பேட்ஜ் போலீஸ் சொந்தங்கள் அனைவரும் இணைந்து வறுமையில் இருந்து மீட்பதற்காக எங்களால் முடிந்த உதவியை செய்துள்ளோம் என்றனர்.






