search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "cracker factory"

    • உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு நிவாரண உதவி அளிப்பது வாடிக்கையாக நடந்து கொண்டு இருக்கிறது.
    • தீபாவளிப் பண்டிகை வருவதை முன்னிட்டு பட்டாசு தயாரிக்கும் பணிகள் வேகமாக நடைபெற்றுக் கொண்டிருக்கும்.

    சென்னை:

    முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    இந்தியாவிலேயே பட் டாசு உற்பத்தியில் தமிழ்நாடு முதன்மை வகிக்கிறது என்ப தும், தீபாவளிப் பண்டிகை மற்றும் இதர பண்டிகைகளுக்காக தமிழ்நாட்டில் இருந்துதான் பிற மாநிலங்களுக்கு பட்டாசுகள் அனுப்பி வைக்கப்படுகின்றன என்பதும், இந்தத் தொழிலை நம்பி ஆயிரக்கணக்கான ஏழைக் குடும்பங்கள் உள்ளன என்பதும் யாவரும் அறிந்த ஒன்றாகும்.

    பட்டாசு தொழிற் சாலைகளில் ஏற்படும் வெடி விபத்துகள் மூலம் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு நிவாரண உதவி அளிப்பது வாடிக்கையாக நடந்து கொண்டு இருக்கிறது. இது மிகவும் வேதனை அளிக்கும் செயலாகும்.

    தீபாவளிப் பண்டிகை வருவதை முன்னிட்டு பட்டாசு தயாரிக்கும் பணிகள் வேகமாக நடைபெற்றுக் கொண்டிருக்கும் இந்தத் தருணத்தில், பாதுகாப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்தும் அங்கு பணிபுரியும் தொழிலாளர்களுக்கு தொழிலகப் பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்கக அதிகாரிகள் எடுத்துக்கூறி அவர்களிடையே ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்தி, இனி வருங்காலங்களில் பட்டாசு தொழிற் சாலைகளில் அடிக்கடி விபத்துகள் நிகழ்வதை தடுத்து நிறுத்த வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்.

    • சேலம் அருகே சர்க்கார்கொல்லப்பட்டி பகுதியிaல் கந்தசாமி என்ப வர் பட்டாசு ஆலை நடத்தி வந்தார்.
    • இந்த ஆலையில் கடந்த 1-ந் தேதி பயங்கர வெடிவிபத்து ஏற்பட்டது.

    சேலம்:

    சேலம் அருகே சர்க்கார்கொல்லப்பட்டி பகுதியிaல் கந்தசாமி என்ப வர் பட்டாசு ஆலை நடத்தி வந்தார். இந்த ஆலையில் கடந்த 1-ந் தேதி பயங்கர வெடிவிபத்து ஏற்பட்டது. இதில் சம்பவ இடத்திலேயே கந்தசாமியின் மகன் சதீஷ்குமார், நடேசன், பானுமதி ஆகியோர் உடல் சிதறி பலியாகினர்.

    எஸ்.கொல்லப்பட்டியை சேர்ந்த பிரபாகரன், மஜ்ரா கொல்லப்பட்டியை சேர்ந்த மோகனா, வசந்தா, மகேஸ்வரி, மணிமேகலை (வயது 46),

    பிருந்தா (29) ஆகிய 6 பேர் படுகாயம் அடைந்தனர். உயிருக்கு ஆபத்தான நிலையில் அவர்கள் சேலம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

    கடந்த சில நாட்களுக்கு முன்பு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பலனின்றி பிர பாகரன், மோகனா, மகேஸ்வரி ஆகியோர் இறந்தனர். மற்றவர்களுக்கு டாக்டர்கள் தொடர்ந்து தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். இதில் நேற்று முன்தினம் இரவு மணி மேக லையும், நேற்று மதியம் பிருந்தாவும் சிகிச்சை பல னின்றி பரிதாபமாக இறந்த னர்.வசந்தாவுக்கு மட்டும் தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. அவரும் சிகிச்சை பலனின்றி நேற்று இரவு இறந்தார்.

    இதன் மூலம் இந்த விபத்தில் சிக்கி காயம் அடைந்த 9 பேரும் பலியாகி உள்ளனர்.

    • பட்டாசு ஆலை போர்மேன் திடீரென இறந்தார்.
    • மேல்சிகிச்சைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

    விருதுநகர்

    சாத்தூர் படந்தால் அருகே உள்ள முத்துராமலிங்கபுரம் கிராமத்தை சேர்ந்தவர் காளிராஜ் (வயது 48), பட்டாசு ஆலை போர்மேன். இவருக்கு குடி பழக்கம் இருந்தது. அடிக்கடி குடித்து விட்டு வந்ததால் மனைவி கோபித்துக் கொண்டு ஒருவருடத்திற்கு முன்பு தாய் வீட்டிற்கு சென்று விட்டார். அதன்பின்னர் தனியாக வசித்து வந்த காளிராஜிக்கு உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டது. இந்த நிலையில் அவரது உடல்நிலை மோசமடைந்ததால் உறவினர்கள் விருதுநகர் அரசு ஆஸ்பத்திரிக்கு அவரை கொண்டு சென்றனர்.

    அங்கிருந்து மேல்சிகிச்சைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து காளிராஜ் மனைவி பொன்னுத்தாய் கொடுத்த புகாரின்பேரில் அம்மாபட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • திருமங்கலத்தில் விபத்தில் பட்டாசு ஆலை தொழிலாளி பலியானார்.
    • இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருமங்கலம்

    சிவகாசியை சேர்ந்தவர் மாரிச்சாமி (வயது50). பட்டாசு ஆலையில் வேலை பார்த்து வந்தார். இவர் தனது உறவினர்கள் கணேசன் மற்றும் போசுடன் காரியாபட்டியில் நடக்கும் திருமண நிகழ்ச்சிக்காக மோட்டார் சைக்கிளில் புறப்பட்டார். ஆவல்சூரன்பட்டி அருகே வந்த போது அங்கிருந்த கண்மாய் பாலத்தில் ஏறிய போது மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்து தடுப்புச்சுவரில் மோதியது. இதனால் மோட்டார் சைக்கிளில் இருந்த 3 பேரும் தூக்கி வீசப்பட்டு பாலத்திற்கு கீழே விழுந்தனர்.

    இதில் படுகாயமடைந்த மாரிச்சாமி சம்பவ இடத்திலேயே பலியானார். இந்த விபத்து குறித்து தகவலறிந்த கள்ளிக்குடி போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து மாரிச்சாமி உடலை மீட்டு திருமங்கலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    அருகில் காயங்களுடன் கிடந்த கணேசன், போஸ் ஆகியோரை மீட்டு விருதுநகர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • விருதுநகரில் விதி மீறிய 14 பட்டாசு தொழிற்சாலைகளின் உரிமங்கள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.
    • விருதுநகர் மாவட்ட கலெக்டரால் பல்வேறு வழிகாட்டு நெறிமுறைகள் வழங்கப்பட்டுள்ளன.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்ட கலெக்டர் மேகநாதரெட்டி விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    விருதுநகர் மாவட்டத்திற்குட்பட்ட பகுதிகளில் செயல்பட்டு வரும் பட்டாசு உற்பத்தி ஆலைகளில் ஏற்படும் வெடி விபத்துக்களைக் குறைப்பது மற்றும் அரசு விதிமுறைகளுக்குட்பட்டு பட்டாசு உற்பத்தி செய்யப்படுவதை உறுதி செய்வதுடன், விபத்தில்லா விருதுநகரை உருவாக்குவது தொடர்பாக, விருதுநகர் மாவட்ட கலெக்டரால் பல்வேறு வழிகாட்டு நெறிமுறைகள் வழங்கப்பட்டுள்ளன.

    இந்த வழிகாட்டு நெறிமுறைகள் மற்றும் நடப்பில் உள்ள அரசு விதி முறைகளுக்கு முரணாக, சிறப்பு ஆய்வுக் குழுக்களின் ஆய்வின்போது உள்குத்தகை நடவடிக்கைகள் மற்றும் அதிகளவிலான பட்டாசு பொருட்கள் இருப்பு வைத்திருந்தது உள்ளிட்ட பல்வேறு விதிமீறல்கள் கண்டறியப்பட்டன.

    சிவகாசி வட்டத்திற்குட் பட்ட நாகர் பயர் ஒர்க்ஸ், திருச்செல்வி பயர் ஒர்க்ஸ், தமயந்தி பயர் ஒர்க்ஸ் ஆகிய 3 பட்டாசு ஆலைகள், வெம்பக்கோட்டை வட்டத்திற்குட்பட்ட நயா கார்னேசன் பயர் ஒர்க்ஸ், ஸ்ரீ பாலகுரு பயர் ஒர்க்ஸ், எம்.பி. பயர் ஒர்க்ஸ், தாமரைக் கண்ணன் பயர் ஒர்க்ஸ், குரு பயர் ஒர்க்ஸ், சண்முகா பயர் ஒர்க்ஸ், முத்துகணேஷ் பயர் ஒர்க்ஸ், சீகல் பயர் ஒர்க்ஸ் இண்டஸ்ட்ரீஸ் ஆகிய 8 பட்டாசு ஆலைகள், சாத்தூர் வட்டத்திற்குட்பட்ட ராஜேசுவரன் பயர் ஒர்க்ஸ் பட்டாசு ஆலை, ஸ்ரீவில்லி புத்தூர் வட்டத்திற்குட்பட்ட என்.எஸ்.வி.பயர் ஒர்க்ஸ், தினேஷ் பயர் ஒர்க்ஸ் ஆகிய 2 பட்டாசு ஆலைகள் என மொத்தம் 14 பட்டாசு தொழிற்சாலைகளின் படைக்கலச்சட்ட உரிமங்கள் தற்காலிகமாக நிறுத்தம் செய்து ஆணையி டப்பட்டுள்ளது.

    விருதுநகர் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் பட்டாசு ஆலைகள் அனைத்தும், உரிமதாரர்களால் மட்டுமே நடத்தப்பட வேண்டும் என்றும், உரிமதாரர்கள் தங்களது பட்டாசு தொழிற்சா லைகளை விதிமுறைகளுக்கு முரணாக வேறு நபர்களுக்கு உள்குத்தகைக்கு விடக் கூடாது என்றும், ஆய்வின் போது உள்குத்தகை விடப்பட்டது கண்டறிய ப்பட்டால் இனி வரும் காலங்களில் மேற்கண்ட பட்டாசு தொழிற் சாலை உரிமையாளர்கள் மீதும், உள் குத்தகை நடவடிக்கையில் ஈடுபட்டோர் மீதும் கடுமையான குற்றவியல் நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

    மேலும் ஆலைகளின் உரிமங்கள் நிரந்தரமாக ரத்து செய்யப்படுவதுடன், ஆலை உரிமதாரர்கள் மற்றும் குத்தகைதாரர்கள் பட்டாசு உற்பத்திக்கான உரிமங்கள் பெறுவதில் இருந்து நிரந்தரமான தடை உள்ளிட்ட மிகக் கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • சிவகாசி அருகே பட்டாசு ஆலை வெடி விபத்தில் மதுரையில் சிகிச்சை பெற்று வந்த மேலும் ஒரு தொழிலாளி இறந்தார்.
    • இதனால் பட்டாசு ஆலை விபத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை 2 ஆக உயர்ந்துள்ளது.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்டம் சிவகாசியை அடுத்த செங்கமலபட்டியில் கிருஷ்ணமூர்த்தி என்பவருக்கு சொந்தமான பட்டாசு ஆலை உள்ளது. இங்கு அருகில் உள்ள கிராமங்களை சேர்ந்த 20-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை பார்த்து வருகின்றனர்.

    இந்த நிலையில் கடந்த 19-ந் தேதி பட்டாசு தயாரிக்கும் பணியில் திருத்தங்கல் மேலமாட வீதியை சேர்ந்த ரவி(வயது58), சாமுவேல் ஜெயராஜ் உள்பட தொழிலாளர்கள் வேலை பார்த்து கொண்டிருந்தனர்.

    அவர்கள் ஆலையில் உள்ள தனி அறையில் பட்டாசு தயாரிப்பதற்காக மருந்துகளை தயார் செய்து கொண்டிருந்தனர். அப்போது மருந்துகளுக்குள் உராய்வு ஏற்பட்டதால் திடீரென தீப்பிடித்தது.

    இதில் அங்கிருந்த பட்டாசுகள் வெடித்தன. இதன் காரணமாக கட்டிடம் இடிந்து தரைமட்டமாகியது. இதில் சிக்கிய ரவி படுகாயமடைந்து சம்பவ இடத்திலேயே இறந்தார். இந்த விபத்தில் சாமுவேல் ஜெயராஜூம் படுகாயமடைந்தார். இதுபற்றி தகவல் கிடைத்ததும் சிவகாசி தீயணைப்பு படை வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீயை அணைத்தனர்.

    சாமுவேல் ஜெயராஜை மீட்டு சிவகாசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் அவர் மேல் சிகிச்சைக்காக மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர்.

    இருந்த போதிலும் சிகிச்சை பலனிளிக்காமல் சாமுவேல் ஜெயராஜ் இன்று அதிகாலை பரிதாபமாக இறந்தார். இந்த விபத்து குறித்து சிவகாசி கிழக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்த விபத்தில் சிக்கிய ரவி ஏற்கனவே பலியான நிலையில் தற்போது சாமுவேல் ஜெயராஜூம் பலியாகிவிட்டார். இதனால் பட்டாசு ஆலை விபத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை 2 ஆக உயர்ந்துள்ளது.

    சிவகாசி அருகே பட்டாசு ஆலை வெடி விபத்தில் உடல் கருகிய 4 தொழிலாளிகள் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
    விருதுநகர்:

    விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகே எம்.புதுப்பட்டியை அடுத்துள்ள காளையார் குறிச்சி கிராமத்தில் கனகபிரபு என்பவருக்கு சொந்தமான பட்டாசு ஆலை உள்ளது.

    இங்கு சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த பெண்கள் உள்பட ஏராளமானோர் வேலை பார்த்து வருகின்றனர்.

    இன்று காலை வழக்கம் போல் ஊழியர்கள் பணியில் ஈடுபட்டிருந்தனர். ஆலையில் உள்ள ஒரு அறையில் ராக்கெட் வெடிக்கு மருந்து நிரப்பும் பணி நடைபெற்று வந்தது.

    அப்போது மருந்துகளில் உராய்வு ஏற்பட்டு வெடிக்கத் தொடங்கியது. சிறிது நேரத்தில் தீ அறை முழுவதும் பரவியது. அங்கிருந்த பட்டாசுகளில் தீ பரவி பயங்கர சத்தத்துடன் வெடித்தன.

    இந்த விபத்தில் அந்த அறையில் இருந்த தொழிலாளர்கள் திருத்தங்கலைச் சேர்ந்த ராமசாமி (வயது 67), சுக்கிரவார்பட்டி மாரி பாண்டி (47), காளையார் குறிச்சி முருகேசன் (47), எரிச்சநத்தம் அழகுபாண்டி (26) ஆகிய 4 பேர் உடல் கருகினர்.

    தகவல் அறிந்த சிவகாசி தீயணைப்பு வீரர்கள் மற்றும் எம்.புதுப்பட்டி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து தீ விபத்தில் காயமடைந்த 4 பேரையும் மீட்டனர். 90 சதவீதத்திற்கும் மேல் காயமடைந்த இவர்கள் சிவகாசி அரசு ஆஸ்பத்திரியில் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    எம்.புதுப்பட்டி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். #tamilnews
    ×