பட்டாசு ஆலை போர்மேன் திடீர் சாவு

பட்டாசு ஆலை போர்மேன் திடீரென இறந்தார். மேல்சிகிச்சைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.
பட்டாசு ஆலை போர்மேன் திடீர் சாவு
Published on

விருதுநகர்

சாத்தூர் படந்தால் அருகே உள்ள முத்துராமலிங்கபுரம் கிராமத்தை சேர்ந்தவர் காளிராஜ் (வயது 48), பட்டாசு ஆலை போர்மேன். இவருக்கு குடி பழக்கம் இருந்தது. அடிக்கடி குடித்து விட்டு வந்ததால் மனைவி கோபித்துக் கொண்டு ஒருவருடத்திற்கு முன்பு தாய் வீட்டிற்கு சென்று விட்டார். அதன்பின்னர் தனியாக வசித்து வந்த காளிராஜிக்கு உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டது. இந்த நிலையில் அவரது உடல்நிலை மோசமடைந்ததால் உறவினர்கள் விருதுநகர் அரசு ஆஸ்பத்திரிக்கு அவரை கொண்டு சென்றனர்.

அங்கிருந்து மேல்சிகிச்சைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து காளிராஜ் மனைவி பொன்னுத்தாய் கொடுத்த புகாரின்பேரில் அம்மாபட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com