search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    பட்டாசு ஆலைகளில் தொடர்ந்து ஏற்படும் வெடிவிபத்துகளை தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்- ஓ.பன்னீர்செல்வம்
    X

    பட்டாசு ஆலைகளில் தொடர்ந்து ஏற்படும் வெடிவிபத்துகளை தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்- ஓ.பன்னீர்செல்வம்

    • உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு நிவாரண உதவி அளிப்பது வாடிக்கையாக நடந்து கொண்டு இருக்கிறது.
    • தீபாவளிப் பண்டிகை வருவதை முன்னிட்டு பட்டாசு தயாரிக்கும் பணிகள் வேகமாக நடைபெற்றுக் கொண்டிருக்கும்.

    சென்னை:

    முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    இந்தியாவிலேயே பட் டாசு உற்பத்தியில் தமிழ்நாடு முதன்மை வகிக்கிறது என்ப தும், தீபாவளிப் பண்டிகை மற்றும் இதர பண்டிகைகளுக்காக தமிழ்நாட்டில் இருந்துதான் பிற மாநிலங்களுக்கு பட்டாசுகள் அனுப்பி வைக்கப்படுகின்றன என்பதும், இந்தத் தொழிலை நம்பி ஆயிரக்கணக்கான ஏழைக் குடும்பங்கள் உள்ளன என்பதும் யாவரும் அறிந்த ஒன்றாகும்.

    பட்டாசு தொழிற் சாலைகளில் ஏற்படும் வெடி விபத்துகள் மூலம் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு நிவாரண உதவி அளிப்பது வாடிக்கையாக நடந்து கொண்டு இருக்கிறது. இது மிகவும் வேதனை அளிக்கும் செயலாகும்.

    தீபாவளிப் பண்டிகை வருவதை முன்னிட்டு பட்டாசு தயாரிக்கும் பணிகள் வேகமாக நடைபெற்றுக் கொண்டிருக்கும் இந்தத் தருணத்தில், பாதுகாப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்தும் அங்கு பணிபுரியும் தொழிலாளர்களுக்கு தொழிலகப் பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்கக அதிகாரிகள் எடுத்துக்கூறி அவர்களிடையே ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்தி, இனி வருங்காலங்களில் பட்டாசு தொழிற் சாலைகளில் அடிக்கடி விபத்துகள் நிகழ்வதை தடுத்து நிறுத்த வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்.

    Next Story
    ×