பட்டாசு ஆலை தொழிலாளி பலி

திருமங்கலத்தில் விபத்தில் பட்டாசு ஆலை தொழிலாளி பலியானார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பட்டாசு ஆலை தொழிலாளி பலி
Published on

திருமங்கலம்

சிவகாசியை சேர்ந்தவர் மாரிச்சாமி (வயது50). பட்டாசு ஆலையில் வேலை பார்த்து வந்தார். இவர் தனது உறவினர்கள் கணேசன் மற்றும் போசுடன் காரியாபட்டியில் நடக்கும் திருமண நிகழ்ச்சிக்காக மோட்டார் சைக்கிளில் புறப்பட்டார். ஆவல்சூரன்பட்டி அருகே வந்த போது அங்கிருந்த கண்மாய் பாலத்தில் ஏறிய போது மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்து தடுப்புச்சுவரில் மோதியது. இதனால் மோட்டார் சைக்கிளில் இருந்த 3 பேரும் தூக்கி வீசப்பட்டு பாலத்திற்கு கீழே விழுந்தனர்.

இதில் படுகாயமடைந்த மாரிச்சாமி சம்பவ இடத்திலேயே பலியானார். இந்த விபத்து குறித்து தகவலறிந்த கள்ளிக்குடி போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து மாரிச்சாமி உடலை மீட்டு திருமங்கலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

அருகில் காயங்களுடன் கிடந்த கணேசன், போஸ் ஆகியோரை மீட்டு விருதுநகர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com