பட்டாசு ஆலை வெடி விபத்தில் சிக்கி சிகிச்சைபெற்று வந்த 9 பேரும் பலி

சேலம் அருகே சர்க்கார்கொல்லப்பட்டி பகுதியிaல் கந்தசாமி என்ப வர் பட்டாசு ஆலை நடத்தி வந்தார். இந்த ஆலையில் கடந்த 1-ந் தேதி பயங்கர வெடிவிபத்து ஏற்பட்டது.
பட்டாசு ஆலை வெடி விபத்தில் சிக்கி சிகிச்சைபெற்று வந்த 9 பேரும் பலி
Published on

சேலம்:

சேலம் அருகே சர்க்கார்கொல்லப்பட்டி பகுதியிaல் கந்தசாமி என்ப வர் பட்டாசு ஆலை நடத்தி வந்தார். இந்த ஆலையில் கடந்த 1-ந் தேதி பயங்கர வெடிவிபத்து ஏற்பட்டது. இதில் சம்பவ இடத்திலேயே கந்தசாமியின் மகன் சதீஷ்குமார், நடேசன், பானுமதி ஆகியோர் உடல் சிதறி பலியாகினர்.

எஸ்.கொல்லப்பட்டியை சேர்ந்த பிரபாகரன், மஜ்ரா கொல்லப்பட்டியை சேர்ந்த மோகனா, வசந்தா, மகேஸ்வரி, மணிமேகலை (வயது 46),

பிருந்தா (29) ஆகிய 6 பேர் படுகாயம் அடைந்தனர். உயிருக்கு ஆபத்தான நிலையில் அவர்கள் சேலம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

கடந்த சில நாட்களுக்கு முன்பு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பலனின்றி பிர பாகரன், மோகனா, மகேஸ்வரி ஆகியோர் இறந்தனர். மற்றவர்களுக்கு டாக்டர்கள் தொடர்ந்து தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். இதில் நேற்று முன்தினம் இரவு மணி மேக லையும், நேற்று மதியம் பிருந்தாவும் சிகிச்சை பல னின்றி பரிதாபமாக இறந்த னர்.வசந்தாவுக்கு மட்டும் தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. அவரும் சிகிச்சை பலனின்றி நேற்று இரவு இறந்தார்.

இதன் மூலம் இந்த விபத்தில் சிக்கி காயம் அடைந்த 9 பேரும் பலியாகி உள்ளனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com