என் மலர்
நீங்கள் தேடியது "Director Pa Ranjith"
- வேட்டுவம் படத்தின் கார் சேசிங் காட்சிகள் விழுந்தமாவடி பகுதியில் சமீபத்தில் படமாக்கப்பட்டது.
- பட காட்சியில் சண்டை பயிற்சியாளர் மோகன்ராஜ் ஈடுபட்டு பரிதாபமாக உயிரிழந்தார்.
நாகை மாவட்டம், கீழ்வேளூர், வெண்மணி, விழுந்தமாவடி, காரைமேடு உள்ளிட்ட பகுதிகளில் இயக்குனர் பா.ரஞ்சித் இயக்கத்தில் உருவாகும் 'வேட்டுவம்' படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வந்தது.
அப்போது இந்த படத்தின் முக்கியமான கார் சேசிங் காட்சிகள் விழுந்தமாவடி பகுதியில் சமீபத்தில் படமாக்கப்பட்டது. இந்த காட்சியில் சண்டை பயிற்சியாளர் மோகன்ராஜ் (வயது 52) ஈடுபட்டு அதில் பரிதாபமாக உயிரிழந்தார்.
சண்டை பயிற்சியாளர் மோகன்ராஜ் உயிரிழந்த விவகாரம் தொடர்பாக கீழையூர் காவல் நிலையத்தில் ரஞ்சித் உட்பட 4 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இந்த வழக்கு தொடர்பாக கீழ்வேளூர் நீதிமன்றத்தில் இயக்குநர் பா.ரஞ்சித் நேரில் ஆஜரானார். அப்போது பா.ரஞ்சித்தை நீதிமன்ற பிணையில் விடுவித்து நீதிபதி உத்தரவு பிறப்பித்தார்.
ஏற்கனவே இந்த வழக்கில் 3 பேர் முன்ஜாமின் எடுத்துவிட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது
- படத்தின் முக்கியமான கார் சேசிங் காட்சிகள் விழுந்தமாவடி பகுதியில் சமீபத்தில் படமாக்கப்பட்டது.
- பட காட்சியில் சண்டை பயிற்சியாளர் மோகன்ராஜ் ஈடுபட்டு பரிதாபமாக உயிரிழந்தார்.
நாகை மாவட்டம், கீழ்வேளூர், வெண்மணி, விழுந்தமாவடி, காரைமேடு உள்ளிட்ட பகுதிகளில் இயக்குனர் பா.ரஞ்சித் இயக்கத்தில் உருவாகும் 'வேட்டுவம்' படத்தின் படப்பிடிப்பு கடந்த ஒரு மாதமாக நடைபெற்று வருகிறது.
இந்த படத்தின் முக்கியமான கார் சேசிங் காட்சிகள் விழுந்தமாவடி பகுதியில் சமீபத்தில் படமாக்கப்பட்டது.
இந்த காட்சியில் சண்டை பயிற்சியாளர் மோகன்ராஜ் (வயது 52) ஈடுபட்டு அதில் பரிதாபமாக உயிரிழந்தார்.
இந்த நிலையில், வேட்டுவம் பட ஷூட்டிங்கில் உயிரிழந்த ஸ்டண்ட் கலைஞர் மோகன் ராஜுவின் குடும்பத்துக்கு இயக்குநர் பா.ரஞ்சித் ரூ.20 லட்சம் நிதியுதவி வழங்குவதாக அறிவித்துள்ளார்.
- விடுதலை சிகப்பிக்கு தண்டனை வாங்கி தர உயர்நீதிமன்றத்துக்கு பாரத் இந்து முன்னணி சென்று போராடும்.
- டைரக்டர் ரஞ்சித் உதவியாளர் செய்த தவறை திசை திருப்பும் முயற்சியை உடனே நிறுத்த வேண்டும்.
சென்னை:
பாரத் இந்து முன்னணி அமைப்பின் மாநில தலைவர் ஆர்.டி.பிரபு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
டைரக்டர் பா.ரஞ்சித்தின் உதவியாளர் விடுதலை சிகப்பி என்பவர் ராமர் சீதா தேவி, லட்சுமணன், அனுமன் ஆகியோர் பற்றி அவதூறாக கவிதை படித்தது தொடர்பாக பாரத் இந்து முன்னணி மாவட்ட தலைவர் சுரேஷ் அளித்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்து கடவுள்களை அவமானப்படுத்தி, கேவலப்படுத்தி பேசியதற்காக மன்னிப்பு கேட்கவில்லை என்றாலும் அவர் பேசியதில் எந்த தவறும் இல்லை என்று மீண்டும், மீண்டும் அவர்கள் பேசுவது வருத்தத்தை ஏற்படுத்துகிறது.
விடுதலை சிகப்பிக்கு தண்டனை வாங்கி தர உயர்நீதிமன்றத்துக்கு பாரத் இந்து முன்னணி சென்று போராடும்.
டைரக்டர் ரஞ்சித் உதவியாளர் செய்த தவறை திசை திருப்பும் முயற்சியை உடனே நிறுத்த வேண்டும். இல்லையென்றால் டைரக்டர் ரஞ்சித் அலுவலகம் முன்பு பாரத் இந்து முன்னணி சார்பில் ஸ்ரீராம நாம பஜனைகளுடன் முற்றுகை போராட்டம் நடத்தப்படும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
- 'சூது கவ்வும் 2 - நாடும் நாட்டு மக்களும்' படம் வரும் 13-ந்தேதி வெளியாகிறது.
- சூது கவ்வும்-2 படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடைபெற்றது.
நலன் குமாரசாமி இயக்கத்தில் நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் 2013ஆம் ஆண்டு வெளியான 'சூது கவ்வும்' திரைப்படம் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து சூது கவ்வும் படத்தின் அடுத்த பாகம் உருவாகியுள்ளது.
'சூது கவ்வும் 2 - நாடும் நாட்டு மக்களும்' என்று தலைப்பிடப்பட்டு இருக்கும் இந்த படத்தை இயக்குநர் எம்.எஸ். அர்ஜூன் இயக்கி இருக்கிறார். இந்தப் படத்தில் நடிகர் மிர்ச்சி சிவா நாயகனாக நடித்துள்ளார். இந்த படத்தில் ராதாரவி, எம்.எஸ். பாஸ்கர், கருணாகரன், கராத்தே கார்த்தி, ரமேஷ் திலக், அருள்தாஸ், ஹரிஷா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
இந்த படத்தை தங்கம் சினிமாஸ் சார்பில் எஸ் தியாகராஜன் மற்றும் திருக்குமரன் என்டர்டெயின்மென்ட்ஸ் சார்பில் சி.வி.குமார் இணைந்து தயாரித்துள்ளனர். இந்தப் படத்திற்கு எட்வின் லூயிஸ் விஸ்வநாத் இசையமைத்துள்ளார்.
'சூது கவ்வும் 2 - நாடும் நாட்டு மக்களும்' படம் வரும் 13-ந்தேதி வெளியாகிறது.
இந்நிலையில், சூது கவ்வும்-2 படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடைபெற்றது. அப்போது, வெளியிடப்பட்ட டிரெய்லர் ரசிகர்களின் எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ளது.
விழாவில், இயக்குனர்கள் பா.ரஞ்சித், கார்த்திக் சுப்பராஜ், இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் உள்ளிட்டோர் கலந்துக் கொண்டனர்.
அப்போது பேசிய சந்தோஷ் நாராயணன், "ரஞ்சித்க்கு இனிமேல் இடிச்சுத் தள்ளிட்டு நான்தான் மியூசிக் பண்ணுவேன். வேற யாருக்கும் இத விடமாட்டேன். இது ஒரு கட்டளை. சூது கவ்வும் படக்குழுவுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள்" என்றார்.
முன்னதாக, இயக்குனர் பா.ரஞ்சித்திற்கும், இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணனுக்கும் மனக்கசப்பு இருந்து வந்தது குறிப்பிடத்தக்கது.
- அம்பேத்கர் பெயருக்கு பின்னால் இருக்கும் பவரை இப்போது உணர்ந்திருக்கிறார்கள்.
- பாபாசாகேப் அம்பேத்கரை பின்பற்றுபவனாக பெருமையாக உள்ளது.
பாராளுமன்றத்தில் கடந்த செவ்வாய்க்கிழமை அரசமைப்பு சட்டம் மீது விவாதம் நடந்தது. அப்போது பேசிய மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா, "எதிர்க்கட்சிகளுக்கு அம்பேத்கர் பெயரை தொடர்ந்து பல முறை முழக்கம் இடுவது வாடிக்கையாக இருக்கிறது.
அதற்கு பதிலாக கடவுளின் பெயரை இவ்வளவு முறை உச்சரித்தால் அவர்களுக்கு சொர்க்கத்தில் இடம் கிடைத்து இருக்கும்" என்று கூறினார்.
அமித்ஷாவின் கருத்துக்கு நாடு முழுவதும் பெரும் எதிர்ப்பு கிளம்பியது. தமிழகம் முழுவதும் அமித்ஷாவுக்கு எதிராக போராட்டம் நடைபெற்றது. அரசியல் தலைவர்கள் சினிமா பிரபலங்கள் என பலரும் அவருக்கு எதிராக கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.
இந்நிலையில் பாபாசாகேப் அம்பேத்கரை யாராலும் வெறுக்கவும் முடியாது, ஒதுக்கவும் முடியாது, புறம் தள்ளவும் முடியாது என அமித்ஷாவுக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் இயக்குனர் பா.ரஞ்சித் கூறியுள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது:-
பாபாசாகேப் அம்பேத்கரை யாராலும் வெறுக்கவும் முடியாது, ஒதுக்கவும் முடியாது, புறம் தள்ளவும் முடியாது. அம்பேத்கர் இல்லாமல் நவீன இந்தியாவை கட்டமைக்கவே முடியாது என்பதை அமித் ஷாவும் பாஜகவினரும் புரிந்துகொண்டிருப்பார்கள் என நம்புகிறேன்.
அம்பேத்கர் பெயருக்கு பின்னால் இருக்கும் பவரை இப்போது உணர்ந்திருக்கிறார்கள். அம்பேத்கரின் கருத்துகளை கொண்டு நமக்குள் இருக்கும் பிரச்னைகளை சரிசெய்ய வேண்டிய நேரம் இதுதான் என நினைக்கிறேன். பாபாசாகேப் அம்பேத்கரை பின்பற்றுபவனாக பெருமையாக உள்ளது... ஜெய் பீம் என ரஞ்சித் கூறினார்.
- பாதிக்கப்பட்ட தலித் மக்களையே குற்றவாளிகளாகச் சித்திரிப்பதை எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாது.
- இந்த முடிவை தமிழக அரசும் கண்டிப்பாக மறுபரிசீலனை செய்ய வேண்டும்.
தமிழக அரசு வேங்கைவயல் வழக்கினை சிபிஐக்கு மாற்றவேண்டும் என்று இயக்குநர் பா. ரஞ்சித் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், "வேங்கைவயல் வழக்கில் தமிழ்நாடு காவல்துறையின் சி.பி.சி.ஐ.டி இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் திடீரென தாக்கல் செய்துள்ள பிரமாண பத்திரத்தில், கடந்த 20ஆம் தேதியே இவ்வழக்கில் குற்றப்பத்திரிகையைத் தாக்கல் செய்துவிட்டதாகவும், அதில் மூன்று பேர் குற்றவாளிகளாக அடையாளம் காணப்பட்டுள்ளனர் எனவும் தெரிவித்துள்ளது.
அம்மூன்று பேரும் தலித் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்பது அதிர்ச்சிக்குரியது. இது திட்டமிட்டுச் செய்யப்படும் செயலாகத் தெரிகிறது. கடந்த இரண்டு வருடங்களாகக் குற்றவாளிகளைக் கண்டுபிடிக்க முடியாத சி.பி.சி.ஐ.டி அவசரக்கதியில் ஏதோ ஒரு காரணத்திற்காகக் குற்றப்பத்திரிக்கையைத் தாக்கல் செய்திருப்பது பல கேள்விகளை எழுப்பியிருக்கிறது. மாண்புமிகு சென்னை உயர்நீதிமன்றம் நியமித்த ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி நீதியரசர் சி.பி.சி.ஐ.டியின் விசாரணை சரிவர நடைபெறவில்லை என்று தெரிவித்திருந்தார் என்பதையும் நினைவு கூறுகிறோம்.
வழக்கு சம்பந்தமாக இரண்டு வருடங்களாக மாண்புமிகு சென்னை உயர்நீதிமன்றம் சி.பி.சி.ஐ.டியின் விசாரணை செல்லும் போக்கினை கடுமையாகக் கண்டித்து வந்திருப்பதும் குறிப்பிடத்தக்கது. அப்போதெல்லாம் குற்றவாளிகள் யார் என்று இனம் காணத் தெரியாத சி.பி.சி.ஐ.டி இன்று திடீரென்று குற்றவாளிகள் தலித் சமூகத்தைச் சேர்ந்தவர்கள்தான் என்று அறிவித்திருப்பதன் பின்னணி என்னவென்று புரியாமல் இல்லை.
இரண்டு வருடங்களாக ஆழ்ந்த நித்திரையில் இருந்த தமிழக சி.பி.சி.ஐ.டி இன்றைக்குத் திடீரென்று விழித்திருப்பதைப் பார்க்கையில், இவர்கள் யாருக்காகப் பணி செய்கிறார்கள் என்கிற சந்தேகம் எழுகிறது. உண்மைக் குற்றவாளிகளைக் காப்பாற்றுவதற்காகத்தான் இத்தகைய சூழ்ச்சியைச் செய்கிறார்களோ என்கிற சந்தேகம் வலுக்கிறது. உண்மைக் குற்றவாளிகளைப் பாதுகாக்க, பாதிக்கப்பட்ட தலித் மக்களின் கண்ணியத்தையும் மாண்பையும் இழிவுபடுத்தவும் அரசு துணிந்திருக்கிறது என்பது அதிர்ச்சியளிக்கிறது. இப்பிரச்சினையில் பாதிக்கப்பட்ட தலித் மக்களையே குற்றவாளிகளாகச் சித்திரிப்பதை எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாது.
நீதிமன்றம் இதனை ஏற்கக்கூடாது. மேலும், இந்த முடிவை தமிழக அரசும் கண்டிப்பாக மறுபரிசீலனை செய்ய வேண்டும். தமிழக அரசு இவ்வழக்கினை சிபிஐ விசாரணைக்கு மாற்ற வேண்டும் அல்லது சிறப்பு புலனாய்வுக் குழுவை அமைத்து உண்மையான குற்றவாளிகளைக் கண்டறிந்து சட்டத்தின் முன் நிறுத்தி தண்டணை பெற்றுத்தரவும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதியைப் பெற்றுத்தரவும் கேட்டுக்கொள்கிறோம்" என்று பதிவிட்டுள்ளார்.






