என் மலர்
நீங்கள் தேடியது "Santosh Narayanan"
- இங்கிலாந்தை சேர்ந்த பாடகர் எட் ஷீரன் உலகம் முழுவதும் இசை நிகழ்ச்சிகள் நடத்தி வருகிறார்.
- இந்தாண்டு சென்னை நந்தனம் ஒய்எம்சிஏ மைதானத்தில் எட் ஷீரன் இசை நிகழ்ச்சி நடத்தினார்.
உலகளவில் பிரபலமானவர் இங்கிலாந்தை சேர்ந்த பாடகர் மற்றும் இசையமைப்பாளரான எட் ஷீரன். இவர் உலகம் முழுவதும் பயணம் சென்று இசை நிகழ்ச்சிகள் நடத்துவது வழக்கம்.
அந்தவகையில் எட் ஷீரன்கடந்த வருடம் மார்ச் மாதம் மும்பையில் பிரமாண்டமான இசை நிகழ்ச்சி நடத்தினார். இந்தாண்டு சென்னை நந்தனம் ஒய்எம்சிஏ மைதானத்தில் இசை நிகழ்ச்சி நடத்தினார்.
இந்நிலையில், எட் ஷீரன், இந்திய இசைக்கலைஞர்கள் தீ, ஹனுமன்கைண்ட் இணையும் தனியிசை பாடல் ஒன்றை இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் தயாரித்திருக்கிறார்.
இப்படி ஒரு பாடலை தயாரித்ததில் பெருமைகொள்கிறேன் என தனது எக்ஸ் பக்கத்தில் சந்தோஷ் நாராயணன் பதிவிட்டுள்ளார்.
- 'ரெட்ரோ' படத்தின் கனிமா பாடல் இணையத்தில் வைரலானது.
- ரெட்ரோ படத்திற்கான டப்பிங் பணிகளை சூர்யா முழுவதுமாக முடித்துள்ளார்.
நடிகர் சூர்யா நடிக்கும் 44-வது திரைப்படம் 'ரெட்ரோ.' இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் இயக்கும் இந்தப் படத்தில் பூஜா ஹெக்டே கதாநாயகியாக நடித்துள்ளார்.
இந்த படத்தை சூர்யாவின் 2டி மற்றும் கார்த்திக் சுப்பராஜின் ஸ்டோன் பெஞ்ச் நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளது. இந்தப் படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். ரெட்ரோ படம் வருகிற மே 1-ம் தேதி வெளியாகவுள்ளது.
ஏற்கனவே வெளியான இப்படத்தின் கண்ணாடி பூவே மற்றும் கனிமா பாடல்கள் மிகவும் வைரலான நிலையில், இப்படத்தின் புதிய பாடல் விரைவில் வெளியாகும் என்று இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
ரெட்ரோ படத்திற்கான டப்பிங் பணிகளை சூர்யா முழுவதுமாக முடித்துள்ளார். இது குறித்து படத்தின் இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் சமீபத்தில் வெளியிட்டார். இதைத்தொடர்ந்து படத்தின் இசை வெளியீட்டு விழா வரும் ஏப்ரல் 18 ஆம் தேதி சாய்ராம் பொறியியல் கல்லூரியில் நடைப்பெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.
- அடுத்த மாதம் 2-ம் தேதி சூர்யா 44 படத்தின் படப்பிடிப்பு அந்தமானில் துவங்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது.
- இந்த படத்தினை சூர்யாவும், கார்த்திக் சுப்புராஜும் இணைந்து தயாரிக்கின்றனர்.
நடிகர் சூர்யா கங்குவா திரைப்படத்திற்கு பிறகு கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிக்க உள்ளார். இப்படத்திற்கு தற்காலிகமாக சூர்யா 44 என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தினை சூர்யாவும், கார்த்திக் சுப்புராஜும் இணைந்து தயாரிக்கின்றனர்.
இந்த படத்தின் ரிலீஸுக்கு பின்னர் வரும் லாபத்தில் சூர்யா, கார்த்திக் சுப்புராஜ் இருவருக்கும் பங்கு இருப்பதனால் சம்பளமே வாங்காமல் சூர்யா நடிக்கப் போகிறார் என்று தகவல் வெளியாகியுள்ளது. சூர்யா மட்டும் இல்லாமல் கார்த்திக் சுப்புராஜும் சம்பளம் வாங்கவில்லை என்று சொல்லப்படுகிறது. சமீபத்தில், இப்படத்திற்கு பிரபல இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசையமைக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில், சூர்யா 44 படத்தில் நடிகை பூஜா ஹெக்டே இணைய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இவர் முன்னதாக விஜய்க்கு ஜோடியாக 'பீஸ்ட்' படத்தில் நடித்திருந்தார். அல்லு அர்ஜூன் நடித்த அல வைகுண்டபுரமுலோ படத்தின் மூலம் பிரபலமானார் பூஜா ஹெக்டே. அடுத்த மாதம் 2-ம் தேதி சூர்யா 44 படத்தின் படப்பிடிப்பு அந்தமானில் துவங்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது. முதல்கட்ட படப்பிடிப்பு அந்தமானில் 40 நாட்கள் நடைப்பெறவுள்ளது. அதற்கு அடுத்து ஊட்டியில் நடைப்பெறவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இத்திரைப்படம் சுற்று சூழல் பாதிப்பை பற்றி பேசக்கூடிய திரைப்படமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும், இப்படத்தில் நடிகர் ஜோஜு ஜார்ஜ் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாக ஏற்கனவே செய்திகள் வெளியாகியது. ஆனால் இது குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை. இவர் முன்னதாக கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் கடந்த 2021-ம் ஆண்டு வெளிவந்த 'ஜகமே தந்திரம்' படத்தில் நடித்திருந்தார்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- நடிகர் சூர்யா இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தன் 44-வது படத்தில் நடிக்கவுள்ளார்.
- இப்படத்திற்கு இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார்.
நடிகர் சூர்யா இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தன் 44-வது படத்தில் நடிக்கவுள்ளார். இப்படத்தை சூர்யாவின் 2டி மற்றும் கார்த்திக் சுப்புராஜின் ஸ்டோன் பென்ச் நிறுவனம் இணைந்து தயாரிக்கின்றன. இப்படத்திற்கு இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார்.
இந்த படம் பீரியாடிக் கேங்க்ஸ்டர் மற்றும் காதல் பின்னணியை கதைக்களமாக கொண்டு உருவாகவுள்ளது. சூர்யா இத்திரைப்படத்தில் இரட்டை வேடங்களில் நடிக்கவுள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.இப்படத்தில் பூஜா ஹெக்டே சூரியாவுக்கு ஜோடியாக நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியது.
சூர்யா 44 படப்பிடிப்பு வருகிற ஜூன் மாதம் அந்தமானில் துவங்க உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இந்த நிலையில், இப்படத்தின் டைட்டில் டீசர் அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளதாக புதிய தகவல் வெளியாகியுள்ளது. 3 நாள்கள் நடைபெற்ற இந்த படப்பிடிப்பில் சூர்யா கலந்துகொண்டதாகக் கூறப்படுகிறது.
சூர்யா அடுத்தடுத்து சுவாரசியமான படங்களில் கமிட் ஆகியுள்ளார். இவர் நடிப்பில் வெளியாகவுள்ள கங்குவா, வெற்றிமாறன் இயக்கத்தில் வாடிவாசல் திரைப்படத்தில் நடிக்கவுள்ளார். கார்த்ஹ்டிக் சுப்பராஜ் இயக்கத்தில் இந்த படத்திலும் நடித்து வருகிறார். இதனால் சூர்யா ரசிகர்கள் மிகுந்த மகிழ்ச்சியுடன் இருக்கின்றனர்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- 'சூது கவ்வும் 2 - நாடும் நாட்டு மக்களும்' படம் வரும் 13-ந்தேதி வெளியாகிறது.
- சூது கவ்வும்-2 படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடைபெற்றது.
நலன் குமாரசாமி இயக்கத்தில் நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் 2013ஆம் ஆண்டு வெளியான 'சூது கவ்வும்' திரைப்படம் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து சூது கவ்வும் படத்தின் அடுத்த பாகம் உருவாகியுள்ளது.
'சூது கவ்வும் 2 - நாடும் நாட்டு மக்களும்' என்று தலைப்பிடப்பட்டு இருக்கும் இந்த படத்தை இயக்குநர் எம்.எஸ். அர்ஜூன் இயக்கி இருக்கிறார். இந்தப் படத்தில் நடிகர் மிர்ச்சி சிவா நாயகனாக நடித்துள்ளார். இந்த படத்தில் ராதாரவி, எம்.எஸ். பாஸ்கர், கருணாகரன், கராத்தே கார்த்தி, ரமேஷ் திலக், அருள்தாஸ், ஹரிஷா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
இந்த படத்தை தங்கம் சினிமாஸ் சார்பில் எஸ் தியாகராஜன் மற்றும் திருக்குமரன் என்டர்டெயின்மென்ட்ஸ் சார்பில் சி.வி.குமார் இணைந்து தயாரித்துள்ளனர். இந்தப் படத்திற்கு எட்வின் லூயிஸ் விஸ்வநாத் இசையமைத்துள்ளார்.
'சூது கவ்வும் 2 - நாடும் நாட்டு மக்களும்' படம் வரும் 13-ந்தேதி வெளியாகிறது.
இந்நிலையில், சூது கவ்வும்-2 படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடைபெற்றது. அப்போது, வெளியிடப்பட்ட டிரெய்லர் ரசிகர்களின் எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ளது.
விழாவில், இயக்குனர்கள் பா.ரஞ்சித், கார்த்திக் சுப்பராஜ், இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் உள்ளிட்டோர் கலந்துக் கொண்டனர்.
அப்போது பேசிய சந்தோஷ் நாராயணன், "ரஞ்சித்க்கு இனிமேல் இடிச்சுத் தள்ளிட்டு நான்தான் மியூசிக் பண்ணுவேன். வேற யாருக்கும் இத விடமாட்டேன். இது ஒரு கட்டளை. சூது கவ்வும் படக்குழுவுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள்" என்றார்.
முன்னதாக, இயக்குனர் பா.ரஞ்சித்திற்கும், இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணனுக்கும் மனக்கசப்பு இருந்து வந்தது குறிப்பிடத்தக்கது.






