என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நீலம் பண்பாட்டு மையம்"

    • இயக்குனர் பா.இரஞ்சித் பல படங்களை இயக்கி ரசிகர்களை கவர்ந்தவர்.
    • இவர் நீலம் புரொடக்சன்ஸ் தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் படங்களையும் தயாரிக்கிறார்.

    2012-ம் ஆண்டு அட்டகத்தி படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் பா.இரஞ்சித். இப்படத்தின் கதாநாயகனாக தினேஷ் நடித்திருந்தார். அதன்பின்னர் கார்த்தி நடிப்பில் மெட்ராஸ், ரஜினி நடிப்பில் கபாலி மற்றும் காலா படங்களை இயக்கியிருந்தார். தொடர்ந்து சர்பட்ட பரம்பரை, நட்சத்திரம் நகர்கிறது படங்களை இயக்கி ரசிகர்களை கவர்ந்தார்.

    இதனிடையே நீலம் புரொடக்சன்ஸ் தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் பா.இரஞ்சித், பரியேறும் பெருமாள், இரண்டாம் உலகப் போரின் கடைசி குண்டு, ரைட்டர், சேத்துமான், பொம்மை நாயகி உள்ளிட்ட படங்களை தயாரித்திருந்தார். இவர் நீலம் பண்பாட்டு மையம் சார்பில் சமூக அக்கறைக் கொண்ட பல கலை நிகழ்ச்சிகளையும் நடத்தி வருகிறார்.


    இந்நிலையில், இயக்குனர் பா.இரஞ்சித் மலக்குழி மரணங்கள் குறித்து பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில், "தொடரும் மலக்குழி மரணங்கள்! தமிழ் நாட்டில் கடந்த மூன்று வாரங்களில் மட்டும் ஒன்பது உயிர்களை பலி கொடுத்திருக்கிறோம்! இக் கொடுமையான சமூக அவலத்தை தொடர்ந்து நிகழ்த்திக் கொண்டிருக்கும் தமிழக மக்களுக்கும், தமிழக அரசிற்க்கும் கடும் கண்டனங்கள்!!! மலக்குழி மரணங்களை குறிப்பிட்ட சமூக மக்களின் பிரச்சனையாக மட்டும் கருதி கடந்து போகாமல் ஒட்டு மொத்த மனித சமூகத்தின் அவலமாக கருதி, சட்டங்களை இன்னும் கடுமையாக்கி, மக்களிடையே சரியான விழிப்புணர்வை உண்டாக்கி, உடனே தடுத்திட முனைவோம்! தமிழக அரசே மலக்குழி மரணங்களை உடனே தடுத்திடு!!!" என்று பதிவிட்டுள்ளார்.


    • படுகாயம் அடைந்த மாணவன் சின்னத்துரை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு அங்கு சிகிச்சை பெற்று வந்தார்
    • சிகிச்சை முடிந்து வீடு திரும்பிய நிலையில் வேறு பள்ளியில் சேர்ந்து படிப்பை தொடர அரசு நடவடிக்கை எடுத்தது.

    கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் நெல்லை மாவட்டம் நாங்குநேரியில் பிளஸ்-2 படித்து வந்த சின்னதுரையை சாதிய மோதலால் சக மாணவர்கள் அரிவாளால் வெட்டினர். அதை தடுக்க வந்த அவரது தங்கை சந்திராவுக்கும் வெட்டு விழுந்தது.இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

    இந்நிலையில் இன்று பிளஸ்-2 தேர்வு முடிவுகள் வெளியானது. இதில் மாணவர் சின்னதுரை 469 மதிப்பெண் பெற்று சாதனை படைத்துள்ளார்.

    இந்நிலையில், பிளஸ் 2 பொதுத் தேர்வில் வெற்றி பெற்ற நாங்குநேரி மாணவர் சின்னதுரை முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார்.

    இந்நிலையில், மாணவர் சின்னதுரையை நேரில் அழைத்து இயக்குநர் பா.ரஞ்சித் பாராட்டியுள்ளார்.

    மேலும், சின்னதுரையின் கல்லூரி கட்டணம் மற்றும் எவ்வித உதவியாக இருப்பினும் தனது 'நீலம் பண்பாட்டு மையம்' செய்வதற்கு தயாராக இருக்கிறது என்றும் பா.ரஞ்சித் உறுதியளித்துள்ளார்

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • சென்னை உணவு திருவிழாவை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
    • இந்த உணவு திருவிழா வரும் 24-ந்தேதி வரை சென்னை மெரினா கடற்கரையில் நடைபெறுகிறது

    தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனத்தின் கீழ் செயல்படும் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்வாதார இயக்கத்தின் சார்பில் மகளிர் சுயஉதவிக் குழுக்கள் தயாரிக்கும் உணவுப் பொருட்களின் உணவு திருவிழா கடந்த 20 ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது.

    இந்த உணவு திருவிழாவை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இந்த உணவு திருவிழா வரும் 24-ந்தேதி வரை சென்னை மெரினா கடற்கரையில் நடைபெறுகிறது

    இந்நிலையில் சென்னை உணவு திருவிழாவில் மாட்டிறைச்சி புறக்கணிக்கப்பட்டதாக கூறி நீலம் பண்பாட்டு மையம் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளது.

    அந்த பதிவில், "சென்னை மெரினா கடற்கரையில் நடைபெற்று வரக்கூடிய உணவுத் திருவிழாவில் மாட்டிறைச்சியை மட்டும் புறக்கணிக்க வேண்டிய அவசியம் என்ன? பெருமளவிலான மக்கள் பீப் சாப்பிட கூடியவர்கள். ஆனால், திட்டமிட்டே ஓர் உணவை புறக்கணிக்கப்படுவதை நீலம் பண்பாட்டு மையம் வன்மையாகக் கண்டிக்கிறது. உணவு எங்கள் உரிமை" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • சென்னை உணவு திருவிழாவை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார்
    • சென்னை உணவு திருவிழாவில் மாட்டுக்கறி உணவுகள் புறக்கணிக்கப்பட்டதாக நீலம் பண்பாட்டு மையம் குற்றச்சாட்டு

    தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனத்தின் கீழ் செயல்படும் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்வாதார இயக்கத்தின் சார்பில் மகளிர் சுயஉதவிக் குழுக்கள் தயாரிக்கும் உணவுப் பொருட்களின் உணவு திருவிழா கடந்த 20 ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது.

    இந்த உணவு திருவிழாவை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இந்த உணவு திருவிழா வரும் 24-ந்தேதி வரை சென்னை மெரினா கடற்கரையில் நடைபெறுகிறது

    இந்நிலையில் சென்னை உணவு திருவிழாவில் மாட்டுக்கறி உணவுகள் புறக்கணிக்கப்பட்டதை கண்டித்து நீலம் பண்பாட்டு மையம் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளது.

    அந்த பதிவில், "சென்னை மெரினா கடற்கரையில் நடைபெற்று வரக்கூடிய உணவுத் திருவிழாவில் மாட்டிறைச்சியை மட்டும் புறக்கணிக்க வேண்டிய அவசியம் என்ன? பெருமளவிலான மக்கள் பீப் சாப்பிட கூடியவர்கள். ஆனால், திட்டமிட்டே ஓர் உணவை புறக்கணிக்கப்படுவதை நீலம் பண்பாட்டு மையம் வன்மையாகக் கண்டிக்கிறது. உணவு எங்கள் உரிமை" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இதனையடுத்து சென்னை உணவு திருவிழாவில் கரூர் மாவட்ட உணவு அரங்கு எண்.17 இல் மாட்டிறைச்சி உணவும் விற்பனை செய்யப்படுவதாக விழா ஏற்பாட்டு குழுவினராக தமிழ்நாடு நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் விளக்கம் அளித்துள்ளனர்.

    • அமைச்சர் மூர்த்தி தனது சாதி சேர்ந்த வீரருக்கு மட்டும் ஆதரவாக இருப்பதாக குற்றச்சாட்டு.
    • தமிழரசன் கண்ணீர் பேட்டி சமூக வலைத்தளங்களில் விவாத பொருளாக மாறியுள்ளன.

    மதுரை ஜல்லிக்கட்டில் சாதிய பாகுபாடு பார்க்கப்பட்டதாக திரைப்பட இயக்குனர் பா.ரஞ்சித்தின் நீலம் பண்பாட்டு மையம் கண்டனம் தெரிவித்துள்ளது.

    இதுகுறித்து நீலம் பண்பாட்டு மையம் தனது எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறப்பட்டுள்ளதாவது:-

    மதுரை ஜல்லிக்கட்டில் சாதி பாகுபாடு!

    இருமுறை முதல் பரிசு வென்ற வீரர் தமிழரசன் என்று அனைவரும் அறிந்தும் திட்டமிட்டு டோக்கன் அளிக்காமல் நேரத்தை வீணடித்துள்ள நிர்வாகத்தை வன்மையாக கண்டிக்கிறோம்.

    அமைச்சர் மூர்த்தி தனது சாதி சேர்ந்த வீரருக்கு மட்டும் ஆதரவாக இருப்பதும், போராடி டோக்கன் வாங்கியும் தன்னை ஜல்லிக்கட்டில் அனுமதிக்கவில்லை, களமிறங்க முயற்சித்தும் காவல்துறை ஒருபக்கம் தாக்கினார்கள் இதற்கு முழு காரணம் சாதிதான் என்று குற்றம்சாட்டியுள்ளார்.

    தமிழரசன் கண்ணீர் பேட்டி சமூக வலைத்தளங்களில் விவாத பொருளாக மாறியுள்ளன, வீரர் தமிழரசன் புறக்கணிக்கத்திருப்பது ஏன் ???

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • பாதிக்கப்பட்ட தலித் மக்களையே குற்றவாளிகளாகச் சித்திரிப்பதை எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாது.
    • இந்த முடிவை தமிழக அரசும் கண்டிப்பாக மறுபரிசீலனை செய்ய வேண்டும்.

    தமிழக அரசு வேங்கைவயல் வழக்கினை சிபிஐக்கு மாற்றவேண்டும் என்று இயக்குநர் பா. ரஞ்சித் வலியுறுத்தியுள்ளார்.

    இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், "வேங்கைவயல் வழக்கில் தமிழ்நாடு காவல்துறையின் சி.பி.சி.ஐ.டி இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் திடீரென தாக்கல் செய்துள்ள பிரமாண பத்திரத்தில், கடந்த 20ஆம் தேதியே இவ்வழக்கில் குற்றப்பத்திரிகையைத் தாக்கல் செய்துவிட்டதாகவும், அதில் மூன்று பேர் குற்றவாளிகளாக அடையாளம் காணப்பட்டுள்ளனர் எனவும் தெரிவித்துள்ளது.

    அம்மூன்று பேரும் தலித் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்பது அதிர்ச்சிக்குரியது. இது திட்டமிட்டுச் செய்யப்படும் செயலாகத் தெரிகிறது. கடந்த இரண்டு வருடங்களாகக் குற்றவாளிகளைக் கண்டுபிடிக்க முடியாத சி.பி.சி.ஐ.டி அவசரக்கதியில் ஏதோ ஒரு காரணத்திற்காகக் குற்றப்பத்திரிக்கையைத் தாக்கல் செய்திருப்பது பல கேள்விகளை எழுப்பியிருக்கிறது. மாண்புமிகு சென்னை உயர்நீதிமன்றம் நியமித்த ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி நீதியரசர் சி.பி.சி.ஐ.டியின் விசாரணை சரிவர நடைபெறவில்லை என்று தெரிவித்திருந்தார் என்பதையும் நினைவு கூறுகிறோம்.

    வழக்கு சம்பந்தமாக இரண்டு வருடங்களாக மாண்புமிகு சென்னை உயர்நீதிமன்றம் சி.பி.சி.ஐ.டியின் விசாரணை செல்லும் போக்கினை கடுமையாகக் கண்டித்து வந்திருப்பதும் குறிப்பிடத்தக்கது. அப்போதெல்லாம் குற்றவாளிகள் யார் என்று இனம் காணத் தெரியாத சி.பி.சி.ஐ.டி இன்று திடீரென்று குற்றவாளிகள் தலித் சமூகத்தைச் சேர்ந்தவர்கள்தான் என்று அறிவித்திருப்பதன் பின்னணி என்னவென்று புரியாமல் இல்லை.

    இரண்டு வருடங்களாக ஆழ்ந்த நித்திரையில் இருந்த தமிழக சி.பி.சி.ஐ.டி இன்றைக்குத் திடீரென்று விழித்திருப்பதைப் பார்க்கையில், இவர்கள் யாருக்காகப் பணி செய்கிறார்கள் என்கிற சந்தேகம் எழுகிறது. உண்மைக் குற்றவாளிகளைக் காப்பாற்றுவதற்காகத்தான் இத்தகைய சூழ்ச்சியைச் செய்கிறார்களோ என்கிற சந்தேகம் வலுக்கிறது. உண்மைக் குற்றவாளிகளைப் பாதுகாக்க, பாதிக்கப்பட்ட தலித் மக்களின் கண்ணியத்தையும் மாண்பையும் இழிவுபடுத்தவும் அரசு துணிந்திருக்கிறது என்பது அதிர்ச்சியளிக்கிறது. இப்பிரச்சினையில் பாதிக்கப்பட்ட தலித் மக்களையே குற்றவாளிகளாகச் சித்திரிப்பதை எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாது.

    நீதிமன்றம் இதனை ஏற்கக்கூடாது. மேலும், இந்த முடிவை தமிழக அரசும் கண்டிப்பாக மறுபரிசீலனை செய்ய வேண்டும். தமிழக அரசு இவ்வழக்கினை சிபிஐ விசாரணைக்கு மாற்ற வேண்டும் அல்லது சிறப்பு புலனாய்வுக் குழுவை அமைத்து உண்மையான குற்றவாளிகளைக் கண்டறிந்து சட்டத்தின் முன் நிறுத்தி தண்டணை பெற்றுத்தரவும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதியைப் பெற்றுத்தரவும் கேட்டுக்கொள்கிறோம்" என்று பதிவிட்டுள்ளார்.

    ×