என் மலர்
நீங்கள் தேடியது "Food Festival"
- மாணவ, மாணவிகள் சிறுதானியவகைகள், கீரைவகைகள், பழச்சாறுகள், என்று பல்வேறு விதமானஉணவு வகைகளை காட்சிப்படுத்தினர்.
- உணவின் பயன்களையும் மற்றும் செய்முறை விளக்கத்தினையும் எடுத்துரைத்தனர்.
திருப்பூர் :
திருப்பூர் திருமுருகன்பூண்டி ஏ.வி.பி. டிரஸ்ட் நேசனல் மெட்ரிகுலேசன் மேல்நிலைப்பள்ளியில் "உணவுத்திருவிழா'' மிக சிறப்பாககொண்டாடப்பட்டது. பள்ளி தாளாளர் கார்த்திகேயன் விழாவைதுவக்கி வைத்தார். விழாவில் மாணவ, மாணவிகள் சிறுதானியவகைகள், கீரைவகைகள், பழச்சாறுகள், கூழ் வகைகள், கலவை சாதம், இனிப்புவகைகள் மற்றும் முளை கட்டிய பயிறு வகைகள் என்று பல்வேறு விதமானஉணவு வகைகளை சுவை மிகுந்ததாகவும், சத்துள்ளதாகவும், அழகாகவும் காட்சிப்படுத்தினர்.
மேலும் தாங்கள் கொண்டு வந்த உணவின் பயன்களையும் மற்றும் செய்முறை விளக்கத்தினையும் எடுத்துரைத்தனர். ஒவ்வொரு மாநிலத்தில் விளையும் விளைபொருட்கள் என்னென்ன என்பதை இந்திய வரைப்படம் மூலம் விளக்கினர். விழாவில் பெற்றோர்களும் பங்கு கொண்டு மாணவர்களை உற்சாகமூட்டினர். விழாவின் நிறைவாக தாளாளர் கார்த்திகேயன், முதல்வர் பிரியாராஜா, ஒருங்கிணைப்பாளர் ஆபிதாபானு மற்றும் மேலாளர் ராமசாமி மாணவர்களையும், அவர்களை ஊக்கப்படுத்திய ஆசிரியர்களையும் பாராட்டினர்.
- ஊட்டச் சத்து மற்றும் உணவுமுறை வாரத்தையொட்டி முத்தியால்பேட்டையில் உள்ள சின்னாத்தா அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் உணவுத் திருவிழா நடந்தது.
- பள்ளி முதல்வர் அர்பிதா தாஸ் தொடங்கி வைத்தார்.
புதுச்சேரி:
ஊட்டச் சத்து மற்றும் உணவுமுறை வாரத்தையொட்டி முத்தியால்பேட்டையில் உள்ள சின்னாத்தா அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் உணவுத் திருவிழா நடந்தது.இதனை பள்ளி முதல்வர் அர்பிதா தாஸ் தொடங்கி வைத்தார்.
உணவு திருவிழாவில் 150-க்கும் மேற்பட்ட மாணவிகள் பங்கேற்றனர். 300-க்கும் மேற்பட்ட ஆரோக்கியமான உணவு வகைகள் இடம் பெற்றன.
- உணவு பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி மற்றும் திருப்பூர் உணவுத் திருவிழா காங்கேயத்தில் தொடங்கியது.
- பாரம்பரிய உணவுப் பொருட்கள் என 50 அரங்குகள் இடம் பெற்றுள்ளன.
காங்கயம் :
திருப்பூர் மாவட்ட மக்களுக்கு பாதுகாப்பான, ஆரோக்கியமான உணவு வகைகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கத்தில் திருப்பூர் மாவட்ட உணவு பாதுகாப்பு துறை சார்பில் உணவு பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி மற்றும் திருப்பூர் உணவுத் திருவிழா காங்கேயத்தில் தொடங்கியது.
மகளிர் சுய உதவிக் குழுக்களைச் சேர்ந்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட பெண்கள், கல்லூரி மாணவ- மாணவிகள், பெண்கள், வணிகர்கள், பொதுமக்கள் பெரும் திரளாகக் கலந்து கொண்டனர். 'உணவு பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி' காங்கேயம் வட்டார வளர்ச்சி அலுவலக வளாகத்திலிருந்து காலை 9 மணிக்கு தொடங்கி நடைபெற்றது. இந்த உணவுத் திருவிழாவை திருப்பூர் மாவட்ட கலெக்டர் வினீத் ரிப்பன் வெட்டி தொடங்கி வைத்து, அரங்குகளைப் பார்வையிட்டார். இதில் உணவு பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் அரங்குகள், திருப்பூர் மாவட்டத்தின் சுவை அடையாளமாக இருக்கும் சைவ, அசைவ உணவு அரங்குகள், பிற அரசுத்துறை அரங்குகள், மருத்துவ முகாம்கள், தமிழர்களின் பாரம்பரிய உணவுப் பொருட்கள் என 50 அரங்குகள் இடம் பெற்றுள்ளன. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் கவரும் விதமாக, உணவு அரங்குகளும், உணவு பாதுகாப்பு குறித்த கிராமிய கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
சமையலில் ஆர்வமுள்ளவர்கள் ஆரோக்கிய சமையல், அதிவேக சமையல், அடுப்பில்லா சமையல், குழந்தைகள் சமையல், பாரம்பரிய சமையல், தென் இந்திய சமையல், சிறுதானிய சமையல், பால் வகை சமையல், மறந்து போன உணவுகள், சமையல் அலங்காரம் ஆகிய 10 தலைப்புகளில் உணவு வகைகளை தயார் செய்து காட்சி படுத்தியுள்ளனர். ஒவ்வொரு பிரிவிலும் 3 பேர் தேர்வு செய்யப்பட்டு பரிசுகள் வழங்கப்படும். முதலிடம் பெற்றவர்கள் இறுதிப் போட்டிக்கு தேர்வு செய்யப்படுவார்கள். இந்த போட்டியில் வெற்றி பெறுபவருக்கு அறுசுவை அரசி என்ற பட்டமும், பரிசும் வழங்கப்பட உள்ளது.
- பாரம்பரிய உணவு ஆரோக்கியம், சுகாதாரம் ஆகிய அனைத்து அம்சங்களையும் ஒருங்கிணைத்து இந்த உணவு திருவிழா நடத்தப்பட்டுள்ளது
- பாரம்பரிய உணவுபொருட்களில் உடலுக்கு தேவையான அனைத்து ஊட்டச்சத்துக்களும் உள்ளது
பெரம்பலூர் :
பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் பாரம்பரிய உணவு திருவிழா (பயணிப்பீர் பாரம்பரியத்தை நோக்கி) என்ற தலைப்பில் நடைபெற்றது. மாவட்ட கலெக்டர் ஸ்ரீவெங்கட பிரியா தலைமை வகித்தார். பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் முன்னிலை வகித்தார்.
மாவட்ட கலெக்டர் தெரிவித்ததாவது:
பாரம்பரிய உணவு ஆரோக்கியம், சுகாதாரம் ஆகிய அனைத்து அம்சங்களையும் ஒருங்கிணைத்து இந்த உணவு திருவிழா நடத்தப்பட்டுள்ளது. இந்த திருவிழாவின் வாயிலாக பெரம்பலூர் மாவட்டத்திலுள்ள பால்வாடி மையங்களுக்கு தரச்சான்று கொடுக்கப்பட்டுள்ளது. தகுந்த உணவு, சுகாதாரமான உணவு அடிப்படையில் 5 மையங்களுக்கு தரச்சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து பால்வாடி மையங்களும் இந்த தரச்சான்றிதழ் பெற ஊக்குவிக்கும் வகையில் இந்த நிகழ்ச்சி நடத்தப்பட்டது.
பாரம்பரிய உணவுபொருட்களில் உடலுக்கு தேவையான அனைத்து ஊட்டச்சத்துக்களும் உள்ளது, எளிமையாக கிடைக்கும் உணவுப் பொருட்களை கொண்டு அனைத்து சத்துக்களும் உள்ள உணவினை சுகாதாரமாகவும், பாதுகாப்பானதாகவும் நாமே தயாரித்துக் கொள்ள முடியும் என்ற விழிப்புணர்வு இந்த நிகழ்ச்சியின் மூலம் ஏற்படுத்தப்பட்டுள்ளது என தெரிவித்தார்.
- நுகர்வோர் நலன் கருதி, ரேஷனில் தரமான அரிசி வழங்குவதை உறுதி செய்ய வேண்டும்.
- உணவு பாதுகாப்புத்துறை நியமன அலுவலர் விஜயலலிதாம்பிகை பெற்றுக்கொண்டார்.
திருப்பூர்:
திருப்பூர் மாவட்ட அளவிலான பொது வினியோக திட்ட பணிகள் குறித்த ஆய்வுக்கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. டி.ஆர்.ஓ., ஜெய்பீம் வரவேற்றார். அமைச்சர்கள் சக்ரபாணி, சாமிநாதன், கயல்விழி, பொதுவினியோகதிட்டப்பணிகளை ஆய்வு செய்தனர்.உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை அரசு முதன்மை செயலர் ராதாகிருஷ்ணன் பேசியதாவது:-
நுகர்வோர் நலன் கருதி, ரேஷனில் தரமான அரிசி வழங்குவதை உறுதி செய்ய வேண்டும். மாவட்டத்தில், ஆற்று வெள்ளம், மழை வெள்ளத்தால், ரேஷன் கடை பொருட்கள் பெற முடியாத பகுதிகள் இருந்தால், கிராமத்துக்கே சென்று பொருட்கள் வழங்க வேண்டும். மலைகிராம மக்களுக்கு, ரேஷன் பொருட்களை தேடிச்சென்று வழங்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழகத்தை சேர்ந்த 94 ஆயிரம் பேர், வெளிமாநிலங்களில் இருந்தபடி, ரேஷன் பொருள் பெற்று வருகின்றனர். தகுதியற்ற நபர்களுக்கு, சிறப்பு சலுகை கார்டுகள் வழங்க கூடாது.தகுதியான நபர்களுக்கு சலுகை கிடைக்காமலும் இருக்கக் கூடாது.இவ்வாறு அவர் பேசினார்.
உணவு பாதுகாப்புத்துறை சார்பில், ஆகஸ்டு 7ந் தேதி, காங்கயத்தில் உணவுத்திருவிழா நடக்க உள்ளது. திருவிழாவுக்கான, போஸ்டர்களை, அமைச்சர்கள் வெளியிட, உணவு பாதுகாப்புத்துறை நியமன அலுவலர் விஜயலலிதாம்பிகை பெற்றுக்கொண்டார்.






