search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பெரம்பலூரில் பாரம்பரிய உணவு திருவிழா - கலெக்டர் ஸ்ரீவெங்கடபிரியா தொடங்கி வைத்தார்
    X

    பெரம்பலூரில் பாரம்பரிய உணவு திருவிழா - கலெக்டர் ஸ்ரீவெங்கடபிரியா தொடங்கி வைத்தார்

    • பாரம்பரிய உணவு ஆரோக்கியம், சுகாதாரம் ஆகிய அனைத்து அம்சங்களையும் ஒருங்கிணைத்து இந்த உணவு திருவிழா நடத்தப்பட்டுள்ளது
    • பாரம்பரிய உணவுபொருட்களில் உடலுக்கு தேவையான அனைத்து ஊட்டச்சத்துக்களும் உள்ளது

    பெரம்பலூர் :

    பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் பாரம்பரிய உணவு திருவிழா (பயணிப்பீர் பாரம்பரியத்தை நோக்கி) என்ற தலைப்பில் நடைபெற்றது. மாவட்ட கலெக்டர் ஸ்ரீவெங்கட பிரியா தலைமை வகித்தார். பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் முன்னிலை வகித்தார்.

    மாவட்ட கலெக்டர் தெரிவித்ததாவது:

    பாரம்பரிய உணவு ஆரோக்கியம், சுகாதாரம் ஆகிய அனைத்து அம்சங்களையும் ஒருங்கிணைத்து இந்த உணவு திருவிழா நடத்தப்பட்டுள்ளது. இந்த திருவிழாவின் வாயிலாக பெரம்பலூர் மாவட்டத்திலுள்ள பால்வாடி மையங்களுக்கு தரச்சான்று கொடுக்கப்பட்டுள்ளது. தகுந்த உணவு, சுகாதாரமான உணவு அடிப்படையில் 5 மையங்களுக்கு தரச்சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து பால்வாடி மையங்களும் இந்த தரச்சான்றிதழ் பெற ஊக்குவிக்கும் வகையில் இந்த நிகழ்ச்சி நடத்தப்பட்டது.

    பாரம்பரிய உணவுபொருட்களில் உடலுக்கு தேவையான அனைத்து ஊட்டச்சத்துக்களும் உள்ளது, எளிமையாக கிடைக்கும் உணவுப் பொருட்களை கொண்டு அனைத்து சத்துக்களும் உள்ள உணவினை சுகாதாரமாகவும், பாதுகாப்பானதாகவும் நாமே தயாரித்துக் கொள்ள முடியும் என்ற விழிப்புணர்வு இந்த நிகழ்ச்சியின் மூலம் ஏற்படுத்தப்பட்டுள்ளது என தெரிவித்தார்.

    Next Story
    ×