search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "AVP"

    • மாணவ, மாணவிகள் சிறுதானியவகைகள், கீரைவகைகள், பழச்சாறுகள், என்று பல்வேறு விதமானஉணவு வகைகளை காட்சிப்படுத்தினர்.
    • உணவின் பயன்களையும் மற்றும் செய்முறை விளக்கத்தினையும் எடுத்துரைத்தனர்.

    திருப்பூர் :

    திருப்பூர் திருமுருகன்பூண்டி ஏ.வி.பி. டிரஸ்ட் நேசனல் மெட்ரிகுலேசன் மேல்நிலைப்பள்ளியில் "உணவுத்திருவிழா'' மிக சிறப்பாககொண்டாடப்பட்டது. பள்ளி தாளாளர் கார்த்திகேயன் விழாவைதுவக்கி வைத்தார். விழாவில் மாணவ, மாணவிகள் சிறுதானியவகைகள், கீரைவகைகள், பழச்சாறுகள், கூழ் வகைகள், கலவை சாதம், இனிப்புவகைகள் மற்றும் முளை கட்டிய பயிறு வகைகள் என்று பல்வேறு விதமானஉணவு வகைகளை சுவை மிகுந்ததாகவும், சத்துள்ளதாகவும், அழகாகவும் காட்சிப்படுத்தினர்.

    மேலும் தாங்கள் கொண்டு வந்த உணவின் பயன்களையும் மற்றும் செய்முறை விளக்கத்தினையும் எடுத்துரைத்தனர். ஒவ்வொரு மாநிலத்தில் விளையும் விளைபொருட்கள் என்னென்ன என்பதை இந்திய வரைப்படம் மூலம் விளக்கினர். விழாவில் பெற்றோர்களும் பங்கு கொண்டு மாணவர்களை உற்சாகமூட்டினர். விழாவின் நிறைவாக தாளாளர் கார்த்திகேயன், முதல்வர் பிரியாராஜா, ஒருங்கிணைப்பாளர் ஆபிதாபானு மற்றும் மேலாளர் ராமசாமி மாணவர்களையும், அவர்களை ஊக்கப்படுத்திய ஆசிரியர்களையும் பாராட்டினர்.

    • தடகளப்போட்டிகளிலும் மூன்றாம் இடத்தை பெற்று ஏ.வி.பி., பள்ளி வெற்றி பெற்றனர்.
    • வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளையும், உடற்கல்வி ஆசிரியர்களையும் பள்ளி நிர்வாகம் பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர்.

    திருப்பூர் :

    குறுமைய அளவில் நடைபெற்ற கைப்பந்து போட்டியில் திருப்பூர் திருமுருகன்பூண்டி ஏ.வி.பி. பள்ளி மாணவர்கள் ஒட்டு மொத்த சாம்பியன் பட்டம் பெற்று சாதனை படைத்துள்ளனர். கையுந்துபந்து போட்டியில் இளையோர் ஆண்கள் பிரிவில் முதல் இடத்தையும், மிக மூத்தோர் ஆண்கள் பிரிவில் இரண்டாம் இடத்தையும், பீச் கையுந்து பந்து போட்டியில் மிக மூத்தோர் ஆண்கள் பிரிவில் முதல் இடத்தையும், இளையோர் மற்றும் மூத்தோர் ஆண்கள் பிரிவில் இரண்டாம் இடத்தையும் பெற்றுள்ளனர்.

    மேலும் ஆக்கி போட்டியில் மிக மூத்தோர் ஆண்கள் பிரிவில் இரண்டாம் இடத்தையும், வளையப்பந்து போட்டியில் இளையோர் மற்றும் மூத்தோர் ஆண்கள் பிரிவில் முதல் இடத்தையும், மிக மூத்தோர் ஆண்கள் பிரிவில் இரண்டாம் இடத்தையும் பெற்று வெற்றி பெற்றனர். கையுந்துபந்து போட்டியில் இளையோர் மற்றும் மூத்தோர் பெண்கள் பிரிவில் முதல் இடத்தையும், மிக மூத்தோர் பெண்கள் பிரிவில் இரண்டாம் இடத்தையும், பீச் கையுந்துபந்து போட்டியில் மிக மூத்தோர் பெண்கள் பிரிவில் முதல் இடத்தையும், மூத்தோர் பெண்கள் பிரிவில் இரண்டாம் இடத்தையும், கைப்பந்து போட்டியில் மூத்தோர் பெண்கள் பிரிவில் முதல் இடத்தையும், வளையப்பந்து போட்டியில் மூத்தோர் பெண்கள் பிரிவில் முதல் இடத்தையும் பெற்று வெற்றி பெற்றனர். உள்ளரங்க விளையாட்டுகளான டேபிள் டென்னிஸ் இளையோர் மற்றும் மூத்தோர் ஆண்கள் பிரிவில் முதல் இடத்தையும், பூப்பந்து இளையோர் ஆண்கள் பிரிவில் இரண்டாம் இடத்தையும் பெற்றனர். டேபிள் டென்னிஸ் இளையோர், மூத்தோர் மற்றும் மிக மூத்தோர் பெண்கள் பிரிவில் முதல் இடத்தையும், கேரம் மிக மூத்தோர் பெண்கள் பிரிவில் இரண்டாம் இடத்தையும் பெற்றனர்.

    குறுமைய அளவில் நடைபெற்ற தடகளப்போட்டிகளிலும் மூன்றாம் இடத்தை பெற்று வெற்றி பெற்றனர்.அனைத்து பிரிவு விளையாட்டுப் போட்டிகளிலும் வென்று அவிநாசி குறுமைய அளவில் ஒட்டுமொத்த சாம்பியன் பட்டம் பெற்று பள்ளிக்கு பெருமை சேர்த்துள்ளனர். வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளையும், உடற்கல்வி ஆசிரியர்களையும் பள்ளியின் தாளாளர் கார்த்திகேயன் பாராட்டி வாழ்த்து தெரிவித்தார். பள்ளியின் முதல்வர் பிரியாராஜா , பள்ளியின் ஒருங்கிணைப்பாளர் ஆபிதாபானு , ஆசிரியர்கள் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

    • சைபர் கிரைம் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
    • சைபர் கிரைம் தடுப்பு விழிப்புணர்வு தகவல்களை மாணவர்கள் புரிந்து கொள்ளும்படி வழங்கினர்

    திருமுருகன்பூண்டி :

    திருமுருகன்பூண்டி ஏ.வி.பி., அறக்கட்டளை மெட்ரிக்குலேசன் மேல்நிலைப்பள்ளியில் சைபர் கிரைம் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்றன. பள்ளியின் தாளாளர் கார்த்திகேயன் தலைமை தாங்கினார்.

    சிறப்பு விருந்தினர்களாக குற்றவியல் தடுப்பு முதன்மை காவலர் சொர்ணவள்ளி, குற்றவியல் தடுப்பு காவலர் சையத் ரபிக் சிக்கந்தர் ஆகியோர் கலந்து கொண்டனர். அவர்கள் இன்றைய வாழ்வியல் நடைமுறைக்கு தேவையான சைபர் கிரைம் தடுப்பு விழிப்புணர்வு தகவல்களை மாணவர்கள் புரிந்து கொள்ளும்படி வழங்கினர். நிகழ்ச்சியில் முதல்வர் பிரியாராஜா, ஒருங்கிணைப்பாளர் ஆபிதாபானு, மேலாளர் ராமசாமி மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். 

    • தாய்லாந்து நாட்டின் பட்டாயாவில் இண்டர்நேஷனல் யூத் ஸ்போர்ட்ஸ் பெடரேஷன் சார்பில் நடைபெற்ற ஆசிய அளவிலான சிலம்ப போட்டியில் பரிசுகளை பெற்று தமிழகத்திற்கு பெருமை சேர்த்துள்ளனர்.
    • திருப்பூர் மாநகராட்சி மேயர் தினேஷ்குமார் மற்றும் மாவட்ட விளையாட்டு அமைப்பினை சேர்ந்தவர்கள் மாணவர்களை வரவேற்று பாராட்டினர்.

    திருப்பூர் :

    திருப்பூர் காந்திநகர் பகுதியில் அமைந்துள்ள ஏ.வி.பி. டிரஸ்ட் பப்ளிக் பள்ளி மாணவர்களான ஆகாஷ்குமார், நகுலேஷ் ஆகியோர் தாய்லாந்து நாட்டின் பட்டாயாவில் இண்டர்நேஷனல் யூத் ஸ்போர்ட்ஸ் பெடரேஷன் சார்பில் நடைபெற்ற ஆசிய அளவிலான சிலம்ப போட்டியில் தமிழகம் சார்பில் கலந்து கொண்டு பரிசுகளை பெற்று தமிழகத்திற்கு பெருமை சேர்த்துள்ளனர்.

    மாணவன் ஆகாஷ்குமார் 17 வயதுக்குட்பட்டோருக்கான தனித்திறமை சிலம்பத்திலும், சண்டை சிலம்ப போட்டியிலும் முதலிடம் பெற்று தங்கப்பதக்கம் பெற்றுள்ளார். மாணவன் நகுலேஷ் 12 வயதிற்குட்பட்டோருக்கான தனித்திறமை சிலம்ப போட்டியில் முதலிடம் பெற்று தங்கப்பதக்கம் பெற்றுள்ளார்.

    பல்வேறு பதக்கங்களை பெற்று நாடு திரும்பிய மாணவர்களை திருப்பூர் மாநகராட்சி மேயர் தினேஷ்குமார் மற்றும் மாவட்ட விளையாட்டு அமைப்பினை சேர்ந்தவர்கள் வரவேற்று பாராட்டினர்.

    பள்ளியின் சார்பில் மாணவர்களை பள்ளி தாளாளர் கார்த்திக்கேயன், அருள்ஜோதி, பள்ளி பொருளாளர் லதா கார்த்திக்கேயன், முதல்வர் பிரமோதினி மற்றும் ஆசிரியர்கள் வரவேற்று பாராட்டினர். 

    • பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்று பள்ளிக்கு பெருமை சேர்த்த மாணவ-மாணவிகளை ஏ.வி.பி. கல்வி குழுமத்தினர் பாராட்டினர்.
    • பல்வேறு பாடங்களில் 100 சதவீத மதிப்பெண்களும் பெற்றுள்ளனர்.

    திருப்பூர் :

    திருப்பூர் திருமுருகன்பூண்டி ஏ.வி.பி., டிரஸ்ட் நேஷனல் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி 10 மற்றும் 12-ம்வகுப்பு அரசு பொதுத்தேர்வில் மாநில அளவில் சாதனை படைத்துள்ளது. இதில் 12-ம்வகுப்பு தேர்வில் மாணவன் ஹரிஷ் 600க்கு 596 மதிப்பெண் பெற்று மாநில அளவிலும், பள்ளியில் முதலிடமும் பெற்று சாதனை படைத்துள்ளார். மாணவி புவனா 595 மதிப்பெண் பெற்று 2-ம் இடமும் மாணவி அங்கயற்கண்ணி 594 மதிப்பெண் பெற்று 3-ம் இடமும் பெற்றுள்ளனர். 66 மாணவர்கள் பல்வேறு பாடங்களில் 100 சதவீத மதிப்பெண்களும் பெற்றுள்ளனர்.

    இதேப்போல் 10-ம்வகுப்பு தேர்வில் இப்பள்ளி மாணவி நக்சத்திரா 500க்கு 491 மதிப்பெண்ணும், மாணவன் தனுஜ் இமயவரம்பன் 491 மதிப்பெண்ணும் பெற்று பள்ளியில் முதலிடம் பெற்றுள்ளனர். மாணவி ரித்திகா 489 மதிப்பெண் பெற்று 2-ம் இடம் பெற்றுள்ளார்.

    மாணவன் கவின் அறிவியல் பாடத்தில் 100 மதிப்பெண்ணும், மாணவி ரித்திகா அறிவியலில் 100, தமிழில் 99 மதிப்பெண் பெற்று சாதனை படைத்துள்ளனர். கணிதத்தில் மாணவர் முகமது இம்தியாஸ், நக்சத்திரா, ரிசாபேஷ்,ஸ்ரீநிஷா, தனுஜ் இமயவரம்பன் ஆகியோர் 100க்கு 100 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். ஆங்கிலத்தில் ஆனந்த், அன்பரசி, ஹன்சிகா, கவின், கவுசிக், முகமது ஷகிலா ஆகியோர் 100க்கு 99 மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்துள்ளனர்.

    பொதுத்–தேர்–வில் அதிக மதிப்பெண்கள் பெற்று பள்ளிக்கு பெருமை சேர்த்த மாணவ-மாணவிகளை ஏ.வி.பி. கல்வி குழுமங்களின் தலைவர் கார்த்திகேயன், அறக்கட்டளை பொருளாளர் லதா கார்த்திகேயன், பள்ளி முதல்வர் பிரியா ராஜா, ஒருங்கிணைப்பாளர் வனிதாமணி மற்றும் ஆசிரிய-ஆசிரியைகள், பெற்றோர் பாராட்டினர்.

    ×