என் மலர்
நீங்கள் தேடியது "sports competition"
- குறுவட்ட அளவிளான விளையாட்டு போட்டிகள் நடைபெற்றது.
- புனித வளனார் பெண்கள் பள்ளி மாணவிகள் குழு விளையாட்டுகளில் 69 புள்ளிகள் பெற்றனர்.
கும்பகோணம்:
கும்பகோணம் பானாதுறை மைதானத்தில் பள்ளி கல்வி துறை சார்பில் குறுவட்ட அளவிளான விளையாட்டு போட்டிகளை நடத்தியது.
இதில் பல்வேறு பள்ளிகளை சேர்ந்த 450-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.
இதில் புனித வளனார் பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் குழு விளையாட்டுகளில் 69 புள்ளிகள் பெற்று ஒட்டு மொத்த சாம்பியன் பட்டமும், தடகள விளையாட்டுகளில் அனைத்து மாணவிகள் பிரிவில் 58 புள்ளிகள் பெற்று 2-ம் இடமும் பெற்று பள்ளிக்கு பெருமை சேர்த்தனர்.
12 குழு விளையாட்டு களில் 7 குழு விளையாட்டு களில் பங்கு பெற்று, 12 பிரிவுகளில் முதல் இடமும், 3 பிரிவுகளிலும்2-ம் இட மும் பெற்று சாதனை படைத்துள்ளனர்.
போட்டியில் வெற்றி பெற்ற மாணவிகள், உட ற்கல்வி இயக்குநர் ஜான்சி, உடற்கல்வி ஆசிரியைகள் ஜாஸ்மின் டயானா, ஜோஸ்பின் ரோசி, மோகன ப்பிரியா ஆகியோருக்கு தலைமையாசிரியை அருட். சகோதரி. வில்லியம் பிரௌன் பாராட்டினர்.
- மொத்தம் 16 பள்ளிகளை சேர்ந்த 1680 மாணவ மாணவிகள் பங்கேற்றனர்.
- வெற்றி பெற்றவர்களுக்கு அமைச்சர் கயல்விழி செல்வராஜ் பரிசு வழங்கினார்.
உடுமலை:
உடுமலை ,மடத்துக்குளம், குடிமங்கலம் ,ஒன்றியத்தில் உள்ள அரசு உயர்நிலை ,மேல்நிலைப்பள்ளி மெட்ரிக் பள்ளிகளுக்கு இடையேயான மாவட்ட அளவிலான குறுமைய விளையாட்டுப்போட்டிகள் உடுமலை அரசு கலைக்கல்லூரி மைதானத்தில் துவங்கியது.
போட்டிகளை ஆதிராவிட நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் துவக்கி வைத்தார். மொத்தம் 16 பள்ளிகளை சேர்ந்த 1680 மாணவ மாணவிகள் பங்கேற்றனர். வெற்றி பெற்றவர்களுக்கு அமைச்சர் கயல்விழி செல்வராஜ் பரிசு வழங்கினார்.
விழாவில் கோட்டாட்சியர் ஜஸ்வந்த் கண்ணன், நகர திமுக .,செயலாளர் வேலுச்சாமி, பொருளாளர் முபாரக் அலி, நகராட்சி துணை தலைவர் கலைராஜன் .ஒன்றிய திமுக .,செயலாளர் செழியன் ,செந்தில்குமார், மெஞ்ஞானமூர்த்தி, உடுமலை ஊராட்சி ஒன்றிய தலைவர் மகாலட்சுமி முருகன், ஊராட்சி தலைவர்கள் போடி பட்டி சௌந்தர்ராஜ், கணக்கம்பாளையம் காமாட்சி அய்யாவு உட்பட பலர் கலந்து கொண்டனர்.
- நரிக்குடி அருகே வட்டார விளையாட்டு போட்டிகள் நடந்தது.
- போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பதக்கமும், சான்றிதழ்களும் வழங்கப்பட்டது.
திருச்சுழி
விருதுநகர் மாவட்டம் திருச்சுழி தாலுகா நரிக்குடி அருகேயுள்ள இலுப்பையூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் 2023-24-ம் கல்வியாண்டிற்கான 14 வயதிற்கு உட்பட்ட மாணவர்களுக்கான வட்டார அளவிலான விளையாட்டுப் போட்டிகள் நடந்தது.
இந்த போட்டிகளில் நரிக்குடி ஓடம் கஸ்தூரி பா காந்தி பாலிகா வித்யாலயா உண்டு உறைவிடப்பள்ளி மாணவிகள் இறகு பந்து, எறிபந்து, கோகோ, நீளம் தாண்டுதல், குண்டு எறிதல், தட்டு எறிதல், 100 மீட்டர் மற்றும் 200 மீட்டர் ஓட்டப்பந்தய போட்டிகள் உள்பட பல்வேறு போட்டிகளில் கலந்து கொண்டனர்.
பள்ளியின் 8-ம் வகுப்பு மாணவிகளான ரோகிணி குண்டு எறிதல், தட்டு எறிதல் போட்டிகளில் முதலிடமும், லாவண்யா நீளம் தாண்டுதல் போட்டியில் முதலிடமும், இலக்கியா தட்டு எறிதல் போட்டியில் 2-ம் இடமும் பெற்றனர். 200 மீட்டர் ஓட்டப்போட்டியில் ஜனனி 2-ம் இடமும், 80 மீட்டர் தொலைவிலான தடை ஓட்டப்போட்டியில் அருணா 3-ம் இடமும், காவியா ஸ்ரீ, ஜனனி, பிரமிளா மற்றும் அருணா ஆகியோர் 100 மீட்டர் தொலைவிலான ஓட்டப்பந்தய போட்டிகளில் கலந்துகொண்டு 3-ம் இடமும் பெற்றனர். போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பதக்கமும், சான்றிதழ்களும் வழங்கப்பட்டது.
- கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு தி.மு.க. இளைஞரணி சார்பில் விளையாட்டு போட்டி நடந்தது.
- ராஜகண்ணப்பன் கலந்து கொண்டு தலைமை தாங்கி விளையாட்டு போட்டியை தொடங்கி வைத்தார்.
பனைக்குளம்
ராமநாதபுரம் மாவட்ட தி.மு.க. இளைஞரணி சார்பில் கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள சீதக்காதி விளையாட்டு மைதானத்தில் கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு மாவட்ட அளவிலான தடகளப்போட்டியை அமைச்சர் ராஜகண்ணப்பன் கலந்து கொண்டு தலைமை தாங்கி விளையாட்டு போட்டியை தொடங்கி வைத்தார்.
இந்த விளையாட்டு போட்டிக்கு பரமக்குடி எம்.எல்.ஏ. முருகேசன், மாநில இளைஞரணி துணை செயலாளர் இன்பா ரகு ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த விளையாட்டு போட்டியில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு வெற்றி பெற்ற னர்.
இதற்கான ஏற்பாடுகளை மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் மண்டபம் சம்பத் ராஜா தலைமையில் மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர்கள் கோபிநாத், ரமேஷ் கண்ணா, சம்பத் குமார், தௌபீக் அலி, மாவட்ட பொறியாளர் அணி அமைப்பாளர் சுரேஷ், மாவட்ட மகளிர் அணி துணை அமைப்பாளர் உதயசூரியா மற்றும் நிர்வாகிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
- மாணவர்களுக்கான பரிசளிப்பு விழா உப்பளம்பெத்தி செமினார் தொடக்கப் பள்ளி வளாகத்தில் நடந்தது.
- பள்ளி துணை முதல் வர் ஜான்பால் நன்றி கூறினார்.
புதுச்சேரி:
புதுச்சேரி பெத்தி செமினார் மேல்நிலைப் பள்ளி யில் 2023-24 கல்வி ஆண் டிற்கான விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட் டன. இதில் மாணவர்கள் ஆர்வமாக பங்கேற்றனர்.
போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கான பரிசளிப்பு விழா உப்பளம்பெத்தி செமினார் தொடக்கப் பள்ளி வளாகத்தில் நடந்தது.
பள்ளி முதல்வர் தேவ தாஸ்தலைமை தாங்கினார். போலீஸ் சூப்பிரண்டு வம்சீதரா ரெட்டி, விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கி பாராட்டினார். மேலும் விழாவில், ஆசிரியர்க ளுக்கு பல்வேறு போட்டி கள் நடத்தி பரிசு வழங்கப் பட்டது.
பள்ளி துணை முதல் வர் ஜான்பால் நன்றி கூறினார்.
- ஒ.ஜோதி எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்
- ஏராளமானோர் கலந்து கொண்டனர்
செய்யாறு
திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு ஒன்றியம் விண்ணமங்கலம் கிராமத்தில் உள்ள அரசு பள்ளியில் செய்யாறு மற்றும் அனக்காவூர் பள்ளிகளுக்கு இடையேயான குறுவட்ட அளவிலான தடகள விளையாட்டுப் போட்டிகள் நடந்தது.
ஒ.ஜோதி எம்.எல்.ஏ. ஒலிம்பிக் சுடரை ஏற்றி விளையாட்டுப் போட்டிகளை தொடங்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் ஊராட்சி மன்ற தலைவர் மோகன்ராஜ், திமுக பிரமுகர்கள் ராஜ்குமார், தமிழ்ச்செல்வன், பார்த்திபன், ஆறுமுகம், கதிரவன், ரூபி வெங்கடேசன், உடற்கல்வி ஆசிரியர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
- இன்று நடக்கிறது
- பொதுமக்கள் அதிகளவில் கலந்து கொள்ள கலெக்டர் வலியுறுத்தல்
திருப்பத்தூர்:
தமிழ்நாடு விளையாட்டு மேம் பாட்டு ஆணையம், திருப்பத்தூர் மாவட்ட விளையாட்டு பிரிவில், தேசிய விளையாட்டு தினத்தினை சிறப்பாக கொண்டாடிடும் பொருட்டு, இன்று (செவ்வாய்க்கிழமை) காலை 8 மணி முதல் 19 வயதிற்குட்பட்டவர்கள், 25 வயதிற்குட்பட்டவர்கள் மற்றும் 45 வயதிற்குட்பட்டவர்கள் என 3 பிரிவுகளாக ஆண்கள் மற்றும் மகளிருக்கு தனித்தனியாக விளையாட்டுப் போட்டிகள் ஜோலார்பேட்டையில் உள்ள சிறு விளையாட்டரங்கில் நடத்தப்பட உள்ளது.
19 மற்றும் 25 வயதிற்குட்பட்ட ஆண்கள் மற்றும் மகளிருக்கு வாலிபால் மற்றும் 100 மீட்டர் ஓட்டம், 45 வயதிற்குட்பட்ட ஆண்களுக்கு 100 மீட்டர் ஓட்டம், மகளிருக்கு 50 மீட்டர் ஓட்டம் ஆகிய விளையாட்டு போட்டிகள் நடத்தப்படுகிறது.
பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள், அரசு ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் ஆகியோர் அதிக அளவில் கலந்து கொண்டு தேசிய விளையாட்டு தினத்தை சிறப்பிக்குமாறு கலெக்டர் பாஸ்கரபாண்டியன் கேட்டுக்கொண்டுள்ளார்.
- 100 மீட்டர் ஓட்டம்.45 வயதுக்குட்பட்ட ஆடவர் மற்றும் மகளிர் 100 மீட்டர் ஓட்டம்.
- காலை 8 மணிக்கு கடலூர் மாவட்ட விளையாட்டு அலுவலரிடம் ஆஜராகி போட்டிகளில் கலந்துகொள்ளலாம்.
கடலூர்:
கடலூர் கலெக்டர் அருண் தம்புராஜ் விடுத்துள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது - சர்வதேச அளவில் இந்திய தேசத்திற்கு பெருமை சேர்த்த இந்திய ஹாக்கி ஒலிம்பியன் மேஜர் தயான்சந் தை கவுரவிக்கும் வகையில், அவரின் பிறந்தநாளினை நினைவு கூறும் வகையில் இந்த ஆண்டு 29 -ந்தேதி தேசிய விளையாட்டு தினமாக கொண்டாடப்படுவதால், அதனை நினைவு கூறும் வகையில் கீழ்கண்டவாறு விளையாட்டுப் போட்டிகள் கடலூர் அண்ணா விளையாட்டு அரங்கில் நடைபெறும்.
இதில் 19 வயதுக்குட்பட்ட ஆடவர் மற்றும் மகளிர் ஹாக்கி மற்றும் 100 மீட்டர் ஓட்டம்.25 வயதுக்குட்பட்ட ஆடவர் மற்றும் மகளிர்கூடைப்பந்து மற்றும் 100 மீட்டர் ஓட்டம்.45 வயதுக்குட்பட்ட ஆடவர் மற்றும் மகளிர் 100 மீட்டர் ஓட்டம். போட்டிகளில் கலந்து கொள்ள விருப்பம் உள்ளவர்கள் குழு விளையாட்டிற்கு ஒரு குழுவாகவும், தனிநபர் போட்டிக்கு தனியாகவும் தங்களது நுழைவு விண்ணப்பத்தினை 28 -ந்தேதி பிற்பகல் 5 மணிக்குள் கடலூர் மாவட்ட விளையாட்டு அலுவலருக்கு அனுப்பிவைத்து, போட்டி நடைபெறும் அன்று காலை 8 மணிக்கு கடலூர் மாவட்ட விளையாட்டு அலுவலரிடம் ஆஜராகி போட்டிகளில் கலந்துகொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- 9 மற்றும் 10-ந் தேதி நடைபெறும் மண்டல அளவிலான போட்டி நடக்கிறது
- இறுதி கட்ட போட்டித் தேர்வு 23-ந் தேதி நடைபெறுகிறது
ஜோலார்பேட்டை:
ஜோலார்பேட்டையில் உள்ள சிறு விளையாட்டு அரங்கில் தென்னிந்திய அளவிலான மாபெரும் கிராமிய விளையாட்டு திருவிழா ஈஷா புத்துணர்வு கோப்பை முதல் கட்ட போட்டிகள் நேற்று நடைபெற்றது.
இதில் மாவட்ட முழுவதும் உள்ள கிராமப்புற இளைஞர்களுக்கு முதல் கட்ட கைப்பந்து போட்டி நடைபெற்றது. இதில் பல்வேறு பகுதிகளில் இருந்து ஆண்களுக்கான கைப்பந்து போட்டி அணியினர் போட்டியில் பங்கேற்றனர்.
இந்த போட்டியில் வெற்றி பெறுபவர்கள் வரும் செப்டம்பர் மாதம் 9 மற்றும் 10-ந் தேதி நடைபெறும் மண்டல அளவிலான போட்டியில் பங்கேற்க தகுதி உடையவர்கள்.
மேலும் மண்டல அளவிலான போட்டியில் பங்கேற்று வெற்றி பெறுபவர்களுக்கு இறுதி கட்ட போட்டித் தேர்வு கோவையில் உள்ள ஈஷா யோகா மையம் ஆதியோகி முன்பு சத்குருவும் விருந்தினர்கள் முன்னிலையில் செப்டம்பர் 23-ந் தேதி நடைபெற உள்ளது.
- வாடிப்பட்டியில் மரபு வழி விளையாட்டு போட்டிகள் மீண்டும் புத்துயிர் பெற்றுள்ளது.
- சுதந்திர தினவிழாவையொட்டி தமிழ் மரபு அறக்கட்டளை பன்னாட்டு அமைப்பு சார்பில் பல்வேறு போட்டிகள் நடந்தன.
வாடிப்பட்டி
மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே தெத்தூர் மேட்டுப்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் சுதந்திர தினவிழாவையொட்டி தமிழ் மரபு அறக்கட்டளை பன்னாட்டு அமைப்பு சார்பில் காலம் மாற்றத்தால் மறக்கப் பட்டு வரும் மரபு வழி விளையாட்டுகள் அறிமுக விழாவும் மற்றும் மரபு விளையாட்டு போட்டிகள் நடந்தது. இந்த போட்டியில் மாணவர்களுக்கு பச்சை குதிரை, 7-கல், கிட்டிப்புல் போன்ற விளை யாட்டுகளும், மாணவிகளுக்கு பாண்டியாட்டம் (நொண்டி), கிச்சுகிச்சு தாம்பூலம் மற்றும் பல்லாங்குழி ஆகிய விளை யாட்டு போட்டிகளும் நடத்தப் பட்டது. இந்த விளையாட்டு போட்டிக்கு தலைமையாசிரியர் சந்திரன் தலைமை தாங்கி னார். ஊராட்சி மன்றத்தலைவர் கூடம்மாள் பழனிச்சாமி, பள்ளி மேலாண்மைக்குழு தலைவர் ரெங்கநாயகி, பெற்றோர்- ஆசிரியர் கழக தலைவர் பரம சிவம், உணவுப்பொருள் பாது காப்பு அலுவலர் ஈஸ்வரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தமிழாசிரியர் ஆறுமுகம் வரவேற்றார். இந்த நிகழ்ச்சியில் தமிழ்மரபு அறக்கட்டளை மதுரை கிளை பொறுப்பாளர் சுலேகா பானு தமிழ் மரபு அறக்கட்டளை அறிமுகவுரையாற்றினார். மரபு விளையாட்டுகள் குறித்து மதுரை டோக் பெருமாட்டி கல்லூரி பேராசிரியை பாப்பா விளக்கி பேசினார்.
இப்போட்டியின் நடுவர்க ளாக ஆசிரியர்கள் மற்றும் தமிழ் மரபு அறக்கட்டளை உறுப்பினர்கள் வெற்றியாளர் களை தேர்வு செய்தனர்.இந்த போட்டியில் வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. இதில் தமிழ் மரபு அறக்கட்டளை உறுப்பினர்கள் சரவணக்குமார், மோசஸ், நஜ்மூதீன், பேராசிரியை.இறைவாணி, முத்துக்குமார், தாமரைச்செல்வி உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் உடற்கல்வி ஆசிரியர் ராஜன் நன்றி கூறினார்.