search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "bronze medal"

    • சேலத்தை சேர்ந்த அனுஷியா ப்ரியதர்ஷினி டேக்வாண்டோ - 62 கிலோ எடை பிரிவில் வெண்கல பதக்கம் வென்றுள்ளார்.
    • இவர் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆைணயத்தின் மிஷன் சர்வதேச பதக்க திட்டத்தின் கீழ் தேர்ந்தெடுக்கப்பட்டு சிறப்பு டேக்வொண்டொ பயிற்சி பெற்று வருகிறார்.

    சேலம்:

    கோவாவில் நடைபெற்று வரும் 37-வது தேசிய விளையாட்டு போட்டிகளில் சேலத்தை சேர்ந்த அனுஷியா ப்ரியதர்ஷினி டேக்வாண்டோ - 62 கிலோ எடை பிரிவில் வெண்கல பதக்கம் வென்றுள்ளார்.

    இவர் கடந்த அக்டோபர் மாதம் 20-ந் தேதி முதல் 27-ந் தேதி வரை டெல்லி உயர்நீதி மன்றத்தின் வழிகாட்டுதலின் படி லக்னோவில் நடைபெற்ற ஓபன் செலஷன் டெரயல்ஸ் - ஓய்ல்டு கார்டு என்டீரி டேக்வாண்டோ போட்டியில் 62 கிலோ எடை பிரிவில் விளையாட தேர்வு செய்யப்பட்டார்.

    தமிழகத்தில் இருந்து 37-வது தேசிய அளவிலான விளையாட்டு டேக்வாண்டோ விளையாட்டில் பங்குபெற்றவர்களில் பதக்கம் வென்ற ஒரே வீராங்கனை அனுஷியா ப்ரியதர்ஷினி ஆவார். இவர் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆைணயத்தின் மிஷன் சர்வதேச பதக்க திட்டத்தின் கீழ் தேர்ந்தெடுக்கப்பட்டு சிறப்பு டேக்வொண்டொ பயிற்சி பெற்று வருகிறார்.

    அனுஷியா ப்ரியதர்ஷினிக்கு இவர் பயிலும் திண்டுக்கல் ஜி.டி.என். கலைக் கல்லூரியின் தாளாளர், கல்லூரி இயக்குநர், உடற்கல்வி இயக்குநர், பேராசிரியர்கள் மற்றும் உதவி பேராசிரியர்கள் தங்களது வாழ்துக்களை தெரிவித்துள்ளனர்.

    • முதல் பாதியில் ஸ்வீடன் 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் இருந்தது.
    • 30-வது நிமிடத்தில் ஸ்வீடன் வீராங்கனை ஃப்ரிடோலினா ரோல்ஃபோ முதல் கோலை அடித்து அசத்தினார்.

    9-வது மகளிர் உலக கோப்பை கால்பந்து போட்டி ஆஸ்திரேலியா, நியூசிலாந்தில் நடைபெற்று வருகிறது. 32 நாடுகள் பங்கேற்ற இந்தப் போட்டி கடந்த மாதம் 20-ந் தேதி தொடங்கியது. இதன் இறுதிப் போட்டி நாளை நடக்கிறது. சிட்னி மைதானத்தில் இந்திய நேரப்படி மாலை 3.30 மணிக்கு நடைபெறும் இந்த ஆட்டத்தில் ஸ்பெயின்-இங்கிலாந்து அணிகள் மோதுகின்றன.

    இந்நிலையில் வெண்கல பதக்கத்துக்கான போட்டி இன்று நடைபெற்றது. இந்த போட்டியில் ஆஸ்திரேலியா - ஸ்வீடன் அணிகள் மோதின. 30-வது நிமிடத்தில் ஸ்வீடன் வீராங்கனை ஃப்ரிடோலினா ரோல்ஃபோ முதல் கோலை அடித்து அசத்தினார். ஆஸ்திரேலிய அணியால் கோல் அடிக்க முடியாமல் திணறினர்.

    இதனால் முதல் பாதியில் ஸ்வீடன் 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் இருந்தது. இதனை தொடர்ந்து 2-வது பாதி தொடங்கியது. 62-வது நிமிடத்தில் ஸ்வீடன் வீராங்கனை கொசோவரே அஸ்லானி ஒரு கோலை பதிவு செய்தார். இதனால் 2-0 என்ற கணக்கில் ஸ்வீடன் முன்னிலையில் இருந்தது.

    கடைசி வரை கோல் அடிக்க முடியாமல் ஆஸ்திரேலிய வீராங்கனைகள் திணறினர். இதன்மூலம் ஸ்வீடன் அணி 2-0 என்ற கணக்கில் ஆஸ்திரேலிய அணியை வீழ்த்தி வெண்கல பதக்கத்தை தட்டிச் சென்றது. ஸ்வீடன் அணி 4-வது முறையாக வெண்கல பதக்கத்தை வென்றது குறிப்பிடத்தக்கது.

    • எத்திராஜ் மகளிர் கல்லூரியில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில் சர்வதேச மகளிர் தினவிழா கொண்டாடப்பட்டது.
    • பெண் குழந்தைகளின் பாலின விகிதத்தை உயர்த்தி சிறப்பாக செயலாற்றியமைக்காக நாமக்கல் மாவட்டம் மாநில அளவில் 3 இடத்திற்கு தேர்வு செய்யப்பட்டு உள்ளது.

    நாமக்கல்:

    சென்னை எத்திராஜ் மகளிர் கல்லூரியில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில் சர்வதேச மகளிர் தினவிழா கொண்டாடப்பட்டது. விழாவில் தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று பெண் குழந்தைகளின் பிறப்பு பாலின விகிதத்தை உயர்த்திட சிறப்பாக செயலாற்றியமைக்காக சிறந்த கலெக்டருக்கான 3-ம் பரிசு வெண்கலப்பதக்கம் மற்றும் பாராட்டு சான்றிதழை நாமக்கல் மாவட்ட கலெக்டர் ஸ்ரேயாசிங்குக்கு வழங்கினார்.

    நாமக்கல் மாவட்டத்தில் பெண் குழந்தைகள் பிறப்பு பாலின விகிதத்தை அதிகரித்தல், மாவட்ட அளவில் 5 வயதிற்கு உட்பட்ட குழந்தைகள் இறப்பினை குறைத்தல், மாவட்டத்தின் கருக்கலைப்பு விகிதத்தினை குறைத்தல், 1994-ம் ஆண்டுக்கு முன் கருத்தரிப்பு மற்றும் மகப்பேறுக்கு முந்தைய பரிசோதனை நுட்பங்கள் சட்டம் மாவட்டத்தில் வலுவாக செயல்படுத்தப்பட்டு பரிசோதனை மையங்கள் தொடர் கண்காணிப்பில் இருத்தல், பெண் குழந்தைகளின் எண்ணிக்கையை அதிகரிக்க விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்துதல் உள்ளிட்ட பணிகளை மேற்கொண்டு, பெண் குழந்தைகளின் பாலின விகிதத்தை உயர்த்தி சிறப்பாக செயலாற்றியமைக்காக நாமக்கல் மாவட்டம் மாநில அளவில் 3 இடத்திற்கு தேர்வு செய்யப்பட்டு உள்ளது.

    அதன் அடிப்படையில் தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மகளிர் தினவிழாவில், நாமக்கல் மாவட்ட கலெக்டர் ஸ்ரேயாசிங்கிற்கு வெண்கலப்பதக்கம் மற்றும் பாராட்டு சான்றிதழ் வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது. நாமக்கல் மாவட்டத்தில் கடந்த 2021-22-ம் ஆண்டு பெண் குழந்தைகள் பிறப்பு பாலின விகிதம் 941 ஆக இருந்தது. அது 2022-23-ம் ஆண்டில் 953 ஆக அதிகரித்து உள்ளது குறிப்பிடத்தக்கது.

    • தேசிய அளவிலான கைப்பந்து சாம்பியன்ஷிப் போட்டி நடந்தது
    • வீரர்களுக்கு வாழ்த்து தெரிவித்தனர்

    தண்டராம்பட்டு:

    தேசிய அளவிலான கைப்பந்து போட்டியில் திருவண்ணாமலை மாணவர்கள் வெண்கல பதக்கம் என்று சாதனை புரிந்தனர். அவர்களை மாநில கைப்பந்து சங்க துணை தலைவர் இரா. ஸ்ரீதரன் வாழ்த்தினார்.

    44 வது தேசிய அளவிலான கைப்பந்து சாம்பியன்ஷிப் போட்டி திருச்சியில் கடந்த மாதம் 26,27,28,29,30 ஆகிய நாட்கள் நடைபெற்றது. இதில் தமிழ்நாடு கைப்பந்து அணியில் திருவண்ணாமலை மாவட்டம் கைப்பந்து சார்பாக கலந்து கொண்டு விளையாடிய திருவண்ணாமலை சிஷ்யா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவன் ஆர். ஆகாஷ் மற்றும் சண்முகா கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவன் மகேஷ் சர்மா ஆகியோர் வெண்கலம் பதக்கத்தை வென்று சாதனை படைத்தனர்.

    வெற்றி பெற்ற மாணவர்களை தமிழ்நாடு கைப்பந்து சங்கம் மாநில துணை தலைவரும் திருவண்ணாமலை மாவட்ட கைப்பந்து சங்கம் தலைவருமான இரா. ஸ்ரீதரனிடம் வாழ்த்துப் பெற்றனர்.

    நிகழ்ச்சியின் போது திருவண்ணாமலை மாவட்ட கூடைப்பந்து செயலாளர் ரமேஷ் திருவண்ணாமலை மாவட்ட கோ கோ சங்க செயலாளர் ஆனந்தன் திருவண்ணாமலை மாவட்ட கைப்பந்து செயலாளர் ஏ.கமல்ராஜ், சங்க பொருளாளர் பி.தண்டாயுதபாணி ஆகியோர் உடன் இருந்தனர்.

    • மகாகவி பாரதியார் பிறந்தநாள் விழா மற்றும், குடியரசு தின விழாவை முன்னிட்டு தென்காசி மாவட்ட அளவில் விளையாட்டு போட்டிகள் பாவூர்சத்திரம் த.பி.சொக்கலால் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது.
    • சிவகிரி பாலவிநாயகர் உயர்நிலைப் பள்ளி 9-ம் வகுப்பு மாணவன் கருப்பசாமி வெண்கலம் பதக்கம் பெற்று சாதனை படைத்தார்.

    சிவகிரி:

    மகாகவி பாரதியார் பிறந்தநாள் விழா மற்றும், குடியரசு தின விழாவை முன்னிட்டு தென்காசி மாவட்ட அளவில் விளையாட்டு போட்டிகள் பாவூர்சத்திரம் த.பி.சொக்கலால் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது.

    இதில் சிலம்பம் போட்டியில் 17 வயதிற்கு உட்பட்ட கம்பு சண்டை, 35 கிலோ பிரிவு போட்டியில் கலந்து கொண்ட சிவகிரி பாலவிநாயகர் உயர்நிலைப் பள்ளி 9-ம் வகுப்பு மாணவன் கருப்பசாமி வெண்கலம் பதக்கம் பெற்று சாதனை படைத்தார். வெற்றி பெற்ற மாணவனுக்கு பள்ளி செயலாளர், தலைமை ஆசிரியர், ஆசிரிய - ஆசிரியைகள், பெற்றோர்கள், அலுவலகப் பணியாளர்கள், மாணவ- மாணவிகள் வாழ்த்து தெரிவித்தனர்.

    • பரமக்குடியில் தேசிய கராத்தே போட்டி நடந்தது.
    • இதில் வெண்கலம் வென்ற சிறுமிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

    பரமக்குடி

    ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியை சேர்ந்த குருநாதன்-கவிதா தம்பதியின் 10 வயது மகள் அனுஸ்ரீ. இவர் கடந்த வாரம் டெல்லியில் நடந்த தேசிய அளவிலான கராத்தே போட்டியில் தமிழகம் சார்பில் கலந்து கொண்டு வெண்கல பதக்கம் வென்றார். அதேபோல் 10 வயது சிறுவன் வசந்த் மாநில அளவில் நடந்த கராத்தே போட்டியில் வெள்ளி பதக்கம் வென்றார். பதக்கங்கள் வென்று சொந்த ஊருக்கு திரும்பிய இருவருக்கும் ஸ்பார்க் கராத்தே அமைப்பு சார்பில் மாலை, சால்வை அணிவித்து மேளதாளங்கள் முழங்க வரவேற்பு அளிக்கப்பட்டது. பதக்கங்கள் வென்ற சிறுவர்-சிறுமிக்கும், பயிற்சியாளர்களுக்கும் குடும்ப உறுப்பினர்கள், உறவினர்கள் பொதுமக்கள் சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

    • துப்பாக்கி சுடுதல் போட்டியில் 1300 க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.
    • 50 மீட்டர் ஓப்பன்சைட் பிரிவில் பங்கேற்று வெண்கலப்பதக்கம் வென்றார்

    மங்கலம் :

    தமிழ்நாடு மாநில அளவிலான 47-வது துப்பாக்கி சுடுதல் போட்டி திருச்சியில் சமீபத்தில் நடைபெற்றது இதில் 1300 க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர் , இதில் துப்பாக்கி சுடுதல் போட்டியில் திருப்பூர் மாவட்டம், இடுவாய் , திருமலை கார்டன் பகுதியைச் சேர்ந்த தொழிலதிபர் கார்த்திக்தனபால் தனிநபர் -50 மீட்டர் ஓப்பன்சைட் பிரிவில் பங்கேற்று மாநில அளவில் வெற்றி பெற்று வெண்கலப்பதக்கம் வென்றார்.

    ஜாம்ஷெட்பூரில் நடந்த தேசிய ஜூனியர், மாஸ்டர்ஸ் வலுதூக்குதல் மற்றும் பெஞ்ச்பிரஸ் போட்டியில் சென்னை வீரர் ஷியாம்சுந்தர் வெண்கல பதக்கம் வென்றார். #Strengthliftingcompetition
    சென்னை:

    ஜாம்ஷெட்பூரில் நடந்த தேசிய ஜூனியர், மாஸ்டர்ஸ் வலுதூக்குதல் மற்றும் பெஞ்ச்பிரஸ் போட்டியில் சென்னை வீரர் ஷியாம்சுந்தர் வெண்கல பதக்கம் வென்றார். 120 கிலோ வலுதூக்குதல் பிரிவில் அவர் இந்த பதக்கத்தை கைப்பற்றினார்.

    இந்தப் போட்டியில் பதக்கம் வென்ற சென்னையை சேர்ந்த 9 பேரையும் சென்னை மாவட்ட வலுதூக்குதல் சங்க பொதுச் செயலாளர் எஸ்.பகவதி பாராட்டியுள்ளார். #Strengthliftingcompetition
    15 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கான ஆசிய பேட்மின்டன் போட்டியில் சென்னை வீரர் சங்கர் முத்துசாமி வெண்கலப்பதக்கம் பெற்றார். #AsianJuniorBadminton
    15 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கான ஆசிய பேட்மிண்டன் போட்டி மியான்மர் நாட்டில் நடந்தது. இதில் பங்கேற்ற சென்னை வீரர் சங்கர் முத்துசாமி வெண்கலப்பதக்கம் பெற்றார். இதன்மூலம் ஆசிய பேட்மிண்டன் போட்டியில் பதக்கம் வென்ற முதல் தமிழக வீரர் என்ற பெருமையை அவர் பெற்றார்.

    சங்கர் கால்இறுதிக்கு முந்தைய சுற்றில் நேபாள வீரரையும், கால்இறுதியில் மலேசிய வீரரையும் தோற்கடித்தார். அரை இறுதியில் கொரியா வீரரிடம் போராடி தோற்றார்.

    அவர் முகப்பேரில் உள்ள பயர்பால் அகாடமியில் பயிற்சியாளர் அரவிந்தனிடம் பயிற்சி பெற்று வருகிறார். #AsianJuniorBadminton
    சத்தீஷ்கரில் நடைபெற்ற தேசிய சீனியர் வலுதூக்குதல் சாம்பியன் ஷிப் போட்டியில் தமிழக அணி 2 வெண்கல பதக்கம் வென்றது. #powerlifting
    43-வது தேசிய சீனியர் வலுதூக்குதல் சாம்பியன் ஷிப் போட்டி சத்தீஷ்கர் மாநிலத்தில் நடந்தது. இந்தியா முழுவதும் இருந்து 500 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றனர். தமிழ்நாட்டில் இருந்து 22 பேர் கலந்து கொண்டனர்.

    இதில் தமிழக அணிக்கு 2 வெண்கல பதக்கம் கிடைத்தது. 93 கிலோ பிரிவில் சென்னை வீரர் எம்.நந்தகுமார் மொத்தம் 690 கிலோ தூக்கி 3-வது இடத்தை பிடித்து வெண்கல பதக்கம் வென்றார்.

    பெண்களுக்கான 47 கிலோ பிரிவில் சேலத்தை சேர்ந்த கே.நந்தினி மொத்தம் 237.5 கிலோ தூக்கி 3-வது இடத்தை பிடித்தார். #powerlifting
    ஆசிய விளையாட்டுப் போட்டியில், இந்திய ஷ்குவாஷ் வீராங்கனை ஜோஷ்னா சின்னப்பா அரையிறுதியில் தோல்வி அடைந்ததால் வெண்கலப் பதக்கம் வென்றார். #AsianGames2018 #JoshnaChinappa
    ஜகார்த்தா:

    இந்தோனேசியாவில் நடைபெற்று வரும் ஆசிய விளையாட்டுப் போட்டியில் சிறப்பாக விளையாடிய இந்திய ஸ்குவாஷ் வீராங்கனைகள் தீபிகா பல்லிகல், ஜோஷ்னா சின்னப்பா ஆகியோர் பெண்களுக்கான ஒற்றையர் பிரிவில் அரையிறுதிக்கு முன்னேறி பதக்கத்தை உறுதி செய்திருந்தனர்.  

    இந்நிலையில் இன்று அரையிறுதி போட்டிகள் நடைபெற்றன. இதில், தீபிகா பல்லிகல் மலேசிய வீராங்கனை நிக்கோல் டேவிட்டிடம் தோல்வியடைந்ததால் அவருக்கு வெண்கலப் பதக்கம் கிடைத்தது.

    இதையடுத்து மற்றொரு அரையிறுதி ஆட்டத்தில் ஜோஷ்னா சின்னப்பா, மலேசியாவின் சிவசங்கரியை எதிர்கொண்டார். மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இந்த போட்டியில் 1-3 என ஜோஷ்னா தோல்வியடைந்தார். எனவே அவர் வெண்கலப் பதக்கம் பெற்றார்.



    இதன்மூலம் இந்தியா 6 தங்கம், 5 வெள்ளி, 16 வெண்கலம் என மொத்தம் 27 பதக்கங்களுடன் பதக்க பட்டியலில் 9-வது இடத்தில் உள்ளது. #AsianGames2018 #JoshnaChinappa
    ஆசிய விளையாட்டுப்போட்டியில் இந்திய வீராங்கனை தீபிகா பல்லிகல், ஸ்குவாஷ் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்றார்.#AsianGames2018 #DipikaPallikal
    ஜகார்த்தா

    இந்தோனேசியாவில் நடைபெற்று வரும் ஆசிய விளையாட்டுப் போட்டியில் சிறப்பாக விளையாடிய இந்திய ஸ்குவாஷ் வீராங்கனைகள் தீபிகா பல்லிகல், ஜோஷ்னா சின்னப்பா ஆகியோர் பெண்களுக்கான ஒற்றையர் பிரிவில் அரையிறுதிக்கு முன்னேறி பதக்கத்தை உறுதி செய்திருந்தனர்.  

    இந்நிலையில் இன்று அரையிறுதி போட்டிகள் நடைபெற்றன. இதில், தீபிகா பல்லிகல் மலேசிய வீராங்கனை நிக்கோல் டேவிட்டை எதிர்கொண்டார். இப்போட்டியில் தீபிகா 0-3 என தோல்வியடைந்து போட்டியில் இருந்து வெளியேறினார். இதன்மூலம் அவருக்கு வெண்கலப் பதக்கம் கிடைத்தது.



    இதன்மூலம் இந்தியா 6 தங்கம், 5 வெள்ளி, 15 வெண்கலம் என மொத்தம் 26 பதக்கங்களுடன் பதக்க பட்டியலில் 9-வது இடத்தில் உள்ளது.

    தீபிகாவைத் தொடர்ந்து மற்றொரு அரையிறுதி ஆட்டத்தில் ஜோஷ்னா சின்னப்பா, மலேசியாவின் சுப்ரமணியம் சிவசங்கரியை எதிர்கொள்கிறார். #AsianGames2018 #DipikaPallikal
    ×