என் மலர்
நீங்கள் தேடியது "World Junior Badminton Championship"
- உலக ஜூனியர் பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டி கவுகாத்தியில் நடந்து வருகிறது.
- கலப்பு அணிகள் பிரிவு அரையிறுதியில் இந்திய அணி தோல்வி அடைந்தது.
கவுகாத்தி:
உலக ஜூனியர் பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டி கவுகாத்தியில் நடந்து வருகிறது.
நேற்று நடந்த கலப்பு அணிகள் பிரிவு அரையிறுதி ஆட்டத்தில் இந்திய அணி, நடப்பு சாம்பியன் இந்தோனேசியாவை எதிர்கொண்டது.
இதில் இந்திய கலப்பு அணி 0-2 என தோல்வி அடைந்தது. ஆனாலும் அரையிறுதிக்கு முன்னேறியதால் வெண்கலப் பதக்கம் பெற்று இந்தியா வரலாற்று சாதனை படைத்தது.
உலக ஜூனியர் பேட்மிண்டன் சாம்பியன்ஷிப்பில் இந்தியா பதக்கம் வெல்வது இது முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.
- அரையிறுதி போட்டியில் தாய்லாந்து வீரரை தோற்கடித்தார்.
- 2016 ஆண்டுக்கு பிறகு இறுதி போட்டிக்கு முன்னேறிய முதல் இந்திய வீரர்.
சாண்டேன்டர்:
19 வயதுக்கு உட்பட்டோருக்கான உலக ஜூனியர் பேட்மிண்டன் போட்டி ஸ்பெயின் நாட்டின் சாண்டேன்டர் நகரில் நடைபெறுகிறது. ஆண்கள் ஒற்றையர் அரையிறுதி போட்டி ஒன்றில் இந்தியா சார்பில் பங்கேற்ற சென்னையை சேர்ந்த சங்கர் முத்துசாமி, உலக தரவரிசையில் 4வது இடத்தில் உள்ள தாய்லாந்தின் பனிட்சாபோன் தீரரட்சகுலுடன் மோதினார்.
இதில் 21-13, 21-15 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்ற சங்கர் முத்துசாமி தங்கப் பதக்கத்திற்கான இறுதிப் போட்டிக்கு முன்னேறி உள்ளார். இந்த வெற்றியின் மூலம், 2016க்கு பிறகு இறுதிச் சுற்றுக்கு முன்னேறிய முதல் இந்திய பேட்மிண்டன் வீரர் என்ற பெருமையை சங்கர் முத்துசாமி பெற்றார்.
முன்னதாக கடந்த 2008 ஆண்டு நடைபெற்ற ஜூனியர் உலக சாம்பியன்ஷிப் பேட்மிண்டன் மகளிர் ஒற்றையர் பிரிவில் இந்திய வீராங்கனை சாய்னா நேவால் சாம்பியன் பட்டம் வென்றது குறிப்பிடத்தக்கது.






